திராவிட ஆட்சியில் போலீஸ் நிலை என்று பரவும் வீடியோ தற்போது எடுக்கப்பட்டதா?

அரசியல் | Politics அரசியல் சார்ந்தவை | Political சமூக ஊடகம் | Social தமிழ்நாடு | Tamilnadu

திமுக ஆட்சியில் காவலர் தாக்கப்பட்டதாக ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

காவலர் ஒருவரை இளைஞர் தாக்கும் வீடியோ ஃபேஸ்புக்கில் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், ” திராவிட அரசால் தமிழகம் அழிந்து கொண்டு உள்ளது. போலீஸ்னா ஒரு பயம் இருக்கணும். இப்படி கண்ட நாயெல்லாம் சீருடை அணிந்த காவலர் மீது கைவைக்க துணிந்தவர் அதிகரித்த காரணத்தால்தான் இன்று தமிழ்நாடு கொலைகளமாக மாறியுள்ளது என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்திருக்க வாய்ப்புகள் மிகக் குறைவு..காவல்துறை தலை நிமிர வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த பதிவை பலரும் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

திராவிட அரசால் தமிழகம் அழிந்து கொண்டிருக்கிறது, காவல் துறை மீது தாக்குதல் நடந்துள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. திராவிட அரசாங்கம் என்பது தி.மு.க ஆட்சியை விமர்சிக்கும் பயன்படுத்தும் சொல். திராவிடக் கட்சிகள் என்று திமுக, அதிமுக என இரண்டையும் குறிப்பிட்டாலும் திராவிட அரசு என்பது தி.மு.க-வை மட்டுமே குறிக்கும் என்பதால் இந்த சம்பவம் இப்போது நடந்தது என்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்துகிறது.

சிலர் திராவிட அரசு என்று குறிப்பிடாமல் இது போன்ற தாக்குதலால் தான் இன்று தமிழ்நாடு கொலைக்களமாக்க மாறியுள்ளது என்று இந்த சம்பவம் இப்போது நடந்தது போன்று பதிவிட்டு வருகின்றனர். இந்த சம்பவம் எங்கு எப்போது நடந்தது என்று அறிய ஆய்வு செய்தோம்.

https://twitter.com/VibinRaj_0224/status/944911949074120704

இந்த வீடியோவை புகைப்படங்களாக மாற்றி கூகுள் லென்ஸ் தளத்தில் பதிவேற்றித் தேடினோம். அப்போது இந்த வீடியோவை சில எக்ஸ தள பனாளர்கள் 2019ம் ஆண்டு பதிவிட்டிருப்பதை காண முடிந்தது. VibinRaj_0224 என்ற ஐடி கொண்டவர் இந்த வீடியோவை 2017ம் ஆண்டு டிசம்பர் 24ம் தேதி எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார். அதில், “விடுதலை சிறுத்தை கட்சி தொண்டரின்  அட்டகாசம்..😡 தமிழகத்தில் காவல்துறையினருக்கே பாதுகாப்பு இல்லை ….  ஒரு காவலரை கை நீட்டி அடிக்கும் அளவுக்கு 

@thirumaofficial  ரவுடி தொண்டர்கள் தமிழகத்தில் … தமிழக அரசு இவன் மீது நடவடிக்கை எடுக்குமா  @CMOTamilNadu  @OfficeOfOPS” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதன் மூலம் இந்த சம்பவம் திமுக ஆட்சியில் நடந்தது இல்லை என்பது தெளிவானது.

உண்மைப் பதிவைக் காண: oneindia.com I Archive

தொடர்ந்து தேடிய போது இந்த வீடியோவுடன் ஒன் இந்தியா ஆங்கிலத்தில் 2019 டிசம்பர் 17ல் செய்தி வெளியிட்டிருப்பது தெரிந்தது. அதில், சாலை போக்குவரத்து விதி மீறலில் ஈடுபட்டவரை தடுத்த போலீஸ் தாக்கப்பட்டார் சென்னை ஜாபர்கான்பேட்டையில் இந்த சம்பவம் நடந்தது என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதன் மூலம் இந்த சம்பவம் 2024ல் திமுக ஆட்சியில் நடந்தது இல்லை என்பது உறுதியாகிறது. 

2017ம் ஆண்டு காவலர் ஒருவர் தாக்கப்பட்ட வீடியோவை எடுத்து, இப்போது நடந்தது போன்று பகிர்ந்திருப்பது நம்முடைய ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் இந்த பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

திமுக ஆட்சியில் காவலர்களுக்கு கூட பாதுகாப்பு இல்லை என்று பரவும் வீடியோ 2017ம் ஆண்டு எடுக்கப்பட்டது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:திராவிட ஆட்சியில் போலீஸ் நிலை என்று பரவும் வீடியோ தற்போது எடுக்கப்பட்டதா?

Written By: Chendur Pandian 

Result: False

Leave a Reply