
ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் வைரலாக பரவும் பதிவுகள் உண்மையா என்று கண்டறிந்து ரிப்போர்ட் செய்யும் ஃபேக்ட் கிரஸண்டோ பெயரிலேயே போலி பதிவுகள் பகிரப்படுவது அதிர்ச்சியாக உள்ளது.
தகவலின் விவரம்:

Facebook Link | Archived Link |
நம்முடைய வாசகர் ஒருவர் மேற்கண்ட ஃபேஸ்புக் லிங்கை அனுப்பி இந்த ஃபேக்ட் செக் செய்தது நீங்களா என்று கேட்டனர்.
அதில், தினத்தந்தி வெளியிட்ட செய்தி கிளிப் உடன் ஃபேக்ட் கிரஸண்டோவின் மிக்ஸர் முத்திரை இருந்தது. ஃபோட்டோஷாப் முறையில், “துரை முருகன் கூறியது: வெளிநாட்டிலிருந்து வரும் அகதிகளை கருணை உள்ளத்தோடு ஏற்றுக்கொள்ளலாம். அதில் மதப்பாகு பாடு கூடாது. அத்துடன் ஈழத்தமிழர்களுக்கும் உரிமை கொடுக்க வேண்டும் என பேசியுள்ளார் என்று குறிப்பிட்டிருந்தனர். இந்த பதிவை, பாஜக சங்கிகளின் சரணலாயம் என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் N C Arun Shine என்பவர் 2020 ஜனவரி 5ம் தேதி வெளியிட்டுள்ளார்.
உண்மை அறிவோம்:
இந்த உண்மை கண்டறியும் அறிக்கையை நம்முடைய ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் பிரிவு வெளியிடவில்லை. குடியுரிமை திருத்தச் சட்டத்தை தி.மு.க எதிர்க்கவில்லை என்று துரைமுருகன் பேசியதாக தினத்தந்தி பத்திரிகையில் வந்தது உண்மைதான். அது அவர்கள் குழுமத்தின் ஹலோ எஃப்.எம்-ன் விளம்பரமாக வெளியிட்டிருந்தனர்.

அந்த விளம்பர செய்தியிலேயே, “குடியுரிமை சட்டத்திற்கு முழுவதுமாக தி.மு.க எதிர்ப்பு தெரிவிப்பதாக ஊடகங்கள் தவறாக பேசுகின்றன. அதில் ஒரு சில திருத்தங்கள் வேண்டும் என்றுதான் கேட்கிறோம். வெளிநாட்டிலிருந்து அகதிகளாக வருவோரை கருணை உள்ளத்தோடு ஏற்றுக்கொள்வதில் பிரச்னை இல்லை. இதில், மத ரீதியான பாகுபாடு தேவையில்லை. அதேவேளையில் ஈழத் தமிழர்களுக்கும் உரிமை கொடுங்கள் என்றுதான் கேட்கிறோம்” என்று கூறியதாக தெரிவித்திருந்தனர்.
இது குறித்து சட்டப்பேரவையில் துரைமுருகன் கூட பேசியிருந்தார். அதில், குடியுரிமை சட்டத்தை நாங்கள் எதிர்க்கவில்லை. திருத்தச் சட்டத்தை மட்டுமே எதிர்க்கிறோம் என்று குறிப்பிட்டிருந்தார். ஆனால், பாரதிய ஜனதா உள்ளிட்ட கட்சிகளின் ஐடி பிரிவைச் சேர்ந்தவர்கள் தி.மு.க மாற்றி மாற்றி பேசுகிறது என்பது போல கருத்தை வெளியிட ஆரம்பித்தனர்.
தீவிர வலதுசாரி இணைய ஊடகமான கதிர் கூட துரைமுருகன் பேச்சை அடிப்படையாகக் கொண்டு செய்தி வெளியிட்டதை எல்லாம் காண முடிகிறது. இதனால், தி.மு.க தொண்டர்களே நம்முடைய பெயரை பயன்படுத்தி போலியாக இந்த பதிவை உருவாக்கியிருப்பது தெரிந்தது. உண்மையில் ஹலோ எஃப்.எம் விளம்பரத்தில் தவறாக புரிந்துகொள்ளும் வகையில தலைப்பு வைத்துள்ளனர்.
Archived Link 1 | kathir.news | Archived Link 2 |
ஃபேக்ட் செக் செய்ய ஃபேக்ட் கிரஸண்டோவை அணுகுவது எளிது…
ஃபேக்ட் கிரஸண்டோ என்பது சமூக ஊடகத்தில் பரவும் தகவல் உண்மையா என்று கண்டறிய உதவும் இணையதளம் ஆகும். உங்களுக்கு ஏதாவது ஒரு பதிவு தொடர்பான சந்தேகம் ஏற்பட்டால், அதை எங்களிடம் தெரிவிக்கலாம். எங்கள் இணையதளத்தில் https://tamil.factcrescendo.com/factcheck/வந்து உங்கள் சந்தேகங்களை பதிவிடலாம். அல்லது 904904423 என்ற வாட்ஸ் அப் நம்பருக்கு அனுப்பலாம்.

அப்படி அனுப்பினால், அதை நம்முடைய குழு ஆய்வு செய்து உண்மை நிலவரத்தை வெளியிடும். அதைவிடுத்து, இது போன்று போலியாக எதையும் தயாரித்து வெளியிட வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம். இந்த பதிவு போலியான ஃபேக்ட்செக். நாங்கள் இப்படி எதுவும் வெளியிடவில்லை. எங்கள் பெயரை அனுமதியின்றி பயன்படுத்தியது தவறானது என சம்பந்தப்பட்ட நபருக்கு சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.
முடிவு:
தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Title:ஃபேக்ட் கிரஸண்டோ பெயரில் வெளியான போலி உண்மை கண்டறியும் அறிக்கை!
Fact Check By: Chendur PandianResult: False
