ஆவணக் காப்பகம்

இந்து கோவிலில் இருந்து ரூ.445 கோடி வசூலித்து மசூதி, சர்ச்சுகளுக்கு வழங்கியதா தி.மு.க அரசு?

இந்து கோவில்களிலிருந்து ரூ.445 கோடி பணத்தை வசூலித்து அதில் 330 கோடியை மசூதி, தேவாலயம் கட்ட கொடுத்த தி.மு.க அரசு என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive தினமலர் நாளிதழ் வெளியிட்ட செய்தியை ஸ்கிரீன்ஷாட் எடுத்து யாரோ ஒருவர் வெளியிட்ட பதிவை மீண்டும் ஸ்கிரீன்ஷாட் எடுத்து ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளனர். அந்த செய்தியில், “கோயில்களில் இருந்து ரூ.445 […]

Continue Reading

சில்க் ஸ்மிதாவுடன் அமர்ந்திருக்கும் சீமான் என்று பரவும் புகைப்படம் உண்மையா?

‘’சில்க் ஸ்மிதாவுடன் அமர்ந்திருக்கும் சீமான்,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு புகைப்படம் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ நடிகை சில்க் ஸ்மிதாவுடன் அமர்ந்திருப்பவர் யார் என்று தெரிந்தால் கமெண்ட் செய்யுங்கள்🤔🤔🤔,’’ என்று எழுதப்பட்டுள்ளது.  Claim Link 1 l Claim Link 2 l Claim Link 3     பலரும் இதனை உண்மை […]

Continue Reading

பெரியார் மையத்தில் இந்தி என்று பரவும் புகைப்படம் – உண்மை என்ன?

பெரியார் மையத்தில் இந்தியில் எழுதப்பட்டிருப்பதாக ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive பெரியார் மையத்தில் தமிழ், ஆங்கிலம், இந்தி மொழிகளில் பெயர் பலகை வைக்கப்பட்டிருக்கும் புகைப்படம் ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “*Controli மவனுகளா என்னடா இதெல்லாம்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த புகைப்படத்தைப் பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். உண்மை அறிவோம்: டெல்லியில் உள்ள பெரியார் […]

Continue Reading

முஸ்லீம் மாற்றுத்திறனாளிகளுக்கு மட்டுமே உதவி செய்யும் திமுக அரசு என்ற தகவல் உண்மையா?

‘’பொது இடத்தில் பெண் ஒருவரை கட்டிப்பிடித்த ஆ.ராசா,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு புகைப்படம் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ ஏன் இஸ்லாமியர் மட்டும் தான் மாற்றுத்திறனாளிகளா இருக்காங்களா Mr. @mkstalin❓ தமிழ்நாடு இந்தியாவில் உள்ளதா அல்லது பாகிஸ்தானில் உள்ளதா❓ ஓட்டு போட்ட இந்துக்களுக்கு எல்லோருக்கும் வாயில குல்பி‼️🤗,’’ என்று எழுதப்பட்டுள்ளது.  Claim […]

Continue Reading

வால்நட் சாப்பிட்டு வந்தால் பித்தப்பை கல் கரையுமா?

வால்நட் பருப்பை தினமும் ஊறவைத்து சாப்பிட்டு வந்தால் பித்தப்பை கற்கள் கரையும் என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive நியூஸ் கார்டு டைப்பில் மருத்துவக் குறிப்பை பகிர்ந்துள்ளனர். அதில், “பித்தப்பையில் கற்கள். வால்நட் பருப்பை தினமும் ஊற வைத்து சாப்பிட கற்கள் படிப்படியாக கரையும். குறிப்பாக வலியின்றி கற்களை உடலில் இருந்து வெளியேற்றி விடும்” என்று […]

Continue Reading

அமித்ஷாவை மிரட்டி அமர வைத்த திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி என்று பரவும் வீடியோ உண்மையா?

நாடாளுமன்றத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை மிரட்டி அமர வைத்த திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி காகோலி கோஷ் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive நாடாளுமன்றத்தில் எம்.பி ஒருவர் பேச அதற்கு பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோர் பதில் சொல்ல முடியாமல் திணறியது போன்று ஒரு வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. அவர் […]

Continue Reading

பொது இடத்தில் பெண் ஒருவரை கட்டிப்பிடித்த ஆ.ராசா என்று பரவும் புகைப்படம் உண்மையா?

