பனாரஸ் மெட்ரோ ரயில் நிலையம் என்று பகிரப்படும் புகைப்படம் உண்மையா? 

‘’ பனாரஸ் மெட்ரோ ரயில் நிலையம்’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு புகைப்படம் பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049044263 & +919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ இது #கோயில் கிடையாதுங்க! #பனாரஸ்  #மெட்ரோ நிலையம்🔥,’’ என்று எழுதப்பட்டுள்ளது.   பலரும் இதனை உண்மை என நம்பி ஷேர் செய்து வருகின்றனர்.   உண்மை அறிவோம்: குறிப்பிட்ட படத்தை கூகுள் உதவியுடன் நாம் […]

Continue Reading

‘கட்சியின் பெயர் கூட தெரியாதவர் எடப்பாடி பழனிசாமி’ என்று செல்லூர் ராஜூ கூறினாரா?

கட்சியின் பெயர், கொள்கை கூட தெரியாத சாதாரணத் தொண்டன் கூட அதிமுக-வில் தலைவர் ஆகலாம் என்பதற்கு எடப்பாடி பழனிசாமி உதாரணம் என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியதாக சிலர் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Twitter I Archive அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ புகைப்படத்துடன் புதிய தலைமுறை வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “கட்சியின் பெயரோ கொள்கையோ […]

Continue Reading

‘அண்ணாமலை உண்மை பேசும் வரை’ என்று ஏதேனும் கடையில் அறிவிப்புப் பலகை வைக்கப்பட்டதா?

அண்ணாமலை உண்மை பேசும் வரை கடன் கிடையாது என்று கடையில் அறிவிப்புப் பலகை வைக்கப்பட்டதாக புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive கடை ஒன்றில் “அண்ணாமலை உண்மை பேசும் வரை கடன் கிடையாது” என்று அறிவிப்புப் பலகை வைக்கப்பட்டது போன்று புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு 2023 அக்டோபர் 25ம் தேதி ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டிருந்தது. உண்மை அறிவோம்: […]

Continue Reading

நாடாளுமன்றத் தேர்தல்: பா.ஜ.க வேட்பாளர் தேர்வில் மோதல் என்று பரவும் பழைய வீடியோ!

உத்தரப்பிரதேசத்தில் வருகிற நாடாளுமன்றத் தேர்தலையொட்டி நடைபெற்ற வேட்பாளர் தேர்வு ஆலோசனைக் கூட்டத்தில் பாஜக எம்.பி-யும் எம்.எல்.ஏ-வும் செருப்பால் அடித்துக்கொண்டனர் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive உத்தரப்பிரதேசத்தில் பா.ஜ.க நிர்வாகிகள் செருப்பால் அடித்துக்கொண்ட பழைய வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “உத்தரப்பிரதேசத்தில் வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான பாஜக வேட்பாளர்கள் தேர்வுசெய்யும் ஆலோசனைக் கூட்டத்தில் தகராறு ஏற்பட்டு பாஜக […]

Continue Reading