Archives

ஆரவல்லி மலையைக் காக்க போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் என்று பரவும் வீடியோ உண்மையா?

ஆரவல்லி மலைத் தொடரைக் காக்கப் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive ஆயிரக்கணக்கான மக்கள் பேரணியாக செல்லும் நிகழ்வின் வீடியோ ஃபேஸ்புக்கில் பகிரப்பட்டுள்ளது. வீடியோவில் ஆங்கிலத்தில் SAVE SRAVALLI என்று எழுதப்பட்டிருந்தது. நிலைத் தகவலில், “ஆரவல்லி மலைகளை பாதுகாக்க போராட்டத்தை மக்கள் ஆரம்பித்துள்ளனர். இந்த அளவு கொடுமை பிரிட்டிஷ்காரன் கூட செய்யல […]

Continue Reading

‘சொம்பு தூக்கும் தமிழ்நாட்டின் மாப்பிள்ளை சார்’ என்று பரவும் புகைப்படம் உண்மையா?

‘‘சொம்பு தூக்கும் தமிழ்நாட்டின் மாப்பிள்ளை சார்,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு புகைப்படம் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ எங்கோ ஒரு மூளையில் பகுத்தறிவு வகுப்பு நடந்துகொண்டிருக்கும் வேளையில் எங்கோ எவனோ பார்ப்பணியத்திற்கு சொம்பு தூக்கிக்கொண்டு இருப்பான்… 🤭 யாருங்க அது சொம்பு தூக்கறது? இவரை தெரியாதா? இவர் தான் தமிழ்நாட்டின் எலான் […]

Continue Reading

“மலேசியாவில் திரிஷா” என்று பரவும் புகைப்படங்கள் – உண்மையா?

ஜனநாயகன் பட இசைவௌியீட்டு விழா மலேசியாவில் நடைபெறும் சூழலில் அதில் பங்கேற்க நடிகை திரிஷாவும் சென்றது போன்று புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive நடிகை திரிஷா ரசிகர்கள் முன்னிலையில் செல்ஃபி எடுத்துக்கொண்ட புகைப்படம் ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத்தகவலில், “மலேசியாவில் அண்ணியார் ….” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.  உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive அதே போன்று புகைப்படத்திற்கு […]

Continue Reading

அமெரிக்காவில் தேவாலயத்தை சேதப்படுத்திய ஆர்எஸ்எஸ் தொண்டர் என்று பரவும் வீடியோ உண்மையா?

அமெரிக்காவில் கிறிஸ்தவ தேவாலயத்தை சேதப்படுத்திய ஆர்.எஸ்.எஸ் தொண்டர் என்று குறிப்பிட்டு ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive கிறிஸ்தவ தேவாலயத்தின் பலிபீடத்தின் மீது ஏறி அங்கிருக்கும் பொருட்களை ஒருவர் கீழே தள்ளும்போது, அவரை காவல் துறையினர் பிடிக்கும் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “அமெரிக்காவில் உள்ள தேவாலயத்தில் இந்தியாவைச் சேர்ந்த ஆர்எஸ்எஸ் சங்கிஅமைப்பை சேர்ந்தவன் தேவாலயத்தில் […]

Continue Reading

வங்கதேசத்தில் எரித்துக் கொல்லப்பட்ட தீபு சந்திரதாஸ் என்று பரவும் வீடியோ உண்மையா?

வங்கதேசத்தில் மத வெறியர்களால் எரித்து கொலை செய்யப்பட்ட இந்து இளைஞர் தீபு சந்திரதாஸின் கடைசி நிமிடங்கள் என்று குறிப்பிட்டு வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive இளைஞர் ஒருவரை போலீசார் அழைத்து செல்லும் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “இந்துக்கள் #சிறுபான்மையானால்  😭😭😭😭 தமிழகத்தில் காசாவுக்காக பொங்கிய ஒரு அரசியல்வாதி இதை கண்டிப்பார்களா பங்களாதேஷ் மத […]

Continue Reading

ரயிலில் டிக்கெட் எடுக்காமல் ஏறிய சிறுமியை டிடிஆர் பலாத்காரம் செய்தாரா?

