இந்தித் தொழிலாளர்கள் வெளியேற வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் கெடு விதித்தாரா?

வட மாநிலத் தொழிலாளர்கள் வருகிற மார்ச் 20ம் தேதிக்குள் தமிழ்நாட்டைவிட்டு வெளியேற வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கெடு விதித்துள்ளார் என்று வட இந்தியாவில் வதந்தி வைரலாக பகிரப்பட்டு வருகிறது. தகவலின் விவரம்: நம்முடைய ஃபேக்ட் கிரஸண்டோ வாசகர் ஒருவர் இந்தியில் பரவும் பதிவு ஒன்றை மொழிமாற்றம் செய்து நமக்கு அனுப்பியிருந்தார். இந்த வதந்தி பற்றி ஃபேக்ட் செக் செய்ய வேண்டும் என்று அவர் கேட்டிருந்தார். அதில், “தமிழ்நாட்டில் இந்தி தொழிலாளர்கள் கொல்லப்படுகின்றனர். மார்ச் 20ம் தேதிக்கு […]

Continue Reading

திமுக., ஆட்சியை வெளுத்து வாங்கும் பாட்டி என்று பரவும் 2020ம் ஆண்டு வீடியோ!

கோழிக்கு வரி, குஞ்சுக்கு வரி, அவுக ஆத்தாளுக்கு வரி என்று எல்லாவற்றுக்கும் வரி வசூலிக்கும் தமிழ்நாடு அரசு என்று தி.மு.க ஆட்சியை மூதாட்டி ஒருவர் வெளுத்து வாங்கினார் என்று வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive கிராமத்து மூதாட்டி ஒருவரிடம் “சொளையா ஆயிரம், ஆயிரம் வாங்குனே, எப்படி வாங்குனே?” என்று ஒருவர் கேள்வி எழுப்பும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. […]

Continue Reading

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை விமர்சித்தாரா கனிமொழி?

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை கனிமொழி விமர்சித்தார் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Instagram I Archive “மதுக்கடையை மூடுறேன், 10 மணிக்கு மேல் மது விற்பனை இல்லை என்று சொல்றாங்க, ஆனாலும் அதற்கு அப்புறம் 11, 12 மணிக்கு கூட விற்கப்படுகிறது என்பதை தெளிவாக அவங்களே எடுத்து போட்டிருக்காங்க. இதில் இருந்தே இந்த ஆட்சி மதுவிலக்கு கொள்கையில் எவ்வளவு உறுதியாக […]

Continue Reading

சட்டமன்றத்தில் இருந்து வெளிநடப்பு செய்தபின் ஆளுநர் ரவி தேசிய கீதத்திற்கு மரியாதை செலுத்தினாரா?

‘’ சட்டமன்றத்தில் இருந்து வெளிநடப்பு செய்தபின் ஆளுநர் ரவி தேசிய கீதத்திற்கு மரியாதை செலுத்தினார்,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் வீடியோ ஒன்றை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.  தகவலின் விவரம்: Facebook Claim Link l Archived Link  உண்மை அறிவோம்: சமீபத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசிக் கொண்டிருக்கும்போது, ஆளுநர் ரவி சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தார். அதுதொடர்பான வீடியோ மற்றும் செய்திகள் சமூக வலைதளங்களிலும், ஊடகங்களிலும் பரபரப்பாக பரவின.    tribuneindia.com […]

Continue Reading

டாஸ்மாக் மாவட்ட மேலாளர் அலுவலகங்கள் திமுக அலுவலகமாக மாற்றப்பட்டதா?

‘’டாஸ்மாக் மாவட்ட மேலாளர் அலுவலகங்கள் திமுக அலுவலகமாக மாற்றம்,’’ என்று குறிப்பிட்டு சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் ஒன்றின் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: Tweet Claim Link l Archived Link  உண்மை அறிவோம்: டாஸ்மாக் மாவட்ட மேலாளர் அலுவலகத்தை திமுக அலுவலகம் என்று குறிப்பிட்டு தமிழ்நாடு அரசாங்கம் மாற்றியதாகக் கூறப்படுவது தவறான தகவல். இதுபற்றி நாம் அரசு தலைமைச் செயலகம் தரப்பில் விசாரித்தபோது, ‘’இது அரசின் தவறு அல்ல. கூகுள் மொழிபெயர்ப்பில் […]

Continue Reading

கொடநாடு என்று கூறியதும் சட்டமன்றத்தில் இருந்து வெளியேறினாரா எடப்பாடி பழனிசாமி?

தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கொடநாடு பற்றிப் பேசத் தொடங்கியதும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வெளிநடப்பு செய்தார் என்று ஒரு வீடியோ பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive தமிழ்நாடு சட்டமன்றத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசும் போது எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக தற்காலிக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது அணியினர் அவையிலிருந்து வெளியேறுகின்றனர். முதலமைச்சர் பேசும் […]

Continue Reading

மோடியின் தாயார் மறைவுக்கு இரங்கல் கூறி திமுக கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டியதா?