‘’பொது இடத்தில் பெண் ஒருவரை கட்டிப்பிடித்த ஆ.ராசா,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு புகைப்படம் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ ஆமா இந்த போஸ்ட் சுத்திட்டு இருக்கே அது யாரு உங்களுக்கு தெரியுமா தெரிஞ்சா சொல்லுங்க #திமுகவின்_சமூகநீதி_வேடம்,’’ என்று எழுதப்பட்டுள்ளது.  Claim Link      பலரும் இதனை உண்மை என நம்பி, சமூக […]

Continue Reading

நாம் தமிழர் கட்சி சார்பாக ‘பாலியல் இழப்பீடு பாசறை’ தொடங்கப்பட்டதா?

‘’நாம் தமிழர் கட்சி சார்பாக ‘பாலியல் இழப்பீடு பாசறை’ தொடங்கப்பட்டுள்ளது,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ நாதக வாட்ஷப் குரூப்பில் புது குரூப்.. பாலியல் இழப்பீடு பாசறை!!! ,’’ என்று எழுதப்பட்டுள்ளது.  Claim Link 1 l Claim Link 2     பலரும் இதனை உண்மை […]

Continue Reading

பாகிஸ்தானை வீழ்த்தியதும் இந்திய கிரிக்கெட் வாரியம் வெளியிட்ட வீடியோ இதுவா?

சாம்பியன்ஸ் கோப்பை போட்டியில் இந்திய அணி பாகிஸ்தானை வீழ்த்திய போது இந்திய கிரிக்கெட் வாரியம் (பிசிசிஐ) வெளியிட்ட உணர்ச்சிப்பூர்வமான வீடியோ என்று ஒரு வீடியோவை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive இந்திய கிரிக்கெட் அணியினர் ஏ.ஆர்.ரஹ்மானின் வந்தே மாதரம் பாடலை ஸ்டேடியத்தில் பாடும் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “பாகிஸ்தான் அணியை வறுத்தெடுத்த பிறகு இந்திய கிரிக்கெட் […]

Continue Reading

ப்ரீத்தி ஜிந்தாவின் ரூ.18 கோடி வங்கிக் கடனை மத்திய அரசு தள்ளுபடி செய்ததா?

நடிகை ப்ரீத்தி ஜிந்தாவின் ரூ.18 கோடி கடனை மத்திய அரசு தள்ளுபடி (write-off) செய்ததாகப் பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். இந்த தகவல் உண்மையா என்று அறிந்துகொள்ள ஆய்வு செய்தோம். பிரபல பாலிவுட் நடிகையும் ஐபிஎல் கிரிக்கெட் பஞ்சாப் அணியின் உரிமையாளருமான ப்ரீத்தி ஜிந்தா தொடர்பாக சமீபத்தில் கேரள காங்கிரஸ் எக்ஸ் தளத்தில் பதிவு வெளியிட்டது. அதில், “நடிகை ப்ரீத்தி ஜிந்தா தன்னுடைய சமூக ஊடக பக்கத்தை நிர்வகிக்கும் பொறுப்பை பாஜக-வுக்கு கொடுத்து, வங்கிக் கடன் […]

Continue Reading

விராட் கோலி அடித்த அடியில் பாகிஸ்தான் காரனுக்கு டவுசர் கழன்றுவிட்டது என்று பரவும் வீடியோ உண்மையா?

‘’விராட் கோலி அடித்த அடியில் பாகிஸ்தான் காரனுக்கு டவுசர் கழன்றுவிட்டது,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு வீடியோ பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ அடித்த அடியில் பாகிஸ்தான் காரனுக்கு டவுசர்  கழன்றுவிட்டது. 😆😛 @ Adults Only 👀 🏏 ,’’ என்று எழுதப்பட்டுள்ளது.  Claim Link 1 l Claim Link […]

Continue Reading

முதலமைச்சர் பதவியேற்ற 48 மணி நேரத்தில் புதிய காரில் வலம் வந்த ரேகா குப்தா என்ற தகவல் உண்மையா?

‘’முதலமைச்சர் பதவியேற்ற 48 மணி நேரத்தில் புதிய காரில் வலம் வந்த ரேகா குப்தா,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ முதலமைச்சராக பதவியேற்ற 48 மணி நேரத்தில் அதி நவீன சொகுசு கார் எப்படி வந்தது?? அதுவும் பேன்சி நம்பரோடு.. அதிகார துஷ்பிரயோகம் செய்யும் ஒன்றிய […]

Continue Reading

வனிதா விஜயகுமார் 5வது திருமணம் என்றும் பரவும் புகைப்படம் உண்மையா?