‘‘ரயிலில் டிக்கெட் எடுக்காமல் ஏறிய சிறுமியை பலாத்காரம் செய்த டிடிஆர்,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ ரயிலில் டிக்கெட் எடுக்காமல் ஏறிய சிறுமியை கற்பழித்தார் சனாதன முறைப்படி இந்தியாவை ஆட்சி செய்யும் பாஜக ஒன்றிய அரசு TTR. ரயிலில் டிக்கெட் எடுக்காமல் ஏறுபவர்களுக்கு இந்த புதுவித […]

Continue Reading

திமுக கூட்டணி கட்சிகளின் தொகுதி பங்கீடு என்று பரவும் நியூஸ் கார்டு உண்மையா?

‘‘திமுக கூட்டணி கட்சிகளின் தொகுதி பங்கீடு விவரம்,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ தி.மு.க கூட்டணி கட்சிகள் விவரம். திமுக 184, காங். 15, வி.சி.க 10, ம.தி.மு.க 3, இந்திய கம்யூ., 3, மா.கம்யூ., 3, ஐ.யூ.எம்.எல் 1, ம.ம.க 1, த.வா.க 1, […]

Continue Reading

‘திமுக ஒரு தீய சக்தி’ என்று திருமாவளவன் கூறினாரா?

‘‘திமுக ஒரு தீய சக்தி,’’ என்று திருமாவளவன் கூறியதாக, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ திமுக ஒரு தீய சக்தி.. தீய சக்தி.. தீய சக்தி.. திருமாவளவன் ஆவேசம்,’’ என்று எழுதப்பட்டுள்ளது. திருமாவளவன் பேசும் வீடியோ ஒன்றும் இதனுடன் இணைத்துள்ளனர்.  Claim Link   பலரும் இதனை உண்மை […]

Continue Reading

தவெக.,வில் இணைந்த மாதேஷ் என்று பரவும் புகைப்படம் உண்மையா?

‘‘தவெக.,வில் இணைந்த மாதேஷ்,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு புகைப்படம் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ ஒரு முடிவோடத்தான் இருக்காங்க போல,’’ என்று எழுதப்பட்டுள்ளது.  Claim Link   பலரும் இதனை உண்மை என நம்பி, சமூக வலைதளங்களில் ஷேர், கமெண்ட் செய்வதைக் காண முடிகிறது. உண்மை அறிவோம்: மேற்கண்ட படம் உண்மையா […]

Continue Reading

தி.மு.க ஆட்சியில் அமைக்கப்பட்ட மின்சாரக் கம்பியால் அழிந்த பனை மரங்கள் என்று பரவும் வீடியோ உண்மையா?

தி.மு.க ஆட்சியில் அமைக்கப்பட்ட மின் கம்பங்கள் காரணமாக வழியிலிருந்த பனை மரங்கள் அழிந்ததாக ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive மின் கம்பிகள் உராசியதால் பனை மரங்கள் பட்டுபோய் இருக்கும் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “இது தான் திராவிட மாடல் ஆட்சி… ஏன் அந்த கரண்ட் லைன்ன மாற்றி அமைக்கலாமே.. இவர்கள் தான் அறிவு திருவிழா […]

Continue Reading

திமுக வந்ததால் தமிழக மக்கள் பிராமணர்கள் காலில் விழுவதை நிறுத்திவிட்டனர் என்று குருமூர்த்தி கூறினாரா?

‘‘திமுக வந்ததால் தமிழக மக்கள் பிராமணர்கள் காலில் விழுவதை நிறுத்திவிட்டனர்,’’ என்று துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி கூறியதாக, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ அழிந்துபோன பிராமணர்கள் மரியாதைதிமுக ஆட்சிக்கு வருவதற்கு முன் பிராமணர்கள் மீது அனைவரும் மரியாதை வைத்து இருந்தார்கள். ஆனால் 1967-ல் திமுக ஆட்சிக்கு வந்தபின் பிராமணர்கள் […]

Continue Reading

மரத்தின் மீது காரை நிறுத்திய தவெக தொண்டர் என்று பரவும் வீடியோ உண்மையா?

ஈரோடு பொதுக் கூட்டத்திற்கு வந்த தவெக தொண்டர் ஒருவர் தன்னுடைய காரை தவறுதலாக மரத்தின் மீது ஏற்றியதாக ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive கார் ஒன்று மரத்தின் கிளைகளில் சிக்கி நிறுத்தப்பட்டிருக்கும் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “தவெக தொண்டர்கள் தனியாதானே மரத்தின் மேல் ஏறக்கூடாது காரோட ஏறலாம்ல… ஈரோடு பொதுக்கூட்டத்தில்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த […]

Continue Reading

காங்கிரஸ் கட்சிக்கு கூடிய கூட்டம் என்று பரவும் புகைப்படம் உண்மையா?