மோடியின் தாயார் மறைவுக்கு இரங்கல் கூறி திமுக கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டியதாக, ஒரு செய்தி பரவுகிறது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: Facebook Claim Link l Archived Link  உண்மை அறிவோம்: குறிப்பிட்ட போஸ்டரை திமுக ஒட்டவில்லை. இது பாஜக சார்பாக ஒட்டப்பட்ட போஸ்டராகும். அதில் உள்ள எழுத்தின் வண்ணத்தை கறுப்பு சிவப்பு போன்றதாக மாற்றி, ஃபோட்டோஷாப் செய்து, இவ்வாறு வதந்தி பரப்புகின்றனர்.  இதற்கு மறுப்பு தெரிவித்து, திமுக ஐ.டி. […]

Continue Reading

தாம்பரம் மேயரின் குழந்தைக்கு திராவிட மாடல் என்று பெயர் சூட்டினாரா மு.க. ஸ்டாலின்?

தாம்பரம் மாநகராட்சி மேயர் குமாரி கமலக்கண்ணனின் குழந்தைக்கு திராவிட மாடல் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெயர் சூட்டினார் என்று ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive ஏபிபி நாடு என்ற ஊடகம் வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “தாம்பரம் மாநகராட்சி மேயர் குமாரி கமலக்கண்ணன் குழந்தைக்கு ” திராவிட மாடல் ” என பெயர் […]

Continue Reading

ஆறாம் வகுப்பு பாடப்புத்தகத்தில் சீட்டுக்கட்டு விளையாடுவது பற்றிய பாடம்- உண்மை என்ன?

6-ம் வகுப்பு பாடப்புத்தகத்தில் சீட்டுக்கட்டு விளையாட்டு பற்றிய பாடம்- உண்மை என்ன? ‘’6ம் வகுப்பு பாடப்புத்தகத்தில் ரம்மி விளையாடுவது எப்படி என்ற தலைப்பில் பாடம் இடம்பெற்றுள்ளது,’’ என குறிப்பிட்டு, சமூக வலைதளங்களில் ஒரு செய்தி பகிரப்படுகிறது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link I Archived Linkஇதனை வாசகர் ஒருவர் நமது வாட்ஸ்ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பி, அதன் நம்பகத்தன்மை பற்றி சந்தேகம் கேட்டிருந்தார். 01/12/2022 அன்று பதிவிடப்பட்டுள்ள […]

Continue Reading

மு.க.ஸ்டாலின் எம்.எல்.ஏ அலுவலகம் முன்பு தண்ணீர் தேங்கிய படம் 2022ல் எடுக்கப்பட்டதா?

மு.க.ஸ்டாலின் கொளத்தூர் சட்டமன்றத் தொகுதி அலுவலகம் தண்ணீரில் மூழ்கியதாக ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive மு.க.ஸ்டாலினின் கொளத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் மழை நீரில் மூழ்கியிருக்கும் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “மழைநீர் வடிகால் 4000 கோடி பேக்கேஜ். 10 வருஷமா சட்டமன்ற உறுப்பினர் இப்போ முதலமைச்சர். அவர் தொகுதி  அலுவலகத்தின் நிலைமை நேற்றுவரை… இதில் […]

Continue Reading

மு.க.ஸ்டாலின் தொகுதியில் தேங்கி நிற்கும் மழைநீர் என்று பரவும் வீடியோ உண்மையா?

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொகுதியான கொளத்தூரில் மழை நீர் தேங்கி நிற்கிறது என்று ஒரு வீடியோ மற்றும் புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: நம்முடைய வாசகர் ஒருவர் ஃபேக்ட் கிரஸண்டோ வாட்ஸ்அப் சாட்பாட் எண்ணுக்கு வீடியோ மற்றும் புகைப்படம் ஒன்றை அனுப்பி, இது உண்மையா என்று கேட்டிருந்தார். வீடியோவில் ஒரு முதியவர் தூய தமிழில் பேசுகிறார். கொளத்தூர் என்று வீடியோவில் குறிப்பிடப்பட்டுள்ளது. புகைப்படத்தில் “முரசொலி பேப்பரின் பொய் செய்தி  […]

Continue Reading

ஒரு லிட்டர் பெட்ரோல் விலையில் 41.55 ரூபாய் வரியை தமிழ்நாடு அரசு வசூலிக்கிறதா?

ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு ரூ.41.55ஐ தமிழ்நாடு அரசு வரியாக வசூலிக்கிறது என்பது போன்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive பெட்ரோல் நிலையத்தில் அறிவிப்புப் பலகை வைத்திருப்பது போன்று எடிட் செய்யப்பட்ட புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. அதில், “ அடிப்படை விலை 35.50 மத்திய அரசு வரி 19.50 மாநில அரசு வரி 41.55 விநியோகஸ்தர் 6.50 மொத்தம் 103.05.  […]

Continue Reading

ஒரே ஆண்டில் வாகன பராமரிப்புக்கு ரூ.51.64 கோடி செலவு என்று தி.மு.க அரசு கணக்கு காட்டியதா?