நடிகை வனிதா விஜயகுமார் ஐந்தாவது முறையாக திருமணம் செய்து கொண்டார் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இந்த தகவல் உண்மையா என்று அறிய ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive நடிகை வனிதா விஜயகுமார் – நடன இயக்குநர் ராபர்ட் ஆகியோர் திருமணம் செய்துகொள்வது போன்ற புகைப்படம் ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “தனது மூன்றாவது கணவனை ஐந்தாவது கணவனாக மீண்டும் திருமணம் செய்த நடிகை.. […]

Continue Reading

கடையநல்லூர் ரயில் நிலையத்தில் ஆங்கில எழுத்தை அழித்த தி.மு.க-வினர் என்று பரவும் புகைப்படம் உண்மையா?

கடையநல்லூர் ரயில் நிலைய பெயர் பலகையில் இந்திக்கு பதில் ஆங்கில எழுத்தை அழித்த தி.மு.க-வினர் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive கடையநல்லூர் ரயில் நிலையத்தில் தமிழ், இந்தி, ஆங்கிலம் என்று மூன்று மொழிகளில் எழுதப்பட்டிருந்த பெயர் பலகையில் ஆங்கில எழுத்துக்களை மட்டும் அழித்தது போன்று புகைப்படம் ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. அதில், “ஹிந்தி மொழிய அழிச்சிட்டோம் […]

Continue Reading

தமிழன் உயிரை கொடுத்து தனி தமிழ்நாடு உருவாக்குவான் என்று ஆ.ராசா கூறினாரா?

‘’தமிழன் உயிரை கொடுத்தாவது தனி தமிழ்நாடு உருவாக்குவான்,’’ என்று ஆ. ராசா கூறியதாக, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு நியூஸ் கார்டு பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ எச்சரிக்கை..!!!  தமிழன் என்று ஒரு இனம் உண்டு! அவனுக்கு என்று ஒரு குணம் உண்டு!! வேண்டிவந்தால் உயிரை கொடுத்தாவது தனி தமிழ்நாடு உருவாக்குவான்!!! – ஆர். ராசா […]

Continue Reading

டெல்லி முதல்வர் அலுவலகத்தில் இருந்து அம்பேத்கர் படம் அகற்றப்பட்டதா?

டெல்லி முதல்வர் அலுவலகத்தில் இருந்து அம்பேத்கர் மற்றும் பகத்சிங் ஆகியோரின் புகைப்படங்கள் அகற்றப்பட்டது என்று பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். இது தொடர்பாக ஆய்வு செய்தோம். டெல்லி முதலமைச்சர் அலுவலகத்தில் அதிஷி மற்றும் ரேகா குப்தா ஆகியோர் இருக்கும் புகைப்படங்களை ஒன்றாக வைத்து உருவாக்கப்பட்ட பதிவை பலரும் Facebook உள்ளிட்ட சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். அதிஷி முதல்வராக இருக்கும் போது அம்பேத்கர் மற்றும் பகத்சிங் ஆகியோரின் புகைப்படம் இருந்ததையும், ரேகா குப்தா பதவியேற்ற பிறகு […]

Continue Reading

சத்ரபதி சிவாஜியின் உண்மையான தோற்றம் என்று பரவும் புகைப்படம் உண்மையா?

பாலிவுட் திரைப்படங்களில் மராட்டிய மன்னன் சத்ரபதி சிவாஜியை மிகைப்படுத்திக் காட்டுவது போலவும், உண்மையில் உடல் வலிமை குறைந்தவராக அவர் இருந்தார் என்றும் ஒரு புகைப்படத்தை சிலர் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive சத்ரபதி சிவாஜியின் உண்மை படம் என்று குறிப்பிட்டு புகைப்பட பதிவு ஒன்று ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. பாலிவுட்டில் மிகைப்படுத்திக் காட்டப்படுவதாக அதில் வேறு சில புகைப்படங்களையும் அதில் வைத்திருந்தனர். […]

Continue Reading

காலில் செருப்பு அணிய மாட்டேன் என்று சொன்னதை மறந்துவிட்டாரா அண்ணாமலை?

‘’காலில் செருப்பு அணிய மாட்டேன் என்று சொன்னதை மறந்துவிட்ட அண்ணாமலை,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு புகைப்படம் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ அண்ணாமலையின் போலி நாடகம் அம்பலம்! திமுகவை ஆட்சியில் இருந்து அகற்றும் வரை செருப்பு அணிய மாட்டேன் என அண்ணாமலை கூறியிருந்த நிலையில் தற்போது செருப்பு அணிந்து சுற்றுவது சர்ச்சையை […]

Continue Reading

அப்பாவை மணந்த மகள் என்று பரவும் வீடியோ உண்மையா?