டெல்லியில் வாக்கு திருட்டுக்கு எதிராக கண்டன காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்ட சூழலில், காங்கிரஸ் கட்சிக்கு கூடிய கூட்டம் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive மைதானம் முழுக்க மக்கள் கூடியிருக்கும் புகைப்படம் ஒன்று ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “காங்கிரஸ் எங்கே… காங்கிரஸ் இனி அவ்வளவு தான்… காங்கிரஸ் இல்லாத இந்தியா… என்று […]

Continue Reading

திமுக இளைஞரணி மாநாட்டில் குவாட்டர் பாட்டில் விநியோகிக்கப்பட்டதா?

‘‘திமுக இளைஞரணி மாநாட்டில் குவாட்டர் பாட்டில் விநியோகிக்கப்பட்டது,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ குவாட்டர் பாட்டில்.! திமுக இளைஞரணி மாநாட்டில் ஒவ்வொரு இருக்கையிலும் ”Quarter Bottle” வைத்து இளைஞர்களை தவறாக வழிநடத்தும் திமுகவினர்,’’ என்று எழுதப்பட்டுள்ளது.  Claim Link   பலரும் இதனை உண்மை என […]

Continue Reading

‘விஜய் பேசியது அரசியல் அறிவின்மையின் வெளிப்பாடு’ என்று ரங்கசாமி கண்டனம் தெரிவித்தாரா?

‘‘விஜய் பேசியது அரசியல் அறிவின்மையின் வெளிப்பாடு,’’ என்று ரங்கசாமி கூறியதாக, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ புதுச்சேரியில் தம்பி விஜய் பேசியது அரசியல் அறிவின்மையின் வெளிபாடுதான் அவருக்கு சரியான வழிகாட்டி இல்லை, மேலும் ங்கள் மாநிலத்தை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம்உங்கள் அரசியல் நாடகத்தை தமிழ்நாட்டோடு வைத்துகொள்ளுங்கள்.- புதுச்சேரி முதலமைச்சர் N.ரங்கசாமி’’ […]

Continue Reading

பகவத் கீதையை வாசிக்கும் புதின் என்று பரவும் புகைப்படம் உண்மையா?

விமானத்தில் பகவத் கீதையை வாசிக்கும் ரஷ்ய அதிபர் புதின் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: இந்திய பிரதமர் நரேந்திர மோடி பரிசாக வழங்கிய ரஷ்ய மொழிபெயர்ப்பு பகவத்கீதை புத்தகத்தை ரஷ்ய அதிபர் புதின் வாசிப்பது போன்ற புகைப்படம் ஒன்று ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில். “பிரதமர் மோடியால் வழங்கப்பட்ட அன்பான பரிசான ‘ஸ்ரீமத் பகவத் கீதை’ நூலை, அதிபர் புதின் வாசித்துக்கொண்டிருக்கும் காட்சி” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த பதிவை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். உண்மை அறிவோம்: இந்தியா வந்திருந்த […]

Continue Reading

விஜய் ஒரு தற்குறி என்று நாஞ்சில் சம்பத் கூறினாரா?

‘‘விஜய் ஒரு தற்குறி,’’ என்று நாஞ்சில் சம்பத் கூறியதாக, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ விஜய் ஒரு தற்குறி – தவக்களை, பொறம்போக்கு – நாஞ்சில் சம்பத்’’ என்று எழுதப்பட்டுள்ளது.  Claim Link 1 l Claim Link 2         பலரும் இதனை […]

Continue Reading

“தி.மு.க-வில் இணைந்த கமல்ஹாசன்” என்று பரவும் புகைப்படம் உண்மையா?

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமலஹாசன், தி.மு.க-வில் இணைந்தார் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பூங்கொத்து அளிக்கும் புகைப்படம் ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத்தகவலில், “விஜயின் புலி பட கதாநாயகி ஸ்ருதிஹாசனின் தந்தை கமலஹாசன் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்…” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த […]

Continue Reading

பாஜக ஆட்சியில் ஆம்புலன்சில் இருந்து நோயாளி கீழே விழுந்ததாகப் பரவும் வீடியோ உண்மையா?