தி.மு.க அரசு அமைந்த பிறகு மதுரை மாநகராட்சியில் வாகன பராமரிப்புக்கு என்று ரூ.51.64 கோடி செலவு செய்யப்பட்டது போன்று பலரும் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர். இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive ஜூனியர் விகடன் வெளியிட்ட நியூஸ் கார்டை வைத்து பதிவிடப்பட்டுள்ளது. அதில், “வாகன ரிப்பேர் செலவு ரூ.51.64 கோடி… மிரள வைக்கும் மதுரை மாநகராட்சி கணக்கு!” என்று இருந்தது. நிலைத் தகவலில், “வாகன ரிப்பேர் […]

Continue Reading

மு.க.ஸ்டாலினை கேலி செய்து சன் நியூஸ் இந்த செய்தியை வெளியிட்டதா?

‘’மு.க.ஸ்டாலின் திமுக தலைவராக தேர்வு செய்யப்பட்டார் – The dictator படத்தின் காட்சியை இணைத்து செய்தி வெளியிட்ட சன் நியூஸ்,’’ என்று குறிப்பிட்டு சமூக வலைதளங்களில் பகிரப்படும் செய்தி ஒன்றை காண நேரிட்டது. தகவலின் விவரம்: Facebook Claim Link I Archived Link உண்மை அறிவோம்:கேலி செய்யும் நோக்கில் இந்த டெம்ப்ளே தயாரிக்கப்பட்டு, சமூக வலைதளங்களில் ஷேர் செய்யப்படுகிறது. ஆனால், இதனை பலர் உண்மை போலவே நம்பி பகிர்வதால், நாமும் குழப்பமடைய வேண்டியுள்ளது. உண்மையில், இப்படி […]

Continue Reading

மு.க.ஸ்டாலின் வெற்றுப் பேச்சு பேசுவதாக ஜூனியர் விகடன் அட்டைப் படம் வெளியிட்டதா?

ஸ்டாலின் வெற்றுப் பேச்சு பேசுவதாக, காற்று போன பலூன் போன்று ஜூனியர் விகடன் அட்டைப் படம் வெளியிட்டதாக சமூக ஊடகங்களில் பலரும் பகிர்ந்து வருகின்றனர். இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive ஜூனியர் விகடன் வெளியிட்டது போன்று அட்டை படம் பகிரப்பட்டுள்ளது. அதில், காற்று போன பலூன் போல ஸ்டாலின் பறப்பதாக படம் உருவாக்கப்பட்டிருந்தது. அதனுடன், “வெறும் பேச்சு! ஸ்டாலின் புஸ்ஸ்…” என்று இருந்தது. இந்த பதிவை […]

Continue Reading

மு.க.ஸ்டாலின் ஆட்சியில் போடப்பட்ட தார் சாலை என்று பரவும் படம் உண்மையா?

தமிழ்நாட்டில் ஸ்டாலின் ஆட்சியில் அமைக்கப்பட்ட சாலை என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive தெரு ஒன்றில் ஒரு சிறிய பகுதி மட்டும் தார் சாலை அமைத்து, வெள்ளை பெயிண்ட் கோடு போடப்பட்டுள்ள படத்தை வீடியோவாக பகிர்ந்துள்ளனர். பின்னணியில் ஸ்டாலின்தா வராரு என்ற தி.மு.க தேர்தல் பிரசார பாடல் ஒலிக்கிறது. நிலைத் தகவலில், “திருட்டு திராவிடத்தின் விடியலோ […]

Continue Reading

அதிமுக.,வின் கடைசி முதலமைச்சர் நான்தான் என்று எடப்பாடி பழனிசாமி கூறினாரா?

‘’அதிமுக சார்பாக, தமிழகத்தை ஆட்சி செய்த கடைசி முதலமைச்சர் நான்தான்,’’ என்று எடப்பாடி பழனிசாமி கூறியதாகக் குறிப்பிட்டு சமூக வலைதளங்களில் ஒரு செய்தி பகிரப்படுகிறது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Twitter Claim Link I Archived Link இதனை பலரும் உண்மை என நம்பி ட்விட்டர் மட்டுமின்றி ஃபேஸ்புக்கிலும் பகிர்வதைக் காண முடிகிறது. உண்மை அறிவோம்:சமீபத்தில், 44th Chess Olympiad சென்னை மாநகரில் பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே விமரிசையாக நடைபெற்றது. இதனை […]

Continue Reading

சென்னையில் திமுக ஆட்சியில் நிறுவப்பட்ட கான்கிரீட் வடிகால் பாதை இடிந்து விழுந்ததா?

