FactCheck: 2013ம் ஆண்டு எடுத்த கும்பமேளா புகைப்படத்தை தற்போது பகிர்வதால் குழப்பம்!

அரசியல் | Politics சமூக ஊடகம் | Social தமிழ்நாடு | Tamilnadu

‘’2021 கும்ப மேளா புகைப்படம், மாஸ்க் முகத்திற்கு அணியாமல் கீழே கோவணம் போல அணிந்த இந்தியர்கள்,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் புகைப்படம் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.

தகவலின் விவரம்:

Facebook Claim LinkArchived Link

இதில், Simi Garewal என்பவர் வெளியிட்ட ட்வீட்டை ஸ்கிரின்ஷாட் எடுத்து, உண்மை போல பகிர்ந்துள்ளனர். இதனைப் பலரும் ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:
2021ம் ஆண்டில் கொரோனா வைரஸ் தொற்று பரவி வரும் சூழலில், சரியான பாதுகாப்பு ஏற்பாடுகள் இன்றி பல ஆயிரக்கணக்கானோர் ஹரித்துவாரில் நிகழ்ந்த கும்ப மேளா நிகழ்வில் பங்கேற்றுள்ளனர். இதனால், பலருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதோடு, அரசியல் ரீதியாகவும் இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை உருவாகியுள்ளது.

IndiaToday News Link The Quint Link 

இதையொட்டி, சியட் டயர்ஸ் நிறுவனத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, கும்ப மேளாவில் இந்தியர்கள் மாஸ்கை முகத்தில் அணியாமல், கீழே அணிந்து பங்கேற்றதால், உலக நாடுகள் மத்தியில் தலைகுனிவு என்று விமர்சித்து பதிவு ஒன்றை ட்விட்டரில் வெளியிட்டிருந்தார்.

இந்த பதிவு பல தரப்பிலும் விமர்சனத்திற்கு ஆளாகியுள்ளது.

Archived Link

இதே பதிவை Simi Garewal என்ற இந்தி நடிகையும் பகிர்ந்திருந்தார். அதனை ஸ்கிரின்ஷாட் எடுத்துத்தான், நாம் ஆய்வு செய்யும் ஃபேஸ்புக் பதிவில் தகவல் வெளியிட்டுள்ளனர்.

ஹர்ஷ் கோயங்கா அல்லது சிமி கார்வால் என 2 பேருமே பகிர்ந்த புகைப்படம், தற்போதைய கும்ப மேளா நிகழ்வுடன் தொடர்புடையது அல்ல. இந்த உண்மை கூட தெரியாமல், அவர்களை போன்று பலரும் ட்விட்டர், ஃபேஸ்புக், வாட்ஸ்ஆப் என சமூக வலைதளங்களில் குறிப்பிட்ட புகைப்படத்தை வைரலாக ஷேர் செய்து வருகின்றனர். இது 2013ம் ஆண்டில் நிகழ்ந்த கும்ப மேளா நிகழ்வுடன் தொடர்புடையதாகும். தற்போது அல்ல.

Remotelands.com Link I Jaytindall.asia Link

இதுபற்றி ஏற்கனவே நாம் தமிழ் மற்றும் மலையாளம் மொழிகளில் செய்தி வெளியிட்டிருக்கிறோம். அதன் லிங்க் கீழே தரப்பட்டுள்ளது.

Fact Crescendo Malayalam Story Link

Fact Crescendo Tamil Story Link

எனவே, பழைய புகைப்படத்தை எடுத்து, தற்போதைய கும்ப மேளா நிகழ்வுடன் தொடர்புபடுத்தி, கேலி செய்யும் நோக்கில் ஹர்ஷ் கோயங்கா, சிமி கார்வால் போன்ற நபர்கள் ட்விட்டரில் பகிர்ந்துள்ளனர். பிறகு, அவர்கள் அவற்றை டெலிட் செய்தும் விட்டனர். ஆனால், அவற்றை மற்ற சாமானிய சமூக வலைதள பயனாளர்கள் உண்மை என்று நம்பி இன்னமும் ஷேர் செய்வதாக, சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் நாம் ஆய்வு மேற்கொண்ட தகவல் தவறானது என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Avatar

Title:2013ம் ஆண்டு எடுத்த கும்பமேளா புகைப்படத்தை தற்போது பகிர்வதால் குழப்பம்!

Fact Check By: Pankaj Iyer 

Result: False