‘’விளாடிமிர் புடின் தாயார் இரண்டாம் உலகப் போரில் குண்டு வீச்சில் உயிரிழந்துவிட்டதாக நினைத்து அடக்கம் செய்யப்பட்ட கதை,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் ஒரு கதை பகிரப்படுகிறது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

Facebook Claim Link I Archived Link

உண்மை அறிவோம்:
இரண்டாம் உலகப் போரின்போது, விளாடிமிர் புடினின் தந்தை சோவியத் ரஷ்ய கடற்படையில் இடம்பெற்றிருந்ததால், போர் முனைக்குச் சென்றுவிட்டார். மேலும், அவரது தாயார் செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் பகுதியில் தொழிற்சாலை ஒன்றில் பணிபுரிந்தார். போர் நடந்த காலக்கட்டத்தில், அந்த பகுதியை விட்டு லெனின்கிராட் பகுதிக்கு இடம்பெயர நேரிட்டதாகவும், அப்போது, ஒரு கட்டத்தில் பசி காரணமாக, அவரது தாயார் மயங்கி விழ நேரிட்டதாகவும் புடின் குறிப்பிட்டுள்ளார்.

அவரது குடும்பம், தாயார், உறவினர்கள் 2ம் உலகப் போர் காலத்தில் சந்தித்த அவலநிலை பற்றி புடின் விரிவான பதில் ஒன்றை ஊடகப் பேட்டி ஒன்றில் ஏற்கனவே அளித்திருக்கிறார். அதனை கீழே இணைத்துள்ளோம்.

Archive NYTimes Link

பசியின் காரணமாக, இந்த சம்பவம் நிகழ்ந்ததாக, புடின் கூறுகிறார். அதேசமயம், இதில், கூடுதல் தகவல் சேர்த்து, ‘’புடினின் தந்தை போர் முனையில் இருந்து வீடு திரும்பியபோது ஏராளமான சடலங்கள் வீட்டின் முன்னே புதைப்பதற்காகக் குவித்து வைக்கப்பட்டிருந்தன. அவற்றில் தனது மனைவியை போன்ற சடலமும் இருந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார். அந்த சடலத்தைக் கேட்டு பெற்று, தனது மனைவி உயிருடன் இருப்பதைக் கண்டுபிடித்து மீட்டார். இந்த தகவலை ஹிலாரி கிளிண்டன் எழுதியுள்ள Hard Choices புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்,’’ என தற்போது சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

மேற்கண்ட வகையில் ஹிலாரி கிளிண்டன் எழுதியுள்ள Hard Choices புத்தகத்தில் தகவல் இடம்பெற்றுள்ளதா என விவரம் தேடினோம்.

அடுத்தப்படியாக, நமக்கு இதுபற்றி கடந்த 2014ம் ஆண்டு தி டைம்ஸ் ஊடகம் வெளியிட்ட செய்தி ஒன்று கிடைத்தது.

அதில், ‘’கடந்த 2012ம் ஆண்டில் ரஷ்ய அதிபர் புடினை நான் விளாடியோவ்ஸ்க் நகரில் நேரில் சந்தித்துப் பேச நேரிட்டது. அப்போது, ‘1944ம் ஆண்டில் எனது தந்தை இரண்டாம் உலகப் போர் முடிவடைந்து, வீட்டிற்கு திரும்பியபோது, தன் வீட்டின் முன்னே பசி மற்றும் இதர நோய்கள் காரணமாக உயிரிழந்தோரின் சடலங்கள் குவியலாகக் கிடந்ததைப் பார்த்துள்ளார். இது 2ம் உலகப் போரின் கொடூரத்தை உணர்த்தும் வகையில் இருந்ததாக, பின்னாளில் என்னிடம் தெரிவித்தார். எனது தாய், தந்தை பாசிச ஜெர்மனி படைகள் நிகழ்த்திய இரண்டாம் உலகப் போர் அவலத்தின் நேரடி சாட்சிகள்,’ என்று என்னிடம் புடின் தெரிவித்தார். ஆனால், தற்போது அதில் புதிய தகவல்களை சேர்த்து, தனது தாயாரும் அந்த சடலங்களுக்கு இடையே சுய நினைவின்றி கிடந்தார், அதனைப் பார்த்து, தனது தந்தை மீட்டெடுத்தார் என புடின் பேசி வருகிறார். ஒரே கதையை வெவ்வேறு விதமாக அவர் கூறுவதால், இதன் மீது எனக்கு முழு நம்பிக்கை வரவில்லை,’’ என்று ஹிலாரி குறிப்பிட்டுள்ளார்.

The Times Link I Archived Link I Archived Collections

எனவே, ஹிலாரி கிளிண்டன் எழுதியுள்ள புத்தகத்தில் கூறியுள்ளது என்னவென்றால், ‘’ரஷ்ய அதிபர் புடின் ஒவ்வொரு முறையும் தனது தாயார் பற்றி நம்பகத்தன்மை இல்லாமல் கதைக்கிறார். ஆனால், என்னிடம் நேரில் பேசும்போது அவர் கூறியதற்கும், தற்போது அவர் கூறும் கதைக்கும் வித்தியாசம் உள்ளது. எனவே, இது நம்பும்படி இல்லை,’’ என்று சந்தேகமின்றி தெளிவாகிறது.

இதனை முழுதாகப் படிக்காமல், ஹிலாரி கிளிண்டன், புடினை சிலாகித்து எழுதியுள்ளதைப் போலக் குறிப்பிட்டு, சமூக வலைதளங்களில் பலரும் மேற்கண்ட வகையில் தகவல் பகிர்ந்து வருகின்றனர்.

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் நாம் ஆய்வு மேற்கொண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter Page I Google News Channel I Instagram

Avatar

Title:விளாடிமிர் புடினின் தாயார் பற்றி பகிரப்படும் கதை- உண்மை என்ன?

Fact Check By: Pankaj Iyer

Result: Missing Context