2011ல் சோனியாவின் மருத்துவமனை செலவுக்காக மத்திய அரசு ரூ.1880 கோடி செலவிட்டதா?

அரசியல் | Politics இந்தியா | India சமூக ஊடகம் | Social

‘’2011ம் ஆண்டில் சோனியாவின் மருத்துவமனை செலவுக்காக, அவர் வெளிநாட்டில் சென்று சிகிச்சை பெற ரகசியமாக மத்திய அரசு ரூ.1880 கோடியை அப்போதைய காங்கிரஸ் அரசு செலவிட்டது,’’ என்று ஒரு செய்தி சமூக வலைதளங்களில் பரவதைக் கண்டோம். அதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.

தகவலின் விவரம்:

இதனை +91 9049053770 என்ற நமது வாட்ஸ்ஆப் சாட்போட் எண்ணிற்கு, வாசகர் ஒருவர் அனுப்பி, சந்தேகம் கேட்டிருந்தார். இந்த செய்தியை பலரும் உண்மை என நம்பி சமூக வலைதளங்களில் பகிர்வதைக் கண்டோம்.

Facebook Claim Link I Archived Link

உண்மை அறிவோம்:
உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் 2022 நடைபெறுவதை முன்னிட்டு, காங்கிரஸ் – பாஜக இடையிலான தேர்தல் பிரசாரம் களத்தை கடந்து, சமூக வலைதளங்களிலும் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. இதையொட்டி பலவிதமான தகவல்கள் பாஜக பற்றியும், காங்கிரஸ் பற்றியும் பரப்பப்படுகின்றன.

இந்த வரிசையில் பாஜக ஆதரவாளர்கள் பகிர்ந்து வரும் வதந்தியில் ஒன்றுதான் மேற்கண்ட தகவலும். உண்மையில், இந்த விவகாரம் பற்றி அப்போதே மத்திய அரசு (காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி) விளக்கம் அளித்திருக்கிறது.

குஜராத் முதலமைச்சராக இருந்த மோடி இந்த புகாரை எழுப்பியதை தொடர்ந்து, பிரதமர் அலுவலகம் அப்போதே விளக்கம் அளித்திருக்கிறது. ஊடகங்களிலும் செய்தி வெளியாகியுள்ளது.

IndiaToday Link I The Hindu Business Line Link

இந்த விவகாரம் பற்றி தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் ஒருவர் விண்ணப்பித்தபோது, இது தனிநபர் செலவு செய்த விவகாரம், அதற்கும் அரசு இயந்திரத்திற்கும் தொடர்பில்லை என மத்திய தகவல் ஆணையாளர் (CIC) விளக்கம் அளித்திருக்கிறார்.

RTI Foundation Of India Link

இதன்படி, அமெரிக்கா சென்றபோது சோனியா காந்தி அவரது மருத்துவமனை செலவுக்காக ஒரு தொகையை செலவிட்டுள்ளார் என்றும், அது அவரது சொந்தப் பணம் என்றும் தெரியவருகிறது. தனிநபரின் சொந்த செலவு என்பதால், அதற்கும் அரசுக்கும் தொடர்பில்லை என்பதால் அதுபற்றிய விவரத்தை வழங்க மத்திய அரசு மறுத்துவிட்டதாக, புரிகிறது.

News 18 Link

எனவே, 2011-12 காலக்கட்டத்தில் வெளியான தகவலுக்கு அப்போதே மத்திய அரசு விளக்கம் அளித்து விட்ட நிலையில், அதனை தற்போது எடுத்து புதிய தகவல் போல பகிர்ந்து, சமூக வலைதளங்களில் அரசியல் உள்நோக்கத்துடன் சிலர் குழப்பம் ஏற்படுத்துவதாக, சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் நாம் ஆய்வு மேற்கொண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter Page I Google News Channel

Avatar

Title:2011ல் சோனியாவின் மருத்துவமனை செலவுக்காக மத்திய அரசு ரூ.1880 கோடி செலவிட்டதா?

Fact Check By: Pankaj Iyer 

Result: False