சென்னையில் திமுக ஆட்சியில் கான்கிரீட்டால் நிறுவப்பட்ட வடிகால் பாதை இடிந்து விழுந்த பரிதாப காட்சி என்று குறிப்பிடப்பட்டு, பகிரப்படும் வீடியோ ஒன்றை சமூக வலைதளங்களில் கண்டோம். இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link I Archived Link இளைஞர் ஒருவர் நடந்து செல்லும்போது திடீரென கான்கிரீட் வடிகால் பாதை இடிந்து விழும் காட்சிகள் கொண்ட சிசிடிவி பதிவு ஒன்றை இந்த ஃபேஸ்புக் பதிவில் பகிர்ந்துள்ளனர். இதன் மேலே, ‘’சென்னையில் போடப்பட்ட […]

Continue Reading

ஃபோர்டு நிறுவனம் இந்தியாவில் உற்பத்தியை நிறுத்த தி.மு.க அரசு காரணமா?

ஃபோர்டு இந்தியா நிறுவனம் தன்னுடைய செயல்பாட்டை நிறுத்திக் கொள்வதற்கு தி.மு.க அரசு தான் காரணம் என்பது போன்று பதிவுகள் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகின்றன. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive சென்னை மறைமலைநகரில் உள்ள ஃபோர்டு தொழிற்சாலையில் வெளியான கடைசி காருக்கு ஊழியர்கள் கண்ணீர் மல்க விடை கொடுத்தது தொடர்பாக புதிய தலைமுறை வெளியிட்ட நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “இந்த விடியல் […]

Continue Reading

2019ம் ஆண்டு வீடியோவை எடுத்து திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டது என்று பரப்பும் நெட்டிசன்கள்!

கடந்த 2019ம் ஆண்டு சென்னை நுங்கம்பாக்கத்தில் இளைஞர்கள் நான்கு பேர் சேர்ந்து காவலர் ஒருவரை தாக்கிய வீடியோவை தற்போது தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர் குலைந்துவிட்டது என்று குறிப்பிட்டு சிலர் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive காவலர் ஒருவரை நான்கு – ஐந்து இளைஞர்கள் தாக்கும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “விடியல் ஆட்சியில் சட்டம் ஒழுங்கு காற்றில் பறக்குது. போலீஸுக்கே தண்ணி திமுகவினர். அதிகாரம் […]

Continue Reading

அரை மண்டைத்தனமாக பேசாதீர்கள் என்று மு.க.ஸ்டாலினை ஊடகவியலாளர் விஷன் விமர்சித்தாரா?

அனைவரும் கல்வி கற்க வேண்டும் என்று கூறியதற்கு எதிராக, அரைமண்டைத்தனமாக பேசாதீர்கள் முதல்வரே என ஊடகவியலாளர் ஒருவர் கூறினார் என நியூஸ் 7 தமிழ் நியூஸ் கார்டு வெளியிட்டது என்று சமூக ஊடகங்களில் வதந்தி பரவி வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive நியூஸ் 7 தமிழ் வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “அரமண்டை தனமாக பேசாதீர்கள்! மெக்காலே கல்வி முறையை ஏற்றுக்கொண்டு […]

Continue Reading

காபி, மிக்சர் செலவு ரூ.47 கோடி என உலக வங்கியிடம் தி.மு.க அரசு அறிக்கை கொடுத்ததா?

நீர்வள நிலவளத்திட்ட பணிகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டங்களில் வழங்கிய காபி, மிக்சருக்கு ரூ.47 கோடி செலவு ஆனது என தி.மு.க அரசு அறிக்கை அளித்தது என ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive மு.க.ஸ்டாலின் புகைப்படத்துடன் தினகரன் நாளிதழில் வெளிவந்த செய்தி புகைப்படத்தை இணைத்து பதிவு உருவாக்கப்பட்டுள்ளது. தினகரன் நாளிதழில், “நீர்வள நிலவளத்திட்ட பணிகள் தொடர்பான ஆலோசனை கூட்டத்தில் […]

Continue Reading

Explainer: நீட் தேர்வின் அருமையைப் புரிந்துகொண்ட முதல்வர் என்று தகவல் பரப்பும் நெட்டிசன்கள்!

மயிலாடுதுறை மாவட்டத்தில் மீன்களை சுத்தம் செய்துகொடுக்கும் வேலை செய்து வரும் பெண் ஒருவர் தன் மகளை மருத்துவம் படிக்க வைத்தார் என்ற செய்தி ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. அந்த பெண்ணை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைத்து வாழ்த்தியதன் மூலம் நீட் தேர்வின் அவசியத்தை முதல்வர் புரிந்துகொண்டார் என்று சிலர் ஃபேஸ்புக்கில் பகிர்ந்து வரவே, இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive புதிய தலைமுறை வெளியிட்ட நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், […]

Continue Reading

10 மாதங்களில் செய்த சாதனை என மு.க.ஸ்டாலின் கூறியதாக பரவும் விஷம நியூஸ் கார்டு!

