
‘’திமுக தலைவராக பொறுப்பேற்பேன்,’’ என்று கனிமொழி கூறியதாக, சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் ஒன்றின் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

இதில், தந்தி டிவி பெயரில் வெளியான நியூஸ் கார்டு ஒன்றை இணைத்துள்ளனர். அதன் மேலே, ‘’தலைவர் ஸ்டாலின் மறைவுக்குப் பின் நான்தான் திமுக தலைவராக பொறுப்பேற்பேன் – கனிமொழி,’’ என்று எழுதப்பட்டுள்ளது.
இதனைப் பலரும் உண்மை என நம்பி வைரலாக ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
இந்தி மொழி திணிப்பு விவகாரம், நீட் தேர்வு விவகாரம் உள்ளிட்டவை தொடர்பாக, சமீப காலமாக, திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி காரசாரமான கருத்துகளை தெரிவித்து வருகிறார்.
இந்நிலையில், ஸ்டாலின் மறைவிற்குப் பின், திமுக தலைவராக நான்தான் வருவேன் என்று கனிமொழி கூறியதாக, மேற்கண்ட தகவலை பகிர்ந்து வருகின்றனர். உண்மையில், இப்படி அவர் பேசியிருக்க வாய்ப்பில்லை. குறிப்பிட்ட நியூஸ் கார்டு பற்றி ஆய்வு செய்தபோது, அதில் உள்ள ஃபாண்ட் உள்ளிட்டவை வித்தியாசமாக இருந்ததால், அது போலியானதாக இருக்கலாம் என்ற சந்தேகமே அதிகம் ஏற்பட்டது.

இதன்பேரில், தந்தி டிவியின் ஆன்லைன் பிரிவை தொடர்பு கொண்டு விளக்கம் கேட்டோம். ‘’இதனை நாங்கள் வெளியிடவில்லை. எங்களது பெயரில் யாரோ வேண்டுமென்றே இத்தகைய போலிச் செய்தியை உருவாக்கி வெளியிட்டுள்ளனர். இதனை உண்மை என நம்ப வேண்டாம்,’’ என்று குறிப்பிட்டனர்.
ஒருவேளை கனிமொழி இவ்வாறு கூறியிருந்தால், அது மிகப்பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கும். ஆனால், அப்படி எந்த செய்தியும் ஊடகங்களில் வெளியாகவில்லை என்பதை இங்கே சுட்டிக்காட்ட விரும்புகிறாம்.
முடிவு:
உரிய ஆதாரங்களின்படி மேற்கண்ட ஃபேஸ்புக் தகவல் தவறானது என்று நிரூபித்துள்ளோம். நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால் +91 9049044263 என்ற வாட்ஸ்ஆப் எண்ணிற்கு தகவல் தெரிவிக்கும்படி கேட்டுக் கொள்கிறோம்.
Title:திமுக தலைவராக வருவேன் என்று கனிமொழி சொன்னதாகப் பரவும் வதந்தி
Fact Check By: Pankaj IyerResult: False


