இந்த போஸ்ட்கள் “இம்ரான் கான் வீட்டில் தாக்கப்பட்டார், மோசமாக தாக்கப்பட்டுள்ளார்” என்று தெரிவிக்கின்றன.
இதே போன்ற வர்ணனணைகள் மற்றும் ட்வீட்டுகள் ட்விட்டர் மற்றும் வாட்சப்பிலும் வலம் வருகின்றன.
இந்த விடியோ 5 வருட பழையதாகும், 2013 பிராச்சரத்தின்போது மேடையிலிருந்து அவர் தவறி விழுந்தபோது எடுத்ததாகும்
டெலிகிராஃப் பத்திரிக்கையும் இந்த விடியோவை 2013 மே மாதம் 7ம் தேதி பதிவேற்றம் செய்து “அரசியல்வாதியாக மாறியுள்ள பாகிஸ்தான் கிரிகெட் ஸ்டார் இம்ரான் கான் ஒரு தேர்தல் பிராச்சாரத்தின் போது பிரச்சார மேடைக்கு அவரை தூக்கி சென்ற லிஃப்டிலிருந்து கீழே தவறி விழுந்ததால் அவரது தலையில் காயம் ஏற்பட்து மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார் என்று அவரது கட்சி தெரிவித்தது” என்று கருத்து கூறி இருந்தது
பாகிஸ்தானின் கார்டியன் செய்தி தாலும் தெரிவித்தது:
“முன்னாள் கிரிக்கெட் கேப்டனும் நாட்டின் பொது தேர்தலில் முன்னணியில் உள்ள ஒரு வேட்பாளரும் ஆன இம்ரான் கான் செவ்வாய் கிழமையன்று தனது பிராச்சாரத்தின் இறுதி கட்ட ஊர்வலம் ஒன்றில் ஹைட்ராலிக் லிஃப்டிலிருந்து விழுந்ததால் மண்டை ஓட்டில் எலும்பு முறிவும் முதுகில் காயமும் ஏற்பட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து செல்லப்பட்டார்
சனிக்கிழமை நடைபெற போகும் தேர்தலுக்காக லாஹூரில் பிரச்சாரம் செய்து கொண்டிருந்தபோது பாகிஸ்தானின் டேஹ்ரீக் – ஈ – இன்சாஃப் கட்சியின் தலைவரான கான், 60,அவர்களை அதிக நெரிசல் நிறைந்த ஒரு மேடையிலிருந்து வெளியே இழுக்கப்பட்டும் அவரது மெய்காப்பாளர்களில் ஒருவர் சற்று நிதானம் இழந்து தவறி பக்கவாட்டில் விழுந்ததால் மேடை சுமார் நான்கு மீட்டர் மேலிருந்து தரையில் சரிந்தது
ஒரு சிறு லிஃப்டினுள் ஐந்து பிற உறுப்பினர்களுடன் கான் திணித்து வைக்கப்பட்திருந்த போது மற்றொரு நபர் அதனுள் கஷ்டப்பட்டு ஏற முன்றார்.
இந்த புகைப்படம் எடுக்கப்பட்ட உண்மையான தருணத்தை பற்றி தி கார்டியன் கட்டுரை விவரிக்கிறது
2013 வருடத்தில் பிராச்சரத்தின்போது இம்ரான் கானுக்கு ஏற்பட்ட ஒரு உண்மை விபத்தின் பழைய விடியோ இது. இதனை சமீபத்தில் நடந்த ஒரு சம்பவமாக திரித்து காண்பிக்கப்படுகிறது. இது ஒரு பொய்யான தகவல் மற்றும் யாரும் தாக்கப்பட்டதாக கூறுவதற்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை