கருணாநிதி நூற்றாண்டு விழாவில் பங்கேற்கும் நடிகர்களை மிரட்டினாரா அண்ணாமலை?

அரசியல் | Politics சமூக ஊடகம் | Social தமிழ்நாடு | Tamilnadu

‘’ கருணாநிதி நூற்றாண்டு விழாவில் பங்கேற்கும் நடிகர்களுக்கு அண்ணாமலை எச்சரிக்கை,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம். 

தகவலின் விவரம்:

இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். 

இதில், ‘’ கருணாநிதி நூற்றாண்டு விழாவில் பங்கேற்கும் நடிகர்களை வருமான வரி மற்றும் அமலாக்கத்துறை அலுவலகங்களின் வாசலில் பேட்டி எடுக்க தயாராக இருங்கள் – தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை,’’ என்று எழுதப்பட்டுள்ளது. 

மேற்கண்ட நியூஸ் கார்டு ஜூனியர் விகடன் லோகோவுடன் உள்ளதால் பலரும் இதனை உண்மை என நம்பி, ஷேர் செய்து வருகின்றனர்.  

உண்மை அறிவோம்:

தமிழ் திரையுலகம் சார்பில் தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட உள்ளது. ‘கலைஞர் 100’ என்ற பெயரில் 2023, டிசம்பர் 24-ம் தேதியன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இந்த விழாவை நடத்த திட்டமிட்டிருந்தனர். 

இந்நிலையில், சென்னை மாநகர் மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் சமீபத்தில் ஏற்பட்ட மழை, வெள்ள பாதிப்பு காரணமாக, இந்த விழாவை தள்ளி வைப்பதாக, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.  

Hindu Tamil Link l Dinamalar Link 

இதற்கிடையே மேற்கண்ட நிகழ்ச்சியில் பங்கேற்கும் நடிகர்கள் வருமான வரித் துறை மற்றும் அமலாக்கத்துறை பிடியில் சிக்குவார்கள் என்ற அர்த்தத்தில் பாஜக தமிழ்நாடு தலைவர் அண்ணாமலை எச்சரித்துள்ளதாக, சிலர் தகவல் பரப்புகின்றனர். 

ஆனால், இதுபற்றி நாம் பாஜக ஐ.டி. பிரிவு தரப்பில் கேட்டபோது, இவ்வாறு அண்ணாமலை எங்கேயும் பேசவில்லை என்று மறுத்தனர். 

இதேபோன்று, ஜூனியர் விகடன் ஊடகம் தரப்பிலும் மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. 

எனவே, அண்ணாமலை பெயரில் மேற்கண்ட வகையில் யாரோ வேண்டுமென்றே போலியான செய்தியை தயாரித்து, வதந்தி பரப்பியுள்ளனர், என்று உறுதி செய்யப்படுகிறது. 

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம். 

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter PageI Google News Channel I Instagram 

Avatar

Title:கருணாநிதி நூற்றாண்டு விழாவில் பங்கேற்கும் நடிகர்களை மிரட்டினாரா அண்ணாமலை?

Written By: Fact Crescendo Team 

Result: False