கொலை, கொள்ளை, கற்பழிப்பு என அ.தி.மு.க 10 ஆண்டுகளில் செய்யாததை, 10 மாதங்களில் செய்துள்ளோம் என மு.க.ஸ்டாலின் கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive சாணக்யா என்ற யூடியூப் சேனல் வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின். அதிமுக 10 ஆண்டுகளில் செய்யாததை, நாங்கள் 10 மாதங்களில் செய்துள்ளோம். […]

Continue Reading

மே 18 முதல் பஸ் கட்டணம் உயர்கிறது என்று மு.க.ஸ்டாலின் அரசு அறிவித்ததா?

தமிழ்நாட்டில் 2022 மே 18 முதல் பஸ் கட்டணம் உயர்த்தப்படுகிறது என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive மே 18 முதல் பேருந்து கட்டணம் உயர்வு என்று மொட்டையாக ஒரு புகைப்பட பதிவு பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “லிடியலரசின் மற்றுமொரு மைல்கல். சீரழிந்த முதலாண்டு  சந்தி சிரிக்கும் அடுத்த ஆண்டு” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த பதிவை பாலமுருகன் […]

Continue Reading

ஸ்டாலின் அணிந்த கூலிங் ஜாக்கெட் விலை ரூ. 17 கோடி என்று பிடிஆர் கூறினாரா?

துபாய் சென்ற தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அணிந்திருந்த கூலிங் ஜாக்கெட் விலை ரூ.17 கோடி என்று தமிழக நிதித்துறை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கூறினார் என்று ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive மு.க.ஸ்டாலின் புகைப்படத்துடன் நியூஸ் 7 தமிழ் வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “கூலிங் ஜாக்கெட் 17 கோடி. துபாய் […]

Continue Reading

அரசுப் பேருந்துகள் நிற்கும் ஓட்டல்கள் சைவமா, அசைவமா? தமிழ்நாடு அரசு கூறியது என்ன?

‘’சைவ ஓட்டல்களில் மட்டுமே அரசுப் பேருந்துகள் நிற்க வேண்டும் என தமிழ்நாடு அரசு உத்தரவிடவில்லை. ஊடகங்கள் வதந்தி பரப்புகின்றன,’’ என்று குறிப்பிட்டு, சமூக வலைதளங்களில் திமுக ஆதரவாளர்கள் பகிரும் தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: Twitter Claim Link I Archived Link உண்மை அறிவோம்:தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழகங்கள் மற்றும் அரசு விரைவுப் போக்குவரத்து கழகம் (SETC) சார்பாக இயக்கப்படும் பேருந்துகள் உணவு இடைவெளியின்போது சாலையோர ஓட்டல்களில் நின்று செல்வது வழக்கம். இதற்காக, […]

Continue Reading

தி.மு.க-வில் இருந்து கனிமொழி விலக உள்ளதாக நியூஸ் 7 செய்தி வெளியிட்டதா?

திமுக-வில் இருந்து கனிமொழி விலக உள்ளதாக நியூஸ் 7 தமிழ் வெளியிட்டது போன்று ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive கனிமொழி மற்றும் மு.க.ஸ்டாலின் புகைப்படங்களுடன் நியூஸ் 7 தமிழ் வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “கனிமொழி திமுகவில் இருந்து விலகல்? திமுகவில் அதிகரித்து வரும் பாலியல் நடவடிக்கைகளை கண்டிக்கும் விதமாக கட்சியில் இருந்து […]

Continue Reading

உள்ளாட்சித் தேர்தல்: தி.மு.க 60 இடங்களில் டெபாசிட் இழந்தது என்று பரவும் வதந்தி!

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக 60 வார்டுகளில் டெபாசிட் இழந்தது என்று ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive மு.க.ஸ்டாலின், உதய சூரியன் சின்னத்துடன் கூடிய ஏபிபி நாடு வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “ஆளும் திமுக 60 இடங்களில் டெபாசிட் இழந்தது. பெரும்பாலான இடங்களில் பாஜக வேட்பாளர்களிடம் டெபாசிட் இழந்தது திமுக” […]

Continue Reading

நீட் தேர்வை கண்டித்து தற்கொலை செய்துகொள்வேன் என்றாரா மு.க.ஸ்டாலின்?

