இந்த சாமியார்கள் ராமர் கோயில் பூமி பூஜையில் பங்கேற்கவில்லை; முழு விவரம் இதோ!

அரசியல் சமூக ஊடகம்

‘’ராமர் கோயில் பூமி பூஜையில் சமூக இடைவெளியின்றி பங்கேற்ற இந்து சாமியார்கள்,’’ என்று கூறி பகிரப்படும் புகைப்படம் ஒன்றை கண்டோம். இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்: 

Facebook Claim LinkArchived Link

ஆகஸ்ட் 10, 2020 அன்று வெளியிடப்பட்ட இந்த பதிவில், இந்து சாமியார்கள் (அந்தணர்கள்) கூட்டமாக அமர்ந்திருக்கும் புகைப்படத்தை இணைத்து, அதன் மேலே, ‘’ நேற்று அயோத்தியில் ராமர் கோயில் பூஜைக்காக #குண்டியில்_மாஸ்க் #அணிந்து_வந்த_சாமிகள்_கூட்டம் , அரசின் ஆணைகேற்ப Covin 19 சமூகஇடைவெளி கடைபிடிக்க தவறிய வானரங்கள் கூட்டம், 21,ஆம் நூற்றாண்டில் இப்படியும் ஒரு பகுத்தறிவற்ற கூட்டம் , பாசிச பிடியில் இந்தியாவின் மானம் கப்பலேறுகிறது.,’’ என்று எழுதியுள்ளனர்.

இதனை பலரும் உண்மை என நம்பி ஷேர் செய்வதைக் காண முடிகிறது.

உண்மை அறிவோம்:
மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில் கூறியுள்ளது போல, ராமர் கோயில் பூஜை (பூமி பூஜை) தற்போது நடைபெறவில்லை. அது, ஆகஸ்ட் 5ம் தேதி நடைபெற்றதாகும். பிரதமர் மோடி தலைமையில் அந்த பூஜை நடைபெற்றது. இதுபற்றி ஊடகங்களிலும் செய்தி வெளியாகியுள்ளது.

தற்போது கோயில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், ஆகஸ்ட் 10ம் தேதி வெளியான நாம் ஆய்வு செய்யும் ஃபேஸ்புக் பதிவில், ‘’நேற்று அயோத்தியில் ராமர் கோயில் பூஜை,’’ என்று எதைக் குறிப்பிடுகிறார் என தெரியவில்லை. 

மேலும், கொரோனா ஊரடங்கு அமலில் உள்ள காலத்தில் இப்படி சாமியார்கள் கூட்டமாக, ராமர் கோயில் கட்டும் இடத்தைப் பார்க்க நேரில் வந்தார்களா என்பது சந்தேகமாக உள்ளது. எனவே, இந்த புகைப்படம் எப்போது எடுக்கப்பட்டது என விவரம் தேடினோம்.

அப்போது, இது 2013ம் ஆண்டில் நடைபெற்ற கும்ப மேளா நிகழ்வின்போது எடுக்கப்பட்ட புகைப்படம் என விவரம் கிடைத்தது.

இதனை எடுத்தவர் Thorge Berger என்ற புகைப்படக் கலைஞர் ஆவார். அவரே இதனை இணையதளம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளார். 

121clicks.com Link Archived Link 

எனவே, 2013ம் ஆண்டு கும்ப மேளா நிகழ்வின் போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை, தற்போதைய ராமர் கோயில் கட்டுமானப் பணிகளுடன் தொடர்புபடுத்தி தவறான தகவல் பகிர்ந்துள்ளனர் என்று சந்தேகமின்றி தெளிவாகிறது.

முடிவு:
உரிய ஆதாரங்களின்படி நாம் ஆய்வு மேற்கொண்ட ஃபேஸ்புக் பதிவில், தவறான தகவல் உள்ளதாக நிரூபித்துள்ளோம். நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை பார்த்தால், 9049044263 என்ற வாட்ஸ் ஆப் எண்ணிற்கு தகவல் தெரிவியுங்கள்.

Avatar

Title:இந்த சாமியார்கள் ராமர் கோயில் பூமி பூஜையில் பங்கேற்கவில்லை; முழு விவரம் இதோ!

Fact Check By: Pankaj Iyer 

Result: False