சினூக் ஹெலிகாப்டர் உதவியுடன் ஜேசிபி இயந்திரம் உத்தரகாண்ட் எடுத்துச் செல்லப்பட்டதா?

Altered சமூக ஊடகம் | Social தமிழ்நாடு | Tamilnadu

‘’சினூக் ஹெலிகாப்டர் உதவியுடன் உத்தரகாண்ட் எடுத்துச் செல்லப்பட்ட ஜேசிபி இயந்திரம்,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு புகைப்படம் பற்றி ஆய்வு மேற்கொண்டோம். 

தகவலின் விவரம்:

இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். 

இதில், ‘’ ஆமாம், இந்தப் புகைப்படம் உண்மைதான். உத்தரகாண்டில் மேக வெடிப்பு சம்பவத்தில் தாரளி கிராமம் தொடர்பு இல்லாததாக மாறியது. சாலைகள் அடைக்கப்பட்டதால், நிவாரணப் பணிகளைத் தொடங்கத் தேவையான ஜேசிபியை சாலையில் இருந்து எடுக்க முடியவில்லை, எனவே “முழு ஜேசிபி ஆம் முழு ஜேசிபி” சினூக் ஹெலிகாப்டரில் இணைக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

இது மாறிவரும் இந்தியா, புதிய இந்தியா, வலுவான இந்தியா மற்றும் நவீன இந்தியா…

வாழ்க இந்தியா!. 🚩🇮🇳,’’ என்று எழுதப்பட்டுள்ளது. 

இதனுடன் ஹெலிகாப்டர் ஒன்றில் ஜேசிபி இயந்திரம் எடுத்துச் செல்வது போன்ற புகைப்படம் ஒன்றும் இணைக்கப்பட்டுள்ளது.   

Claim Link   

பலரும் இதனை உண்மை என நம்பி, சமூக வலைதளங்களில் ஷேர், கமெண்ட் செய்வதைக் காண முடிகிறது. 

உண்மை அறிவோம்:

மேற்கண்ட தகவல் உண்மையா என்று நாம் ஆய்வு மேற்கொண்டோம். அப்போது, இருவேறு புகைப்படங்களை ஒன்றிணைத்து, எடிட் செய்து, இவ்வாறு வதந்தி பரப்புகிறார்கள் என்று தெரியவந்தது. 

இதன்படி, ஊடகங்களில் ஏற்கனவே வெளிவந்த புகைப்படங்களை எடுத்து, இவ்வாறு எடிட் செய்து வதந்தி பரப்புகிறார்கள், என்று தெளிவாகிறது. 

கூடுதல் செய்தி ஆதாரம் இதோ…

Hindustan Times l Rediff l Zee News l Jetphotos

அடுத்ததாக, Uttarakhand Police சார்பாக, குறிப்பிட்ட புகைப்படம் உண்மையானதல்ல, என்று ஏற்கனவே மறுப்பு கூறப்பட்டுள்ளதையும், இங்கே சுட்டிக்காட்ட விரும்புகிறோம். 

இறுதியாக, நமது Fact Crescendo English குழு இதுபற்றி வெளியிட்ட ஃபேக்ட்செக் கட்டுரையையும் இங்கே இணைத்துள்ளோம். 

எனவே, நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட புகைப்படம், எடிட் செய்யப்பட்டதுதான், என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது. 

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம். 

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter Page I Google News Channel I Instagram 

Avatar

Title:சினூக் ஹெலிகாப்டர் உதவியுடன் ஜேசிபி இயந்திரம் உத்தரகாண்ட் எடுத்துச் செல்லப்பட்டதா?

Fact Check By: Pankaj Iyer 

Result: Altered

Leave a Reply