
‘’ஜேஎன்யூ மாணவர் சங்க தலைவர் போராட்ட களைப்பை புகைவிட்டு போக்குகிறார்,’’ என்ற தலைப்பில் பகிரப்பட்டும் வரும் புகைப்படம் ஒன்றை ஃபேஸ்புக்கில் காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.
தகவலின் விவரம்:

Facebook Claim Link | Archived Link |
எனும் ஃபேஸ்புக் ஐடி இந்த பதிவை வெளியிட்டுள்ளது. இதில் ஜேஎன்யூ மாணவர் சங்க தலைவர் சிகரெட் பிடிப்பதாகக் கூறி ஒரு இளம்பெண்ணின் புகைப்படத்தை பகிர்ந்துள்ளனர். இதனை பலரும் உண்மை என நம்பி வைரலாக ஷேர் செய்துவருகின்றனர்.
உண்மை அறிவோம்:
மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவின் கமெண்ட் பிரிவிலேயே இது தவறான புகைப்படம் என்று கூறி ஒருவர் உண்மையான ஜேஎன்யூ மாணவர் சங்க தலைவர் பற்றிய செய்தியை பகிர்ந்துள்ளதை காண முடிந்தது.

இதன்படி, டெல்லியில் உள்ள ஜேஎன்யூ எனப்படும் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள், சிஏஏ எனப்படும் குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து கடுமையான போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதையொட்டி, மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் மீது தீவிர வலதுசாரி அமைப்பினர் சமீபத்தில், பல்கலைக்கழக வளாகத்திற்குள்ளேயே நுழைந்து தாக்குதல் நடத்தினர். இதில், ஜேஎன்யூ மாணவர் சங்க தலைவர் ஆய்ஷி கோஷ் உள்பட பலர் பலத்த காயம் அடைந்தனர். இச்சம்பவம் இந்திய அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதையொட்டி, ஏராளமான வதந்திகள் சமூக ஊடகங்களில் பரவி வருகின்றன. அதில் ஒன்றுதான் மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவும். அதில் இருப்பவர் ஜேஎன்யூ மாணவர் சங்க தலைவர் ஆய்ஷி கோஷ் கிடையாது. யாரோ ஒரு இளம்பெண் சிகரெட் பிடிக்கும் புகைப்படத்தை எடுத்து தவறான தகவலை பரப்பியுள்ளனர்.

முடிவு:
உரிய ஆதாரங்களின்படி நாம் ஆய்வு செய்த ஃபேஸ்புக் பதிவில் தவறான தகவல் உள்ளதாக நிரூபிக்கப்பட்டுள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை உறுதிப்படுத்தாமல் மற்றவர்களுக்கு பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Title:ஜேஎன்யூ மாணவர் சங்க தலைவர் சிகரெட் பிடிக்கும் புகைப்படம் உண்மையா?
Fact Check By: Pankaj IyerResult: False
