‘’சீனாவில் 50 வழி சாலை. 2000 கிமீ நீளத்திற்கு 20 முதல் 50 வழி வரை விரிவடைந்து சுருங்குகிறது,’’ என பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.

தகவலின் விவரம்:

இதனை நமது வாசகர் ஒருவர் வாட்ஸ்ஆப் வழியே (9049053770) நமக்கு அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டிருந்தார்.

இந்த தகவலை பலரும் ஃபேஸ்புக்கில் பகிர்ந்து வருகின்றனர்.

தமிழில் யாரேனும் பகிர்ந்துள்ளனரா என தேடியபோது, 06.01.2021 அன்று கால்டுவெல் ஜீ என்ற ஃபேஸ்புக் ஐடி இந்த புகைப்படம் பற்றிய தகவலை ஷேர் செய்திருந்ததைக் கண்டோம்.

Facebook Claim LinkArchived Link

இதன்படி, சீனாவில் 2000 கிமீ நீளம் உள்ள ஒரு சாலை ஒரு டோல் கேட் அருகில் 50 வழியாக பிரிந்து, பின்னர் 20 வழியாகவும், பிறகு 4 வழியாகவும் சுருங்குகிறது என்று குறிப்பிட்டுள்ளனர்.

இது எந்த சாலை எனப் பெயர் எதுவும் குறிப்பிடவில்லை.

உண்மை அறிவோம்:
குறிப்பிட்ட சாலை உண்மையில் சீனாவில் உள்ளதா, என்று தகவல் தேடினோம். அப்போது, சீனாவில் 50 வழி சாலை எதுவும் இல்லை என தெரியவந்தது.

சீனாவில் உள்ள G4 beijing- hong kong- macau expressway சாலைதான் 50 வழி சாலை எனக் கூறப்படுவதும், உண்மையில், அது சில குறிப்பிட்ட தொலைவுக்கு, 25 வழி சாலையாக விரிவடைந்து பின்னர் 4 வழியாக சுருங்குகிறது என்றும் தெரியவந்தது.

இந்த சாலையில் Zhuozhou என்ற இடத்தில் Beijing South Toll Gate உள்ளது. இந்த இடத்தில்தான், சுமார் 1000 மீட்டர் நீளத்திற்கு, 4 வழி சாலை என்பதில் இருந்து, 25 வழியாக, இரு புறமும் விரிந்து, பின்னர் மீண்டும் 4 வழியாக சுருங்குகிறது. அதனால்தான், அந்த இடத்தில் அதிக போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது என்றும் கூறப்படுகிறது.

இந்த சுங்கச்சாவடி சாலையில் அடிக்கடி வாகன நெரிசல் ஏற்படுவதால், பெய்ஜிங் பகுதியில் பெரும் காற்று மாசு ஏற்படுகிறது என்றும் புகார் கூறப்படுகிறது.

இந்த சுங்கச்சாவடி மேலிருந்து பார்க்க, 50 வழி சாலை போல தோன்றினாலும், அது சாலை முழுக்க அல்ல. சுங்கச்சாவடி கடக்கும் முன்பாக சிறிது தொலைவும், கடந்த பின் சிறிது தொலைவும் என மொத்தம் சுமார் 1000 மீ வரை 25 வழிகளுடன் தோன்றும் சுங்கச்சாவடி சாலை பின்னர் படிப்படியாக, 4 வழிச் சாலையாக மாறிவிடுகிறது.

இதுபற்றிய புகைப்படங்களை காண கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

WhatsOnWeibo Link

இந்த சாலை சுமார் 2300 கிமீ நீளம் உள்ளதாகும். காரில் இந்த சாலை முழுவதும் கடக்க, 25 மணிநேரம் ஆகும் என கூகுளில் தேடியபொழுது விவரம் கிடைத்தது.

Google Map Link

குறிப்பிட்ட சுங்கச்சாவடி தொடர்பான வீடியோ கீழே தரப்பட்டுள்ளது.

இதேபோல, அந்த சுங்கச்சாவடி பற்றி தொடர்பான செயற்கைக்கோள் படமும், கூகுள் மேப் உதவியுடன் கீழே இணைக்கப்பட்டுள்ளது.

எனவே, இந்த சாலை முழுக்க 4 வழிதான் உள்ளது; குறிப்பிட்ட பெய்ஜிங் சவுத் டோல் கேட் பகுதியில்தான், இது 25 வழி கொண்டதாக விரிவடைந்து, பின்னர் மீண்டும் 4 வழியாகச் சுருங்கி விடுகிறது. வேறு எந்த இடத்திலும் இந்த சாலை இவ்வளவு வழிகளைக் கொண்டிருக்கவில்லை. எனவே, 2000 கிமீ நீளத்திற்கு, 20 முதல் 50 வழிச்சாலை கொண்டதாக விரிவடைகிறது என்று பகிரப்படும் தகவலில் முழு உண்மையில்லை.

PIB FactCheck LinkAfricacheck.org LinkSnopes.com Link

எனவே, இந்த சாலை முழுக்க 4 வழிதான் உள்ளது; குறிப்பிட்ட பெய்ஜிங் சவுத் டோல் கேட் பகுதியில்தான், இது 25 வழி கொண்டதாக விரிவடைந்து, பின்னர் மீண்டும் 4 வழியாகச் சுருங்கி விடுகிறது. வேறு எந்த இடத்திலும் இந்த சாலை இவ்வளவு வழிகளைக் கொண்டிருக்கவில்லை. இதன்மூலமாக, சீனாவில், 50 வழி சாலை இல்லை என்று தெளிவாகிறது.

அதேசமயம், இந்த புகைப்படம் குறிப்பிட்ட சுங்கச்சாவடியில் இருந்துதான் எடுக்கப்பட்டதா, என்பதற்கு தகுந்த ஆதாரம் நமக்கு கிடைக்கவில்லை. ஏனெனில், நாம் ஆய்வு செய்யும் சுங்கச்சாவடி புகைப்படங்கள் ஒரு மாதிரியாகவும், நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட புகைப்படத்தில் உள்ள காட்சி ஒரு மாதிரியாகவும் உள்ளது.

எனவே, குறிப்பிட்ட புகைப்படம் எங்கே எடுக்கப்பட்டது என்ற தெளிவில்லை; ஆனால், அதுபற்றி கூறப்படும் ‘’சீனாவில், 2000 கிமீ நீளத்திற்கு, 4 வழி சாலை ஒன்று, 20 முதல் 50 வழிச்சாலை கொண்டதாக விரிவடைகிறது,’’ என்ற தகவலில் முழு உண்மையில்லை என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

தகுந்த ஆதாரங்களின் அடிப்படையில் நாம் ஆய்வு மேற்கொண்ட தகவல் தவறானது என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. மேற்கண்ட கட்டுரை கடைசியாக 18.01.2021 அன்று திருத்தம் செய்யப்பட்டது. இதுதொடர்பாக, கூடுதல் ஆதாரம் கிடைத்தால், அதையும் வெளியிட தயாராக உள்ளோம்.

நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Avatar

Title:சீனாவில் 50 வழி சாலையா? முழு விவரம் இதோ!

Fact Check By: Pankaj Iyer

Result: Missing Context