உத்தரப்பிரதேசம் யமுனா விரைவு சாலையில் ஆம்புலன்சில் இருந்து நோயாளி கீழே ஸ்டிரெச்சருடன் கீழே விழுந்ததாக ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive நெடுஞ்சாலையில் வேகமாக சென்று கொண்டிருக்கும் ஆம்புலன்ஸ் வாகனத்திலிருந்து ஸ்டிரெச்சரில் நோயாளி கீழே சாலையில் விழுவது போன்று வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “யமுனா விரைவு சாலையில் . . . . . […]

Continue Reading

மோடி ஆட்சியில் விமானத்தில் செல்ல காத்திருக்கும் மக்கள் என்று பரவும் புகைப்படம் உண்மையா?

‘‘மோடி ஆட்சியில் விமானத்தில் செல்ல காத்திருக்கும் மக்கள்,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு புகைப்படம் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ டவுன் பஸ்சுக்கு காத்திருப்பது போல் மக்கள் விமானத்தில் செல்ல காத்திருக்கிறார்கள்🤦 மோடி ஆட்சியின் சாதனை😡,’’ என்று எழுதப்பட்டுள்ளது.  Claim Link 1 l Claim Link 2       […]

Continue Reading

“தி.மு.க ஆட்சியல் கோவிலுக்கு வந்தவர்களைத் தாக்கிய போலீஸ்” – என்று பரவும் வீடியோ உண்மையா?

தி.மு.க ஆட்சியில் கோவிலுக்கு வந்தவர்களை போலீசார் தாக்கியதாக ஒரு வீடியோ பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive கோவிலில் இருந்த பூசாரி உள்ளிட்டவர்களை வெளியே அழைத்து காவல்துறை அதிகாரி ஒருவர் பிரம்பால் அடிக்கும் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “அடேய் திருட்டு திராவிடியா மவனுங்களா நாசமாத்தான் போகப்போறீங்கடா #கூலிக்குமாரடித்தல் #தேமீடியாஸ்  #இந்துவிரோததிமுக #200உபிஸ் *😡கண்டிக்கிறோம்…* *இதுபோல எங்காவது […]

Continue Reading

ஜப்பான் கடற்கரையில் ஏற்பட்ட நிலநடுக்கம் என்று பரவும் வீடியோ உண்மையா?

ஜப்பான் கடற்கரையில் ஏற்பட்ட 7.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தின் காட்சி என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive நிலநடுக்கம் காரணமாக கட்டிடங்கள் குலுங்கும் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “ஜப்பான் கடற்கரையில் 7.6 ரிக்டர் அதிர்ச்சி – சுனாமி எச்சரிக்கை வெளியானது!” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த பதிவை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். […]

Continue Reading

பணம் கொடுத்து கூட்டம் சேர்க்கும் எடப்பாடி பழனிசாமி என்று பரவும் தகவல் உண்மையா?

‘’பணம் கொடுத்து கூட்டம் சேர்க்கும் எடப்பாடி பழனிசாமி,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ #பட்டுவாடாபஸ் காசுக்கு அழைத்து வரப்படும்  கூட்டம் எடப்பாடி  புலம்புவதை  கரை வேட்டி கட்டிய கட்சிக்காரர்களோடு கலந்து நின்று “கேட்பது போல நடித்து விட்டு” கலைந்து போகிறது.  “பச்சை” ஆம்னி பஸ்ஸை தவிர […]

Continue Reading

மழை வெள்ளம்: சென்னையின் தற்போதைய நிலை என்று பரவும் வீடியோ உண்மையா?

சென்னையின் தற்போதைய நிலை என்று சாலையில் தேங்கி நிற்கும் மழை நீரிலிருந்து இருசக்கர வாகனங்களைத் தூக்கும் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive மழை வெள்ளத்தில் இரு சக்கர வாகனங்கள் மூழ்கி இருக்கும் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “எங்க ஊருக்கு வாங்க சின்னதத்தி வரவேற்கிறார் 🤣 #chennaifloods #dmkmemes” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.  உண்மைப் பதிவைக் காண: […]

Continue Reading

முந்துகிறார் எடப்பாடியார் என்று இந்தியா டுடே கருத்துக் கணிப்பு வெளியிட்டதா?