அப்பாவையே திருமணம் செய்துகொண்ட மகள் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive நடுத்தர வயதுடைய ஆண் ஒருவர் இளம் பெண்ணை திருமணம் செய்து அழைத்து வருவது போலவும், அவர்களிடம் மூன்றாவதாக ஒருவர் பேட்டி எடுப்பது போன்ற வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. அதில், “24 வயது பெண் தன்னுடைய சொந்த 50 வயது தந்தையை திருமணம் செய்தார்” […]

Continue Reading

கங்கனா ரனாவத் மற்றும் யோகி ஆதித்யநாத் கட்டிப்பிடித்துக் கொண்டனரா?

‘’கங்கனா ரனாவத் மற்றும் யோகி ஆதித்யநாத் கட்டிப்பிடித்துக் கொண்ட காட்சி,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு வீடியோ பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ BJP – #முதலமைச்சர்இவ்வளவு சலுகைகள் இருந்தால் பலருக்கு பிரம்மச்சாரியாக ஆக வேண்டும் என்று ஆசை வந்து விடும்#jegajananda Happy Wedding Anniversary ,’’ என்று எழுதப்பட்டுள்ளது.  இதனுடன், கங்கனா […]

Continue Reading

‘கட் அவுட் ஸ்டாலின்’ என்று பாஜக.,வினர் போஸ்டர் ஒட்டினரா?

‘’கெட் அவுட் ஸ்டாலின் என்பதற்கு பதிலாக ‘கட் அவுட் ஸ்டாலின்’ என்று போஸ்டர் ஒட்டிய பாஜக,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு புகைப்படம் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ #Get out Stalin #கட் அவுட் ஸ்டாலின்காவி களப்பணியில் G. ராஜ்குமார் BA LLB., மதுரை மாவட்ட துணை தலைவர், பாஜக,’’ என்று […]

Continue Reading

குருவாயூர் கோயில் சார்பாக திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு குட்டி யானை வழங்கப்பட்டதா?

‘’குருவாயூர் கோயில் சார்பாக திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு குட்டி யானை வழங்கப்பட்டது’’, என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு வீடியோ பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ கேரள மாநில குருவாயூர் கோயில் நிர்வாகம் இந்த குட்டி யானையை திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு பரிசாக வழங்கியது. இந்த குறும்பு குட்டி யானை “கண்ணும் கண்ணும்” என்ற […]

Continue Reading

“கெட் அவுட் ஸ்டாலின்” என்று நியூஸ் கார்டு வெளியிட்டதா சன் நியூஸ்?

கெட் அவுட் ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் உலக அளவில் 2வது இடத்தில் உள்ளது என்று சன் நியூஸ் தொலைக்காட்சி நியூஸ் கார்டு வெளியிட்டதாக சிலர் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive சன் நியூஸ் வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. அதில், “X தளத்தில் உலகளவில் 2வது இடத்திலும், இந்திய அளவில் முதலிடத்திலும் ட்ரெண்டாகும் #GetOutStalin” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. […]

Continue Reading

டெல்லி முதலமைச்சர் ரேகா குப்தாவின் பழைய வீடியோ இதுவா?

‘’டெல்லி பெண் முதலமைச்சரின் பழைய காணொளி’’, என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு வீடியோ பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ *டெல்லி பெண் முதலமைச்சரின் பழைய காணொளி**டெல்லியின் பொறுப்பு இப்பொழுதுதான் ஒரு சரியான நபரிடம் சென்று சேர்ந்துள்ளது.**இப்போது இவர்தான் டெல்லியின் முதலமைச்சர்**இனி எல்லாமே சரியாக இருக்கும்**பெண் குலத்தின் பெருமை போற்றும் பெண்மணி*’’ என்று எழுதப்பட்டுள்ளது.இதனுடன், […]

Continue Reading

திராவிட மாடல் அரசே… அரசுப் பள்ளிகளில் இந்தியை கற்றுக் கொடு என்று பரவும் புகைப்படம் உண்மையா?

‘’திராவிட மாடல் அரசே… அரசுப் பள்ளிகளில் இந்தியை கற்றுக் கொடு’’, என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு புகைப்படம் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  அரசுப் பள்ளி சீருடை அணிந்த மாணவி ஒருவர் தனது கையில் சிலேட் பிடித்திருப்பது போன்ற புகைப்படம் உள்ளது. அதில், ‘’திராவிடமாடல் அரசே… அரசு பள்ளிகளில் இந்தியை கற்று கொடு! அல்லது இந்தியை […]

Continue Reading

துருக்கியில் இருந்து எகிப்துக்கு சென்ற அந்த காலத்து ரயில் என்று பரவும் புகைப்படம் உண்மையா?

