
‘’ஊரடங்கு காலத்தில் கிண்டி கத்திப்பாரா பாலம்,’’ என்ற தலைப்பில் பகிரப்பட்ட ஒரு புகைப்படத்தை ஃபேஸ்புக்கில் காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

உண்மை அறிவோம்:
மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில் உள்ள புகைப்படம் பார்க்க வேடிக்கையாக இருந்தாலும், ஊரடங்கு காலத்தில் வீட்டில் முடங்கியுள்ள பொதுமக்கள் சமூக ஊடகங்களையே அதிகம் நம்பியுள்ளனர். அவற்றில் பகிரப்படும் தகவல்கள் எதுவாக இருந்தாலும், அவர்களை குழப்புவதாக இருக்கக்கூடாது என்ற நோக்கில், இதனை நாம் ஆய்வு செய்தோம்.
இதன்படி, கிண்டி கத்திப்பாரா என்று கூகுள் உள்பட எந்த இணையதளத்தில் தேடினாலும், அது சென்னையில் உள்ள கிண்டி கத்திப்பாரா மேம்பாலம் தொடர்பான முடிவுகளையே காட்டுகிறது.

எனவே, இவர்கள் குறிப்பிடும் புகைப்படம் எங்கே உள்ளது என ரிவர்ஸ் இமேஜ் தேடல் செய்தோம். அது, துபாயில் உள்ள புர்ஜ் கலிஃபா பகுதியை ஒட்டி அமைந்துள்ள மேம்பாலம் என தெரியவந்தது.
அந்த புகைப்படத்தை நன்றாக பார்த்தால், அதில் புர்ஜ் கலிஃபா டவர் இருப்பதை தெளிவாகக் காணலாம்.

இந்த இடத்தை கூகுள் மேப்புடன் ஒப்பிட்டு சரிபார்த்தோம். அதில், இது துபாயில் புர்ஜ் கலிஃபா முன் உள்ள மேம்பாலம்தான் என்று தெளிவானது. இதுதொடர்பான செய்தி ஆதாரம் ஒன்றையும் கீழே இணைத்துள்ளோம்.

எனவே, துபாயில் உள்ள புகைப்படத்தை எடுத்து கிண்டி கத்திப்பாரா மேம்பாலம் என தவறான தகவல் பரப்பியுள்ளனர் என்று தெளிவாகிறது.

முடிவு:
உரிய ஆதாரங்களின்படி நாம் ஆய்வு செய்த ஃபேஸ்புக் பதிவில் தவறான தகவல் உள்ளதாக நிரூபித்துள்ளோம். இதுபோன்ற தகவலை கொரோனா வைரஸ் ஊரடங்கு காலத்தில் பகிர்ந்து சாமானிய மக்களை குழப்ப வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Title:ஊரடங்கு காலத்தில் கிண்டி கத்திப்பாரா பாலம்: தவறான புகைப்படம்…
Fact Check By: Pankaj IyerResult: False