‘’முந்துகிறார் எடப்பாடியார்,’’ என்று இந்தியா டுடே கருத்துக் கணிப்பு வெளியிட்டதாகக் கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ முந்துகிறார் எடப்பாடியார் இந்தியா டுடே கருத்துக் கணிப்பு அதிமுக : 142 திமுக : 88,’’ என்று எழுதப்பட்டுள்ளது.  Claim Link         பலரும் இதனை உண்மை என நம்பி, […]

Continue Reading

குடியரசு துணைத் தலைவரை பிளாஸ்டிக் நாற்காலியில் அமர வைத்து அவமரியாதை செய்தாரா அமித்ஷா?

தான் சொகுசு குஷன் சோஃபாவில் அமர்ந்துகொண்டு, குடியரசு துணைத் தலைவரை பிளாஸ்டிக் நாற்காலியில் உட்கார வைத்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive அமித்ஷா – ஓ.பன்னீர்செல்வம் சந்திப்பின் போது, அமித்ஷா அருகில் ஓரமாக தற்போதைய குடியரசுத் துணைத் தலைவர் ராதாகிருஷ்ணன் அமர்ந்திருக்கும் புகைப்படம் ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது.  உண்மைப் பதிவைக் […]

Continue Reading

காங்கிரசுடன் அதிருப்தி காரணமாக மோடியை சந்தித்த ஜார்கண்ட் முதல்வர் என்று பரவும் புகைப்படம் – உண்மையா?

காங்கிரஸ் கட்சியுடன் ஏற்பட்ட அதிருப்தி காரணமாக தனது மனைவியுடன் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்த ஜார்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive ஜார்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் தன் மனைவியுடன் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்த புகைப்படம் ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “#ஜார்கண்டில் காங்கிரஸ் கட்சியுடன் அதிருப்தியில் இருக்கும் […]

Continue Reading

“பாஜக-வின் கலவர சூழ்ச்சியை கண்டிக்காத தலைவர்கள்” என்று பரவும் நியூஸ் கார்டு உண்மையா?

திருப்பரங்குன்றத்தில் பாஜக மற்றும் இந்து முன்னணியின் செயல்பாட்டைக் கண்டிக்காத தலைவர்கள் என்று புதிய தலைமுறை நியூஸ் கார்டு ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive விஜய், அன்புமணி, டிடிவி தினகரன், எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் புகைப்படங்களுடன் புதிய தலைமுறை வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “வாய் திறக்காதவர்கள்! திருப்பரங்குன்றத்தில் பா.ஜ.க மற்றும் […]

Continue Reading

“ரூ.4000 கோடி செலவு செய்தும் சென்னை சாலைகளில் வெள்ளம்” என்று பரவும் புகைப்படம் உண்மையா?

ரூ.4000ம் கோடி செலவு செய்தும் சென்னையில் மழை வெள்ளம் ஏற்பட்டுள்ளது. ரூ.4000ம் கோடி என்னாச்சு என்று கேட்டு ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive சாலையில் வெள்ள நீரில் வாகனங்கள் பயணிக்கும் புகைப்படம் ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “இது இந்தோனேஷியா அருகில் இருக்கும் புற மாநகர் பகுதி… இத யாருக்கெட்டாலும் நான் அப்புடித்தான் சொல்றேன்.. 🖤❤️ #4000கோடி_என்னாச்சு” […]

Continue Reading

“சென்னையின் சிங்கார கோலம்” என்று பரவும் மழை வெள்ள வீடியோ உண்மையா?

சென்னையின் சிங்கார கோலம் என்று சாலையில் மழை நீர் தேங்கியிருக்கும் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடார்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive சாலையில் மழை வெள்ளம் போல் தேங்கியிருக்க, அதில் வாகனம் ஓட்டிச் செல்லும் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “தமிழ்நாட்டின் தலைநகரம் சென்னையின் சிங்காரகோலம்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வீடியோவை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். உண்மை […]

Continue Reading

விழுப்புரம் பஸ் நிலையத்தில் மழை வெள்ளம் என்று பரவும் புகைப்படம் இப்போது எடுக்கப்பட்டதா?

விழுப்புரம் பஸ் நிலையத்தில் இன்று பெய்த மழை காரணமாக குளம் போல தண்ணீர் தேங்கியதாக ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive மழை வெள்ள பாதிப்பு தொடர்பான புகைப்படம் ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “ஆசியாவின் மிகப்பெரிய நீச்சல் குளம் ! தமிழகத்தின் பெருமை மிகு அடையாளம் … விழுப்புரம் பேருந்து நிலையத்தின் இன்றைய விடியல் ……” என்று […]

Continue Reading

திருடனிடம் லாலிபாப் நீட்டிய சிறுமி என்று பரவும் வீடியோ உண்மையா?