துருக்கியில் இருந்து மெக்கா, மதினா வழியாக எகிப்து தலைநகர் கெய்ரோ வரை சென்ற ரயில் என்று ஒரு பழைய பாழடைந்த ரயில் இன்ஜின் ஒன்றின் புகைப்படம் ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive பழைய கைவிடப்பட்ட ரயில் இன்ஜின்கள் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் புகைப்படம் ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “ஒரு காலத்தில்… துருக்கியே நாட்டிலிருந்து புறப்பட்டு, சிரியா ஜோர்டான் மெக்கா மெதினா ஜெரூசலம் […]

Continue Reading

டெல்லியில் பாஜக ஆட்சிக்கு வந்ததும் யமுனை ஆரத்தி தொடங்கப்பட்டதா?

டெல்லியில் பல ஆண்டுகள் கழித்து மீண்டும் பாஜக ஆட்சியைப் பிடித்ததைத் தொடர்ந்து யமுனை நதிக்கு ஆரத்தி காட்டுவது மீண்டும் தொடங்கப்பட்டது என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive ஆற்றுக்கு ஆரத்தி எடுத்த வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “டெல்லியில் பாஜக ஆட்சி 27 ஆண்டுகளுக்குப் பிறகு அமைந்ததைத் தொடர்ந்து யமுனை ஆற்றங்கரையில் யமுனா ஆரத்தி மீண்டும் தொடங்கியது” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வீடியோவை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். உண்மை அறிவோம்: […]

Continue Reading

கிராமத்தை அழித்து நடிகர் விஜய் கட்டிய பள்ளிக்கூடம் என்று பரவும் புகைப்படங்கள் உண்மையா?

அழகிய பசுமையான கிராமத்தை அழித்து நடிகரும் தவெக தலைவருமான விஜய் கட்டிய பள்ளிக் கூடம் என்று இரண்டு புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றன. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive வயல்வெளி போன்று இருக்கும் இடம் ஒன்றின் புகைப்படம் மற்றும் பள்ளிக் கூட கட்டிடம் ஒன்றின் புகைப்படத்தை ஒன்று சேர்த்து ஒரே புகைப்படமாக சேர்த்து நடிகர் விஜய்யின் பள்ளி அமைவதற்கு முன்பு, கட்டிய பிறகு என்று […]

Continue Reading

“அண்ணாமலைக்கு விஜயகாந்த் நிலைதான் ஏற்படும்” என்று ஜவாஹிருல்லா எச்சரிக்கை விடுத்தாரா?

அண்ணாமலைக்கு நாவடக்கம் தேவை இல்லை என்றால் விஜயகாந்த்துக்கு ஏற்பட்ட கதிதான் ஏற்படும் என்று மனிதநேய மக்கள் கட்சித் தலைவரும் எம்.எல்.ஏ-வுமான ஜவாஹிருல்லா கூறியது போன்று ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive நியூஸ் 18 தமிழ்நாடு வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. அதில், “எச்சரிக்கை. ஆட்டு குட்டி அண்ணா மலைக்கு நாவடக்கம் தேவை. […]

Continue Reading

கும்பமேளாவில் அமைக்கப்பட்ட கழிப்பறை என்று பரவும் வீடியோ உண்மையா?

கும்பமேளாவில் ரூ.4000 கோடி செலவில் அமைக்கப்பட்ட தற்காலிக கழிப்பறையின் நிலை என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive வரிசையாகக் கழிப்பறை கோப்பைகள் அமைக்கப்பட்டிருக்கும் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. எந்த மறைவும் இன்றி, வரிசையாக இந்த கழிவறை கோப்பைகள் அமைக்கப்பட்டுள்ளன. நிலைத் தகவலில், “4000 கோடி செலவில் உலகமே வியக்கும் பாத்ரூம் வசதியை கும்பமேளாவில் செய்த எங்கள் […]

Continue Reading

“இந்தியா இந்தி பேசும் மக்கள் வாழும் நாடு” என்று சீமான் கூறினாரா?

இந்தியா என்பது இந்தி பேசும் மக்கள் வாழும் நாடுதான் என்று நாம் தமிழர் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: x.com I Archive சீமானின் பேட்டியின் சில விநாடிகளை மட்டும் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளனர். அதில், “அவரவர்க்கு அவரவர் தாய்மொழி இருக்கிறது. பயன்பாட்டு மொழியா ஆங்கிலம் உள்ளது. தேவை என்றால் இந்தி கற்கலாம். […]

Continue Reading

“ஜெயலலிதாவின் நகைகளை மத்திய அரசிடம் ஒப்படைக்க வேண்டும்” என்று அண்ணாமலை கூறினாரா?

