விபச்சார வழக்கில் சமூக செயற்பாட்டாளர் சுந்தரவள்ளி கைது செய்யப்பட்டாரா?

அரசியல் | Politics சமூக ஊடகம் | Social

‘’விபச்சார வழக்கில் சமூக செயற்பாட்டாளர் சுந்தரவள்ளி கைது செய்யப்பட்டார்,’’ என்ற தலைப்பில் ஃபேஸ்புக்கில் பகிரப்பட்ட ஒரு பதிவை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.

தகவலின் விவரம்:

Facebook Claim Link Archived Link 

Sakthi Vel

எனும் ஃபேஸ்புக் ஐடி இந்த பதிவை பகிர்ந்துள்ளார். இதில், சுந்தரவள்ளி புகைப்படத்தை பகிர்ந்து, புதிய தலைமுறை நியூஸ் கார்டு போல உள்ள டெம்ப்ளேட்டில், ‘’இளம்பெண்களை கட்டாயப்படுத்தி விபச்சாரத்தில் ஈடுபட வைத்த தோழர் சுந்தரவள்ளி சென்னையில் கைது,’’ என்று எழுதியுள்ளனர். இதனை பலரும் உண்மை என நம்பி வைரலாக ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:
சமூக செயற்பாட்டாளர் சுந்தரவள்ளி சர்ச்சையான பேச்சுகளுக்குப் பிரபலமானவர். 

சுந்தரவள்ளி மீது அரசியல் விரோதம் காரணமாக, பலவிதமான வதந்திகளை சமூக ஊடகங்களில் சிலர் பகிர்வது வழக்கமாக உள்ளது. இதுதொடர்பாக, ஏற்கனவே, சுந்தரவள்ளி கடந்த ஆண்டிலேயே போலீசில் புகார் செய்திருக்கிறார். 

Dinamalar News Link Jayanewslive.com Link 

இத்தகைய வதந்தியில் ஒன்றுதான் மேலே நாம் பார்க்கும் ஃபேஸ்புக் பதிவும். மேலும், இந்த ஃபேஸ்புக் பதிவில் புதியதலைமுறை நியூஸ் கார்டு டெம்ப்ளேட் பயன்படுத்தப்பட்டுள்ளதால், இது உண்மையா அல்லது பொய்யா என்ற சந்தேகத்தில், புதிய தலைமுறை ஆன்லைன் பிரிவை தொடர்புகொண்டு விசாரித்தோம். அவர்கள் இது தங்களது டெம்ப்ளேட்டை பயன்படுத்தி போலியாக வெளியிட்ட செய்தி எனக் கூறிவிட்டனர்.

முடிவு:
உரிய ஆதாரங்களின்படி, நாம் ஆய்வு செய்த ஃபேஸ்புக் பதிவில் தவறான தகவல் உள்ளதாக நிரூபிக்கப்பட்டுள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை உறுதிப்படுத்தாமல் மற்றவர்களுக்கு பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். 

Avatar

Title:விபச்சார வழக்கில் சமூக செயற்பாட்டாளர் சுந்தரவள்ளி கைது செய்யப்பட்டாரா?

Fact Check By: Pankaj Iyer 

Result: False