கடையில் கொள்ளையடித்த திருடனிடம் தன்னிடமிருந்த லாலிபாப்பை வழங்கிய சிறுமி என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive கடை ஒன்றில் உரிமையாளரும் அவருக்கு அருகில் சிறுமி ஒருவரும் அமர்ந்திருக்க, கொள்ளையன் வந்து உரிமையாளரை அடித்து பணத்தைத் திருடுவது போன்று வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. கொள்ளையனிடம் சிறுமி தன்னிடமிருந்த லாலிபாப்பை நீட்ட, திகைத்துப்போன கொள்ளையன் மனம் திருந்தி பணத்தை […]

Continue Reading

வெளி மாநில செய்தி சேனல் விவாத நிகழ்ச்சியில் திமுக நிர்வாகி அடிவாங்கினாரா?

‘’வெளி மாநில செய்தி சேனல் விவாத நிகழ்ச்சியில் அடிவாங்கிய திமுக நிர்வாகி,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு வீடியோ தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ வெளி மாநில செய்தி சேனல் விவாத நிகழ்ச்சியில் அடிவாங்கிய  நிர்வாகி…தமிழ் நாட்டில் மட்டும் தான் முக பணியாளர்கள் உள்ளனர் அவர்கள் உங்களுக்கு பாதுகாப்பு…வெளியே போனால் இப்படி […]

Continue Reading

மோடியை கேள்வி கேட்ட ஐஸ்வர்யா ராய் என்று பரவும் வீடியோ உண்மையா?

‘’மோடியை கேள்வி கேட்ட ஐஸ்வர்யா ராய்,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு வீடியோ தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ பாகிஸ்தான் இடம் ஆறு  விமானங்களை இழந்தோம்?நான்கு ரஃபேல் வீழ்ந்தது எப்படி?எஸ் 400 சிஸ்டம் இரண்டை எப்படி வீழ்த்தினார்கள்?300 ராணுவ வீரர்களை எப்படி பலி கொடுத்தீர்கள்?காஷ்மீர்  &  ராஜஸ்தான் எல்லை பகுதிகளை பாகிஸ்தான் […]

Continue Reading

எத்தியோப்பியா எரிமலை வெடிப்பு என்று பரவும் வீடியோ உண்மையா?

எத்தியோப்பியாவில் ஹேலி குப்பி என்ற எரிமலை வெடித்தது என்று குறிப்பிட்டு வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive வான் உயரத்துக்கு கரும்புகை எழும் வீடியோ காட்சி ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “”இருளில் சூழும் இந்தியா” “10,000 ஆண்டுகளுக்கு பின் எத்தியோப்பியாவில் வெடித்த ஹேலி குப்பி எரிமலை இந்தியாவை நோக்கி 100-120 கிமீ வேகத்தில் எரிமலையின் சாம்பல் வந்துகொண்டிருக்கிறது. […]

Continue Reading

ராஜ்நாத் சிங் காலில் விழுந்த குடியரசுத் தலைவர் என்று பரவும் வீடியோ உண்மையா?

மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் காலில் இந்தியக் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு விழுந்ததாக ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: threads.com I Archive அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் புத்தகம் ஒன்றை வழங்கிவிட்டு அவரது காலில் இந்திய குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு விழுந்து வணங்குவது போன்று வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. வீடியோவின் மீது, “நமது இந்தியபெண் […]

Continue Reading

பீகார் மக்கள் தேர்தல் கமிஷனர் அலுவலகத்தை முற்றுகையிட்டார்களா?

தேர்தல் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து பீகார் மாநிலத் தலைமை தேர்தல் ஆணையம் அலுவலகத்தை மக்கள் முற்றுகையிட்டதாக ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive பொதுக் கூட்டத்திற்குக் கூடியது போன்று மக்கள் கூட்டமாக இருக்கும் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “பீஹார் மாநில தலைமை தேர்தல் கமிஷன் நேற்று காலை முதல் முற்றுகை இடப்பட்டு இருக்கும் கண் கொள்ளா […]

Continue Reading

கன்னியாகுமரியில் சாலையை கடந்த ராட்சத மலைப்பாம்பு இதுவா?