ஜெயலலிதாவின் நகை, சொத்துக்களை மத்திய அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என்று தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கூறியதாக ஒரு நியூஸ் கார்டு ஃபேஸ்புக்கில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அண்ணாமலை புகைப்படத்துடன் நியூஸ் 7 தமிழ் வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. அதில், “தமிழக அரசிடம் ஒப்படைக்கப்பட்ட முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நகை சொத்துக்களை […]

Continue Reading

சைக்கிள் ஓட்டிய சிறுவனுக்கு அபராதம் விதித்த போலீஸ் என்று பரவும் வீடியோ தற்போது எடுக்கப்பட்டதா?

‘’ஹெல்மெட் இல்லாமல், சைக்கிள் ஓட்டிய சிறுவனுக்கு அபராதம் விதித்த போலீஸ்’’, என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு வீடியோ பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’சைக்கிள்க்கு பைன்னா… *எங்க போலீஸ் ஸ்காட்லாண்ட் போலீஸ்க்கு இணையாக்கும், அவங்களை மீறி என்ன தைரியம் இருந்தா சைக்கிள் ஓட்டிட்டு போவே ?*,’’ என்று எழுதப்பட்டுள்ளது. இதனுடன், வீடியோ ஒன்றும் இணைக்கப்பட்டுள்ளது.  […]

Continue Reading

டெல்லியில் வெற்றி பெற்றதும் பாஜக மெட்ரோ கட்டணத்தை உயர்த்தியதா?

டெல்லி சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற உடன் டெல்லி மெட்ரோ கட்டணத்தை ரூ.60 முதல் 90 வரை உயர்த்திய பாஜக என்று ஒரு தகவல் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive ‘டெல்லி மக்களுக்கு நல்ல நாள் முதல் பரிசு நண்பர்களே..!! மெட்ரோ கட்டணம் ₹60முதல் ₹90 வரை உயர்வு மகளிர் இலவச பேருந்து சேவை மூடல் 😄” என்று ஃபேஸ்புக்கில் […]

Continue Reading

‘இந்தி தெரிந்தால்தான் இந்தியன்’ என்று அண்ணாமலை கூறியதாக பரவும் நியூஸ் கார்டு உண்மையா?

இந்தி தெரிந்தால்தான் இந்தியன் என்று அண்ணாமலை கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை புகைப்படத்துடன் தினமலர் நாளிதழ் வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. அதில், “இந்தி தெரிந்தால்தான் இந்தியன் – அண்ணாமலை. இந்திதான் இந்தியாவின் மூத்த மொழி. இந்தி தெரியாதவர்கள் இந்தியர்களே அல்ல. தமிழ்நாட்டைத் தாண்டினால் தமிழில் […]

Continue Reading

திருச்சி டிஐஜி வருண்குமார் தனது மனைவியை விவாகரத்து செய்வதாக அறிவித்தாரா?

‘’மனைவியை பிரிவதாக திருச்சி டிஐஜி வருண்குமார் அறிவிப்பு’’, என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ மனைவியை பிரிவதாக திருச்சி டிஐஜி வருண்குமார் Instagram Story ரவி அறிவிப்பு,’’ என்று எழுதப்பட்டுள்ளது. மேலும், புகைப்படம் ஒன்றும் இணைக்கப்பட்டுள்ளது.  Claim Link   பலரும் இதனை உண்மை என நம்பி, […]

Continue Reading

உத்தரப் பிரதேசத்தில் குழந்தை வரம் கேட்டு சாக்கடையில் படுத்த பெண் என்ற தகவல் உண்மையா?

‘’உத்தரப் பிரதேசத்தில் குழந்தை வரம் கேட்டு சாக்கடையில் படுத்த பெண்’’, என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’கல்யாணம் ஆகி 6 வருஷம் குழந்தை இல்லையாம். அதுக்கு சாக்கடையில் படுக்க வைத்தால் சரியாகும்னு ஒரு ஜோசியக்காரன் சொன்னதை கேட்டு அந்த பொண்ணை சாக்கடையில் ஒரு வாரமா படுக்க வச்சு […]

Continue Reading

வக்ஃப் சொத்துகளை இந்து அறநிலையத்துறை ஆக்கிரமித்துள்ளது என்று பரவும் நியூஸ் கார்டு உண்மையா?