‘’நீட் தேர்வை எதிர்த்து தற்கொலை செய்துகொள்வேன்,’’ என்று மு.க.ஸ்டாலின் கூறியதாக, ஒரு நியூஸ் கார்டு சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. அதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: Facebook Claim Link I Archived Link உண்மை அறிவோம்:குறிப்பிட்ட நியூஸ் கார்டை பார்த்தாலே அது எடிட் செய்யப்பட்டு, ‘’தற்கொலை’’ என்ற வார்த்தையை புதியதாக சேர்த்துள்ளனர் என்று தெரிகிறது. பார்க்கும்போதே போலி என்று தெரியும் இந்த நியூஸ் கார்டை பலரும் உண்மை என நம்பி கேலி […]

Continue Reading

ஸ்டாலின் டீ குடித்ததால் கடையை மூடிய உரிமையாளர் என்று பரவும் வதந்தி!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டீ குடித்ததால் கடை விளங்கவில்லை என்று கடையை நிரந்தரமாக மூடிய டீ கடை உரிமையாளர் என்று ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive மு.க.ஸ்டாலின் டீ குடிக்கும் புகைப்படத்துடன் கூடிய ஏபிபி நாடு வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில் “ஸ்டாலின் டீ குடித்ததில் இருந்து கடை விளங்கவில்லை என்று கடையை நிரந்தரமாக […]

Continue Reading

மு.க.ஸ்டாலின் ஏற்படுத்தும் சமூக நீதி அமைப்பில் சேர முடியாது என்று மம்தா பானர்ஜி கூறினாரா?

ஸ்டாலின் ஏற்படுத்தியுள்ள சமூக நீதி அமைப்பில் சேர வேண்டிய அவசியமில்லை என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive மம்தா பானர்ஜி புகைப்படத்துடன் கூடிய தந்தி டிவி நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “ஸ்டாலினுக்கு மம்தா பேனர்ஜி பதிலடி. ஸ்டாலின் ஏற்படுத்தியுள்ள சமூக நீதி அமைப்பில் சேர […]

Continue Reading

தமிழ்நாடு முதலமைச்சர் பதவியை விட்டு விலக தயார் என்று மு.க.ஸ்டாலின் கூறினாரா?

சமூக நீதியை காக்க தமிழ்நாடு முதலமைச்சர் பதவியை விட்டு விலக தயார் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாக, ஒரு செய்தி பரவுகிறது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link I Archived Link உண்மை அறிவோம்: மருத்துவப் படிப்புகளுக்காக நடத்தப்படும் நீட் தேர்வுக்கு தமிழ்நாடு போன்ற மாநில அரசுகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. எனினும், மத்திய அரசு இதனை கண்டும் காணாதது போல செயல்படுவதாக, கல்வி ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். […]

Continue Reading

ஆளுநர் மாளிகையை முற்றுகையிடும்படி மு.க.ஸ்டாலின் கட்டாயப்படுத்துகிறார் என்று வேல்முருகன் கூறினாரா?

ஆளுநர் மாளிகையை முற்றுகையிட முதல்வர் மு.க.ஸ்டாலின் தங்களைக் கட்டாயப்படுத்துகிறார் என்று வேல்முருகன் எம்.எல்.ஏ கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் எம்.எல்.ஏ புகைப்படத்துடன் கூடிய புதிய தலைமுறை நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அதில், “ஆளுநர் மாளிகையை முற்றுகையிடக் கூறி முதல்வர் ஸ்டாலின் எங்களை […]

Continue Reading

பொங்கல் பரிசுத் தொகுப்பு; தமிழ்நாட்டு மக்களை மு.க.ஸ்டாலின் விமர்சித்தாரா?

‘’இலவச பொங்கல் பரிசுத் தொகுப்பு விவகாரத்தில் தமிழ்நாட்டு மக்களை விமர்சித்த மு.க.ஸ்டாலின்,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் செய்தி ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: இதனை வாசகர் ஒருவர் +91 9049053770 என்ற நமது வாட்ஸ்ஆப் சாட்போட் எண்ணிற்கு அனுப்பி உண்மையா என கேட்டனர். இதன்பேரில் நாமும் தகவல் தேடியபோது ஃபேஸ்புக்கில் இதனை பலரும் உண்மை என்று நம்பி ஷேர் செய்வதைக் கண்டோம். Facebook Claim Link […]

Continue Reading

விவசாய, கல்விக் கடன் தள்ளுபடி போன்ற வாக்குறுதிகளை நிறைவேற்றுவது சாத்தியமில்லை என்று ஸ்டாலின் கூறினாரா?

கல்விக் கடன், விவசாயக் கடன் தள்ளுபடி வாக்குறுதியைத் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக கூறினோம். அதைத் தள்ளுபடி செய்வது சாத்தியமில்லை என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive மு.க.ஸ்டாலின் புகைப்படத்துடன் கூடிய ஜூனியர் விகடன் நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “கல்விக் கடன், விவசாய கடன்களைத் தள்ளுபடி செய்வதாக தேர்தலில் வெற்றி பெறுவதற்காக […]

Continue Reading

குடியரசு தின அணிவகுப்பில் கருணாநிதி சிலை நீக்கம்; மு.க.ஸ்டாலின் விளக்கம் கூறியதாகப் பரவும் வதந்தி…

‘’குடியரசு தின அணிவகுப்பில் இடம்பெற்றிருந்த கருணாநிதி சிலை நீக்கப்பட்டது பற்றி மு.க.ஸ்டாலின் விளக்கம்,’’ எனக் குறிப்பிட்டு ஒரு செய்தி சமூக வலைதளங்களில் பாலிமர் நியூஸ் லோகோவுடன் பகிரப்படுகிறது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர் ஒருவர் +91 9049053770 என்ற நமது வாட்ஸ்ஆப் சாட்போட் எண்ணில் உண்மையா எனக் கேட்டு சந்தேகம் எழுப்பியிருந்தார். இந்த செய்தியை ஃபேஸ்புக்கிலும் பலர் பகிர்வதைக் கண்டோம். Facebook Claim Link I Archived Link உண்மை […]

Continue Reading

மு.க.ஸ்டாலினுக்கு கொரோனா, அமைச்சர்களுக்கு இடையே மோதல் என்று வதந்தி பரப்பும் விஷமிகள்!