‘’கன்னியாகுமரியில் சாலையை கடந்த ராட்சத மலைப்பாம்பு,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ குமரி மாவட்ட சாலையில் கடந்து சென்ற ராட்சத மலைப்பாம்பு,’’ என்று எழுதப்பட்டுள்ளது.  Claim Link 1 l Claim Link 2        பலரும் இதனை உண்மை என நம்பி, சமூக வலைதளங்களில் ஷேர், […]

Continue Reading

மீண்டும் பரப்புரைக்கு தயாராகும் விஜய் வாகனம் என்று பரவும் புகைப்படம் உண்மையா?

‘’மீண்டும் பரப்புரைக்கு தயாராகும் விஜய் வாகனம்,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ மீண்டும் பரப்புரைக்கு தயாராகும் விஜய் வாகனம்…வந்துட்டான்வந்துட்டான்..//,’’ என்று எழுதப்பட்டுள்ளது.  Claim Link 1 l Claim Link 2 l Claim Link 3 l Claim Link 4        பலரும் இதனை […]

Continue Reading

கர்நாடக வங்கியில் கன்னடம் பேசிய இஸ்லாமிய பெண்ணுக்கு அனுமதி மறுக்கப்பட்டதா?

‘’கர்நாடக வங்கியில் கன்னடம் பேசிய இஸ்லாமிய பெண்ணுக்கு அனுமதி மறுக்கப்பட்டது,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ கர்நாடக வங்கியில் பணவர்தனை செய்ய ஒரு இஸ்லாமிய பெண்மணி வந்துள்ளார் அவர் கன்னட மொழியில் வங்கி பெண் அலுவலரிடம் பேசியுள்ளார். ஆனால் வங்கி பெண் ஊழியரோ கன்னடத்தில் பேசாதே […]

Continue Reading

பீகாரில் தோற்றதால் கதறும் காங்கிரஸ் பொறுப்பாளர் என்று பரவும் வீடியோ உண்மையா?

‘’பீகாரில் தோற்றதால் கதறும் காங்கிரஸ் பொறுப்பாளர்,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ பீகாரில் மூத்த.. வயதான காங்கிரஸ் பொறுப்பாளரின்  கதறல்…😭😭😁😁படுமோசமான தேர்தல் தோல்வியால் அவமானம் தாங்க முடியாமல் கதறி கதறி துடித்து அழுதார். அந்தப் பப்பு பயலை நம்பி வந்ததுக்கு… கட்சியை காலி பண்ணி… நம்மள […]

Continue Reading

தலைமைத் தேர்தல் அதிகாரி ஞானேஷ் குமார் அமித்ஷாவின் காலில் விழுந்தாரா?

‘’தலைமைத் தேர்தல் அதிகாரி ஞானேஷ் குமார் அமித்ஷாவின் காலில் விழுந்தார்,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ பீகார் தேர்தல் முடிவுகள் பற்றி விளக்கம் வேண்டுபவர்களுக்கு இந்த வீடியோவை பார்த்தால் அங்கு என்ன நடந்தது என்று புரியும்.மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் இந்தியாவின் முக்கிய தேர்தல் அதிகாரி […]

Continue Reading

நம்பிக்கை தரும் தமிழ் நடிகர்களில் பிரதீப் ரங்கநாதன் முதலிடம் என்று தந்தி டிவி செய்தி வெளியிட்டதா?

‘’நம்பிக்கை தரும் தமிழ் நடிகர்களில் பிரதீப் ரங்கநாதன் முதலிடம்,’’ என்று தந்தி டிவி செய்தி வெளியிட்டதாகக் கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ தமிழ் சினிமாவின் அடுத்த தலைமுறை ஹீரோக்களில் யார் நம்பிக்கை தருகிறார்கள். தந்தி டிவி நடத்திய டிஜிட்டல் சர்வே முடிவு. பிரதீப் ரங்கநாதன் 55.5% வாக்குகள் […]

Continue Reading

பாட்னாவில் பாஜக-வுக்கு எதிராக மக்கள் போராட்டம் என்று பரவும் வீடியோ உண்மையா?

பீகாரில் முறைகேடு செய்து வெற்றி பெற்ற பாஜக-வுக்கு எதிராக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive சாலையில் ஆயிரக்கணக்கானோர் பேரணியாக செல்லும் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில். “வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கம் செய்தது. உயிரோடு இருக்கும் பொழுதே இறந்து விட்டதாக பட்டியலில் சேர்த்தது. 70,000 இஸ்லாமியர்கள் பெயரை 20 தொகுதிகளில் இருந்து […]

Continue Reading

டெல்லியில் குண்டு வெடித்த காரை ஓட்டி வந்த நபர் இவரா?

