நெல்லை கண்ணன் தலைமறைவாக உள்ளாரா?

அரசியல் | Politics தமிழகம்

நெல்லை கண்ணன் தலைமறைவாக உள்ளதாகக் கூறி ஃபேஸ்புக்கில் பகிரப்பட்ட ஒரு பதிவை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.

தகவலின் விவரம்:

Facebook Claim LinkArchived Link 

Students Against Corruption 2.0

எனும் ஃபேஸ்புக் ஐடி இந்த பதிவை வெளியிட்டுள்ளது. இதேபோல, நிறைய பேர் நெல்லை கண்ணன் தலைமறைவு எனக் கூறி கடந்த 24 மணிநேரத்தில் வரிசையாக பதிவு வெளியிட்டுள்ளதைக் காண முடிகிறது. 

உண்மை அறிவோம்:
அமித் ஷா, மோடி பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாகக் கூறி, நெல்லை கண்ணன் மீது பாஜக.,வினர், அஇஅதிமுகவினர் சார்பாக, போலீசில் புகார் கூறப்பட்டு வருகிறது. இதுவரையிலும் அவர் மீது மூன்று பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர் எந்த நேரத்திலும் கைது செய்யப்படும் சூழல் உள்ளது. அத்துடன், அவரை கைது செய்ய வலியுறுத்தி நெல்லையில் உள்ள அவரது வீட்டை பாஜக உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் முற்றுகையிட்டதால் பெரும் பரபரப்பு நிலவுகிறது.

Thanthi TV News Link Maalaimalar.com Link 

அதேசமயம், ஏற்கனவே நெல்லை கண்ணன் இதய அறுவை சிகிச்சை செய்துகொண்டுள்ளார். இதனால், உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில்தான் உள்ளார். அத்துடன், தற்போது போலீஸ் கைது செய்யுமோ என்ற அச்சம் காரணமாக, அவரது உடலில் பல்ஸ் அதாவது இதய துடிப்பு மிகவும் குறைய தொடங்கியுள்ளது. இதன்காரணமாக, டிசம்பர் 31 அன்று பிற்பகலில் நெல்லை கண்ணனை, ஆம்புலன்ஸ் உதவியுடன் திருநெல்வேலி வடக்கு பைபாஸ் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், அவரை சம்பந்தப்பட்ட மருத்துவமனை நிர்வாகம் அனுமதிக்க மறுத்துவிட்டது. இதற்கிடையே, அங்கும் பாஜக.,வினர் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து, நெல்லை கண்ணன் வேறொரு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அவரது உடல்நிலை பற்றி முழு விவரம் தெரிந்த பின், கைது செய்வது பற்றி முடிவு செய்யப்படும் என்று நெல்லை போலீசார் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. 

Tamil One India LinkVikatan News Link 

எனவே, சர்ச்சைக்குரிய பேச்சை பேசியது முதலாக, டிசம்பர் 31ம் தேதி பிற்பகல் வரையிலும் நெல்லை கண்ணன் அவரது வீட்டில்தான் இருந்துள்ளார். அவர் எங்கேயும் தலைமறைவாகவில்லை. அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது உண்மைதான். நெல்லை கண்ணன் தலைமறைவு என கடந்த 24 மணிநேரமாக பகிரப்பட்ட ஃபேஸ்புக் தகவல்களில் எந்த உண்மையும் இல்லை என உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:
உரிய ஆதாரங்களின்படி, மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில் பாதி உண்மை, பாதி தவறான தகவல் உள்ளதாக நிரூபிக்கப்பட்டுள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை உறுதிப்படுத்தாமல் மற்றவர்களுக்கு பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். 

Avatar

Title:நெல்லை கண்ணன் தலைமறைவாக உள்ளாரா?

Fact Check By: Pankaj Iyer 

Result: Partly False

1 thought on “நெல்லை கண்ணன் தலைமறைவாக உள்ளாரா?

Comments are closed.