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கொரோனா என்றும் அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்றும் ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகைப்படத்துடன் கூடிய தந்தி டிவி நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “தமிழக முதலமைச்சருக்கு கொரனா தொற்று. தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களுக்கு கொரனா தொற்று உறுதி சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு […]

Continue Reading

நல்லாட்சி குறியீட்டில் தமிழ்நாட்டுக்கு 18வது இடம் கிடைத்ததா?

மாநில அரசுகளின் நிர்வாகம் குறித்த தரவரிசைப் பட்டியலான குட் கவர்னன்ஸ் இன்டெக்ஸ் பட்டியலில் தமிழ்நாடு 18வது இடம் பிடித்தது என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அஸ்ஸாம் முதல்வர் ஆகியோர் படத்துடன் புகைப்பட பதிவு உருவாக்கப்பட்டுள்ளது. அதில், “மாநில அரசுகள் நிர்வாகம் குறித்த தரவரிசைப் பட்டியல் ஒன்றை Good Governance Index என்ற […]

Continue Reading

திமுக ஆட்சிக்கு வந்த பிறகு வளர்ச்சி பெறும் மாநிலங்கள் பட்டியலில் தமிழ்நாடு 11வது இடத்துக்கு தள்ளப்பட்டதா?

தி.மு.க ஆட்சிக்கு வந்த ஆறு மாதங்களில் வளர்ச்சி பெறும் மாநிலங்கள் பட்டியலில் 3வது இடத்தில் இருந்து 11வது இடத்துக்கு தள்ளப்பட்டது என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive நியூஸ் 7 தமிழ் வெளியிட்ட நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “வெள்ளை அறிக்கை. வளர்ச்சி பெறும் மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாடு 3வது இடத்திலிருந்து 11வது இடத்திற்கு தள்ளப்பட்டது” […]

Continue Reading

ஒமிக்ரான்; தமிழ்நாடு அரசு முழு ஊரடங்கு அறிவித்ததா?- தந்தி டிவி பெயரில் வதந்தி…

‘’தமிழ்நாடு அரசு ஒமிக்ரான் பரவல் காரணமாக ஜனவரி முதல் மார்ச் வரை முழு ஊரடங்கு அறிவித்துள்ளது,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் ஒரு செய்தி பகிரப்படுகிறது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: இதனை வாசகர் ஒருவர் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+91 9049053770) அனுப்பி, உண்மையா என சந்தேகம் கேட்டிருந்தார். இதனை பலரும் உண்மை என நம்பி ஃபேஸ்புக்கில் பகிர்வதைக் கண்டோம். FB Claim Link I Archived Link உண்மை அறிவோம்:கொரோனா […]

Continue Reading

ஸ்டாலின் எங்கள் கால்களை நக்குகிறார் என்று பாஜக-வின் நாராயணன் கூறினாரா?

ஸ்டாலின் எங்கள் கால்களை நக்குகிறார் என்று தமிழ்நாடு பாஜக செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி கூறியதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive சத்யம் டிவி வெளியிட்ட யூடியூப் வீடியோ முகப்பை ஸ்கிரீன்ஷாட் எடுத்தது போன்று ஒரு பதிவு பகிரப்பட்டுள்ளது. அதில், “ஸ்டாலின் எங்கள் கால்களை நக்குகிறார் பாஜக தலைவரின் திமிர் பேச்சு” என்று இருந்தது. அதற்கு […]

Continue Reading

தமிழ்நாடு அரசு ஊழியர் ஓய்வு பெறும் வயது குறைக்கப்பட்டதா?

தமிழ்நாடு ஊழியர்களுக்கு ஓய்வு வயது 58 ஆக குறைக்கப்பட்டது என்று ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive புதிய தலைமுறை வெளியிட்டது போன்ற நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “தமிழக அரசு ஊழியர்களுக்கு ஓய்வு வயது 58 ஆகக் குறைப்பு அமல்..! 05-01-2022 முதல் அரசாணை வெளியீடு” என்று இருந்தது. இந்த பதிவை பசும்பொன் தாரா என்ற […]

Continue Reading

FACT CHECK: தமிழகத்தில் அரசு பேருந்து ஓட்டுநர் தாக்கப்பட்டார் என்று பரவும் வீடியோ உண்மையா?