‘’டெல்லியில் குண்டு வெடித்த காரை ஓட்டி வந்த நபர்,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ #JUSTIN டெல்லியில் குண்டு வெடித்த காரை ஓட்டி வந்தவரின் அடையாளம் தெரிந்தது,’’ என்று எழுதப்பட்டுள்ளது. இதனுடன் புகைப்படம் ஒன்றும் இணைக்கப்பட்டுள்ளது.  Claim Link 1  l Claim Link 2       […]

Continue Reading

பீகார் மக்கள் வீதியில் இறங்கிப் போராடத் தொடங்கிவிட்டதாக பரவும் வீடியோ உண்மையா?

வாக்குத் திருட்டுக்கு எதிராக பீகார் மக்கள் வீதியில் இறங்கி போராடத் தொடங்கிவிட்டனர் என்று இரண்டுக்கும் மேற்பட்ட வீடியோக்களை ஒன்று சேர்த்து ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளனர். இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive ஒரு மைதானத்தில் ஆயிரக்கணக்கானோர் கூடியிருக்கும் வீடியோ மற்றும் இரவில் சாலையில் தீப்பந்தத்துடன் ஆயிரக்கணக்கானோர் ஊர்வலமாக செல்லும் வீடியோக்களை ஒன்று சேர்த்து ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளனர். நிலைத் தகவலில், “தீப்பொறி பற்றி விட்டது. பீகார் மக்கள் வீதிகளில் இறங்கி […]

Continue Reading

வாக்குத் திருட்டுக்கு எதிராக பீகாரில் போராட்டம் என்று பரவும் வீடியோ உண்மையா?

வாக்குத் திருட்டுக்கு எதிராக பீகார் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதாக ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive போலீஸ் வாகனத்தின் மீது மக்கள் கல்வீசி தாக்குதல் நடத்தும் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “#VoteChori வாக்கு திருட்டுக்கு எதிராக பீகார் முழுவதும் மக்கள் போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள் பாசிச பிஜேபி ஆட்சிக்கு விரைவில் முடிவு வருகிறது” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. […]

Continue Reading

கேரளாவில் முஸ்லீம் என்பதால் பெண் வேட்பாளரின் கணவர் போட்டோ வைத்து ஓட்டு கேட்டனரா?

‘’கேரளாவில் முஸ்லீம் என்பதால் பெண் வேட்பாளரின் கணவர் போட்டோ வைத்து ஓட்டு கேட்டனர்,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ கேரளாவில் தான் இந்த போஸ்டர் ஒட்டியிருக்காங்க இவருடைய மனைவிக்கு ஓட்டு போடுங்கன்னு இவரு கேக்குறாரு… வேட்பாளர் போட்டோ போடாமல் அவருடைய கணவர் போட்டோ போட்டு ஓட்டு […]

Continue Reading

தேர்தல் ஆணையத்திற்கு எதிராக பீகாரில் புரட்சி வெடித்ததா?

பீகாரில் பாஜக, தேர்தல் ஆணையத்திற்கு எதிராக மக்கள் புரட்சி வெடித்து என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive அரசு அலுவலகத்தை ஏராளமான மக்கள் முற்றுகையிட்டு தாக்கும் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத்தகவலில், “பீகாரில் வெடித்தது மக்கள் புரட்சி நன்றி இந்திய தேர்தல் ஆணையத்திற்கு எதிராக…. நிதிஷ் குமார் தப்பி ஓட்டம்… போதாது போதாது இது நாடு முழுவதும் […]

Continue Reading

பீகார் தேர்தல் முடிவுக்கு எதிராக போராடும் மக்கள் என்று பரவும் வீடியோ உண்மையா?

பீகார் தேர்தல் முடிவுகளுக்கு எதிராக வீதிக்கு வந்து போராடும் மக்கள் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive மக்கள் மிகப்பெரிய அளவில் ஊர்வலமாக செல்லும் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “பிஹார் மக்கள் அனைவரும் வீதியில் வந்து போராடுகிறார்கள் என்றால் நிச்சயமாக BJP க்கு ஓட்டு போட்டவர்களாக இருக்கவே முடியாது ஏதோ தில்லு முல்லு செய்துBJP […]

Continue Reading