இந்து அறநிலையத் துறை, இந்து மடங்கள், கோயில்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள வக்ஃப் போர்டு நிலங்கள் மீட்கப்படும் என்று எஸ்டிபிஐ கட்சி தமிழ்நாடு தலைவர் நெல்லை முபாரக் கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive நியூஸ் 18 தமிழ்நாடு வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. அதில், “முபாரக் செய்தியாளர் சந்திப்பு. இந்து அறநிலதுறை மற்றும் மடங்கள், […]

Continue Reading

பெரியாரை திருமணம் செய்ய விருப்பம் தெரிவித்தாரா காவ்யா மாறன்?

‘’இப்போது பெரியார் இருந்திருந்தால் நான் அவரை திருமணம் செய்திருப்பேன்’’, என்று காவ்யா மாறன் கூறியதாக, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு நியூஸ் கார்டு பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ உங்கள் கருத்து என்ன?இப்போது பெரியார் இருந்திருந்தால் நான் அவரை திருமணம் செய்திருப்பேன் *காவ்யா மாறன்*.,’’ என்று எழுதப்பட்டுள்ளது.  Claim Link 1 l Claim Link […]

Continue Reading

கும்பமேளாவில் ஜோதிர் மட சங்கராச்சாரியாரை தாக்கிய உ.பி  பாஜக அரசு என்று பரவும் வீடியோ உண்மையா?

கும்பமேளாவில் குளிக்கச் சென்ற சங்கராச்சாரியார் அவிமுக்தேஷ்வரானந்தை காவல் துறையை விட்டு உத்தரப்பிரதேச பாஜக அரசு தாக்கியது என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive உத்தரகண்ட் மாநிலம் ஜோதிர் ( அல்லது ஜோஷி) சங்கர மடத்தின் தலைவராக இருப்பவர் சுவாமி அவிமுக்தேஷ்வரானந்தா. இவரை போலீசார் தாக்கும் வீடியோவை ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளனர். நிலைத் தகவலில், “கும்பமேளாவுக்கு குளிக்கச் சென்ற […]

Continue Reading

சிக்கந்தர்மலை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று வக்ஃபு போர்டு தலைவர் கூறினாரா?

திருப்பரங்குன்றம் மலை வக்ஃப் போர்டுக்கு சொந்தமானது என்றும், அங்குள்ள ஆக்கிரமிப்பை (முருகன் கோவிலை) அகற்ற வேண்டும் என்று வக்ஃப் போர்டு தலைவர் கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive புதிய தலைமுறை வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. அதில், “வக்ஃ போர்டு தலைவரின் சர்ச்சை பேச்சு. வக்ஃ போர்டுக்கு சொந்தமான சிக்கந்தர்மலை மீது […]

Continue Reading

விரைவில் திமுகவில் இணையும் விசிக என்று பரவும் நியூஸ் கார்டு உண்மையா?

‘’விரைவில் திமுகவில் இணையும் விசிக’’, என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு புகைப்படம் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ விரைவில் திமுகவில் இணையும் விசிகவிடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் மார்ச் 1ஆம் தேதி கட்சியை கலைத்துவிட்டு மொத்தமாக திமுகவில் இணைய உள்ளதாக தகவல்; முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பிறந்தநாள் பரிசாக கட்சியை திமுகவுடன் இணைக்க […]

Continue Reading

அமெரிக்காவில் இருந்து வெளியேற்றப்படும் இந்தியர்கள் என்று பரவும் புகைப்படம் உண்மையா?

‘’அமெரிக்காவில் இருந்து இராணுவ விமானத்தில் குத்தவச்சு வெளியேற்றப்படும் இந்தியர்கள்’’, என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு புகைப்படம் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ மோடியின் நண்பன் என டிரம்பை தலையில் தூக்கி வைத்தும், கோவில் கட்டியும் கொண்டாடிய சங்கிகளா… இந்திய நாட்டு பிரஜைகளை நாட்டைவிட்டு துரத்த ஆதரவளித்த அமெரிக்கவாழ் சங்கிகளுக்கு டிரம்ப் வைத்த ஆப்பைப் […]

Continue Reading

சேலம் அரசு மருத்துவமனையில் காவலர் அராஜகம் என்று பரவும் வீடியோ தற்போது எடுக்கப்பட்டதா?

