‘’புல்லட் புரூப் கோட் அணிந்ததால் உயிர் தப்பிய டொனால்ட் டிரம்ப்’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.

இதில், ‘’டிரம்ப் நெஞ்சிலும் சுடப்பட்டது அவர் புல்லட் புரூப் கோட் அணிந்ததால் உயிர் தப்பினார்,’’ என்று எழுதப்பட்டுள்ளது.

Claim Link

பலரும் இதனை உண்மை என நம்பி, சமூக வலைதளங்களில் ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

கடந்த சனிக்கிழமை ஜூலை 13 அன்று அமெரிக்காவின் பெனிசில்வேனியா பகுதியில் நடைபெற்ற அதிபர் தேர்தல் பரப்புரை கூட்டம் ஒன்றில் டொனால்டு டிரம்ப் பங்கேற்று பேசினார். அப்போது அவர் மீது திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. அதில் அதிர்ஷ்டவசமாக டிரம்ப் சிறு காயத்துடன் உயிர் தப்பினார்.

Reuters Link l Axios Link l CBSNews Link

இதுதொடர்பாக உலகம் முழுவதும் பரபரப்பு ஏற்பட்ட நிலையில், சமூக வலைதளங்களில் பல்வேறு விதமாக தகவல்கள் பகிரப்படுகின்றன. அவற்றில் வதந்திகளும் நிறைய உள்ளன.

இந்த வரிசையில் ஒன்றுதான் நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட, புல்லட் புரூப் ஜாக்கெட் அணிந்ததால், டொனால்டு டிரம்ப் உயிர் தப்பினார் என்ற தகவலும்…

ஏனெனில், இவர்கள் வட்டமிட்டு பகிரும் புகைப்படத்தில் உள்ள கருந்துளை போன்ற வடிவம் துப்பாக்கிக் குண்டு துளைத்த தடயம் கிடையாது. அது உண்மையில், டிரம்ப் அருகே அவரை சூழ்ந்தபடி தாங்கி நிற்கும் பெண் காவலரின் சட்டையின் மடிப்புச் சுருக்கம். அது பார்க்க, துளை போன்று தெரிகிறது.

கூடுதல் செய்தி ஆதாரம்.

Fox News Link

ஆதாரத்திற்காக இந்த புகைப்படத்தை சற்று பெரிதுபடுத்தி, கீழே இணைத்துள்ளோம்.

எனவே, டிரம்ப் நெஞ்சில் துப்பாக்கிக் குண்டு பாய்ந்த தடயம் உள்ளதாகக் கூறி பகிரப்படும் தகவல் தவறானது என்று, சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter PageI Google News Channel I Instagram

Avatar

Title:புல்லட் புரூப் கோட் அணிந்ததால் டிரம்ப் உயிர் தப்பினாரா?

Fact Check By: Fact Crescendo Team

Result: MISLEADING