ஜான் சீனா தேவர் சமுதாயத்தை சேர்ந்தவர் என்று பரவும் புகைப்படம் உண்மையா?

Altered Sports

‘’ஜான் சீனா தேவர் சமுதாயத்தை சேர்ந்தவர்,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு புகைப்படம் பற்றி ஆய்வு மேற்கொண்டோம். 

தகவலின் விவரம்:

இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். 

இதில், ‘’#wwe champion johncena தேவர் சமூதாயத்தை சேர்ந்தவர் என்பது எத்தனை பேருக்கு தெரியும் 🔥💥’’ என்று எழுதப்பட்டுள்ளது. இதனுடன், புகைப்படம் ஒன்றும் இணைக்கப்பட்டுள்ளது. 

Claim Link 1 l Claim Link 2 l Claim Link 3

பலரும் இதனை உண்மை என நம்பி, சமூக வலைதளங்களில் ஷேர், கமெண்ட் செய்து வருகின்றனர். 

உண்மை அறிவோம்:

மேற்கண்ட புகைப்படம் உண்மையா என்று நாம் ஆய்வு மேற்கொண்டோம். அப்போது, இது எடிட் செய்யப்பட்ட படம் என்று தெரியவந்தது. 

KAYA Jewelers Newburyport FB Post

இதன்படி, John Cena கடந்த 2022ம் ஆண்டு மே மாதம் அவரது சொந்த ஊரான West Newbury, Massachusetts சென்றபோது, அங்குள்ள KAYA Jewelers Newburyport என்ற கடைக்கு சென்று, ஷாப்பிங் செய்துள்ளார். அப்போது எடுத்த புகைப்படத்தை எடிட் செய்து, தற்போது வேண்டுமென்றே வதந்தி பரப்புகிறார்கள், என்று தெளிவாகிறது. 

எனவே, நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட புகைப்படம் எடிட் செய்யப்பட்ட ஒன்று, என சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது. 

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம். 

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter PageI Google News Channel I Instagram

Avatar

Title:ஜான் சீனா தேவர் சமுதாயத்தை சேர்ந்தவர் என்று பரவும் புகைப்படம் உண்மையா?

Written By: Pankaj Iyer  

Result: Altered