‘’சேலம் அரசு மருத்துவமனையில் காவலர் அராஜகம்’’, என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு வீடியோ பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ சேலம் அரசு மருத்துவமனையில் #காவலராக பணி அமர்த்தப்பட்ட ரவுடியின் #அராஜகம்! காதில் கேட்க கூடாத வார்த்தைகள் இவனை வேலையை விட்டு தூக்கும் வரை பரப்புங்கள்,’’ என்று எழுதப்பட்டுள்ளது. இதனுடன் வீடியோ ஒன்றும் இணைக்கப்பட்டுள்ளது. […]

Continue Reading

நடிகர் கார்த்தியிடம் திரள் நிதி கேட்ட சீமான் என்று பரவும் வீடியோ உண்மையா?

நடிகர் கார்த்தியிடம் திரள் நிதி கேட்டு சீமான் மிரட்டியது போன்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive நடிகர் கார்த்திக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் போன் செய்து திரள் நிதி கேட்பது போன்றும், சீமான் ஒரு சீட்டிங் ஆசாமி என்று நடிகர் கார்த்தியின் மனசாட்சி கூறுவது போலவும் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், […]

Continue Reading

பட்ஜெட் தாக்கல் செய்தபோது தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜிவ் குமார் நாடாளுமன்றம் வந்தாரா?

‘’பட்ஜெட் தாக்கல் செய்வதற்காக, தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜிவ் குமார் நாடாளுமன்றம் வந்தார்’’, என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ பட்ஜெட் தயாரிப்புக்கும் இந்திய தேர்தல் கமிஷனருக்கும் என்ன சம்பந்தம்?  இவனுக்கு அங்க என்ன வேலை.???🤔🤧 நடுவில் ஏன் வந்தார்? தேர்தல் கமிசனர் அடுத்த நிதி அமைச்சரா?,’’ […]

Continue Reading

சேலம் எம்.பி திமுகவில் இருந்து விலகலா?

சேலம் தி.மு.க எம்.பி அக்கட்சியில் இருந்து விலகினார் என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் தகவல் ஒன்று பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக நாம் ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive எக்ஸ் தளத்தில் யாரோ வெளியிட்டிருந்த விலகல் அறிவிப்பு ஒன்றுடன் கூடிய பதிவை ஸ்கிரீன்ஷாட் எடுத்து ஃபேஸ்புக்கில் பகிரப்பட்டுள்ளது. அதில், “சேலம் MP திமுகவில் இருந்து விலகல்.. பேரனுக்கு பேனர் வைக்கவும் போஸ்டர் ஒட்டும் நிலை வெகு தொலைவில் […]

Continue Reading

இந்துக்கள் அசைவம் உண்ணக்கூடாது என்று ஹெச்.ராஜா கோரிக்கை விடுத்தாரா?

‘’இந்துக்கள் அசைவம் உண்ணக்கூடாது’’, என்று ஹெச்.ராஜா கோரிக்கை விடுத்ததாகக் கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு நியூஸ் கார்டு பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’இந்துக்கள் அசைவம் உண்ணக்கூடாது இந்துக்கள் அசைவ உணவு உண்பதால்தான் திருப்பரங்குறத்தில் ஆடு பலியிடுவதை எந்த தாக்கமும் இல்லாமல் கடந்துபோகிறோம் இனி இந்துக்கள் அசைவ உணவு உண்பதையே மத்திய அரசு தடை செய்ய […]

Continue Reading

பள்ளி, கல்லூரி அருகே விற்கப்படும் பொம்மை வடிவிலான போதைப் பொருள் இதுவா?

தமிழ்நாட்டில் பள்ளி, கல்லூரிகளுக்கு அருகே பொம்மை வடிவில் போதைப் பொருள் ஒன்று விற்கப்படுவதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive பிங்க் நிறத்தில் குட்டி டெடி பியர் வடிவிலான பொம்மை ஒரு பிளாஸ்டிக் உறையில் போடப்பட்டிருக்கும் புகைப்படத்தை ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளனர். நிலைத் தகவலில், “உஷார்…உஷார்… புதிய போதைப்பொருள் பள்ளிகளில்… உங்களிடம் பள்ளியில் படிக்கும் குழந்தைகள் இல்லாவிட்டாலும் மற்றவர்களுக்காக பாசத்திற்குரிய […]

Continue Reading

நாம் தமிழர் கட்சியை தடை செய்ய வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்தாரா?

‘’நாம் தமிழர் கட்சியை தடை செய்ய வேண்டும்’’, என்று மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்ததாகக் கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு நியூஸ் கார்டு பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’நாதகவை தடை செய்ய கோரிக்கைகலவரத்தை தூண்டும் வகையில் சீமான் செயல்படுவதால், நாதக கட்சியின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும். –  திமுக ஒருங்கிணைப்புக்குழு சார்பில் ஸ்டாலின் மனு! […]

Continue Reading