தமிழ்நாட்டில் அரசு பேருந்து ஓட்டுநர் தாக்கப்பட்டார் என்றும், தி.மு.க ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுவிட்டது என்றும் கூறி ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook 1 I Facebook 2 I Archive பேருந்து ஓட்டுநர் ஒருவரை இளைஞர் தாக்கும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “விடியா திமுக ஆட்சியில் மிக மோசமான நிலையில் தமிழகத்தின் சட்டம் ஓழுக்கு சீர் […]

Continue Reading

FACT CHECK: தி.மு.க ஆட்சியில் கடன் வாங்குவதில் தமிழ்நாடு முதலிடம் பிடித்ததா?

தி.மு.க ஆட்சியில் தமிழ்நாடு கடன் வாங்குவதில் முதலிடம் பிடித்தது என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive அதிக கடன் வாங்கிய மாநிலங்கள் என்று ஒரு இந்திய வரைபடம் வெளியிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “தமிழ்நாடு முதலிடம் கடன் வாங்கியதில் Credite goes to whom? கடன், தமிழ்நாடு, திமுக அராஜகம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பதிவை ராம் […]

Continue Reading

FACT CHECK: சீனப் போரின் போது தமிழக முதல்வராக அண்ணா இருந்தார் என்று மு.க.ஸ்டாலின் கூறினாரா?

இந்தோ – சீனப் போரின் போது இந்திய ஆட்சிக்கு உறுதுணையாக இருந்தது அப்போதைய அண்ணாவின் ஆட்சி என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive சன் நியூஸ் வெளியிட்ட நியூஸ் கார்டை வைத்துப் பதிவு உருவாக்கப்பட்டுள்ளது. சன் நியூஸ் கார்டு பகுதியில், “திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உரை! திமுகவுக்கு யாரும் […]

Continue Reading

FACT CHECK: தி.மு.க அரசு ஆரம்பித்த பெண்களுக்கான மதுக்கடை என்று பரவும் படம் உண்மையா?

விடியல் அரசின் பெண்களுக்கான மதுக் கடை என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: நம்முடைய வாசகர் ஒருவர் நம்முடைய ஃபேக்ட் கிரஸண்டோ சாட்பாட் வாட்ஸ் அப் எண்ணுக்கு புகைப்படம் ஒன்றை அனுப்பி அது உண்மையா என்று கேள்வி எழுப்பியிருந்தார். மதுக்கடை ஒன்றில் பெண் ஒருவர் அமர்ந்திருக்கும் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. அதன் மேல், “விடியல் அரசின் மம்மி மதுக் கடை” என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.  அசல் […]

Continue Reading

FACT CHECK: கயிறு கட்டி ஆற்றைக் கடக்கும் மாணவர்கள் புகைப்படம் தமிழ்நாட்டில் எடுக்கப்பட்டதா?

கயிறு கட்டி, அதன் மீது நடந்து செல்லும் பள்ளி மாணவர்கள் புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. தமிழகத்தில் இப்படி ஒரு சூழல் இருப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தும் வகையில் இந்த பதிவு உள்ளதால் இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive பள்ளிக்கூட மாணவர்கள் ஆற்றைக் கடக்க, இரண்டு மரங்கள் இடையே கயிறு கட்டி, அதன் மீது நடந்து செல்லும் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. அதன் மீது, “பாலம் […]

Continue Reading

FACT CHECK: தி.மு.க ஆட்சியில் மதுரையில் பெண்களுக்கு தனி பார் திறக்கப்பட்டதா?

தி.மு.க ஆட்சியில் பெண்களுக்கு என்று தனியாக மது பார் திறக்கப்பட்டது என்று சமூக ஊடகங்களில் சிலர் பதிவிட்டு வருகின்றனர். இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive பெண் ஒருவர் மது அருந்தும் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “தமிழ் வளர்த்த மதுரையில் பெண்களுக்காக தனி பார் அமைத்து விடியல் சாதனை” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பதிவை Balachandar Nagarajan என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்ட நபர் 2021 […]

Continue Reading

FACT CHECK: நிதி உதவிக்காக மத்திய அரசு என்று கூறினாரா மு.க.ஸ்டாலின்?

ஒன்றிய அரசு என்று கூறி வந்த மு.க.ஸ்டாலின், நிதி உதவி பெறுவதற்காக மத்திய அரசு என்று குறிப்பிட்டுள்ளார் என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive “நெடுஞ்சாலைத் திட்டம்: பிரதமர் மோடிக்கு ஸ்டாலின் கடிதம்!” என்று அச்சு ஊடகம் ஒன்று வெளியிட்ட செய்தியின் புகைப்படத்தை யாரோ ஒருவர் சமூக ஊடகத்தில் பதிவிட்டதை ஸ்கிரீன்ஷாட் எடுத்துப் பதிவிட்டுள்ளனர். செய்தியில் மத்திய […]

Continue Reading