
‘’பின்னணி பாடகர் ஹரிஹரன் உடல்நலக்குறைவால் பாதிப்பு- அதிர்ச்சி வீடியோ’’, என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.
தகவலின் விவரம்:
இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.
இதில், ‘’ ஹரிஹரன் சாருக்கு என்ன ஆச்சு? இந்த வீடியோ பாத்ததில இருந்து மனசுக்கு ரொம்ப சங்கடமா இருக்கு.. 😭’’ என்று எழுதப்பட்டுள்ளது.
Claim Link 1 l Claim Link 2 l Claim Link 3
பலரும் இதனை உண்மை என நம்பி, சமூக வலைதளங்களில் ஷேர், கமெண்ட் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
மேற்கண்ட தகவல் உண்மையா என்று நாம் ஆய்வு மேற்கொண்டோம். அப்போது, இது ஹரிஹரன் செய்த Prank என்றும், இதுதொடர்பாக அவரே விளக்கம் அளித்துள்ளார் என்றும் தெரியவந்தது.
ஆனால், இந்த உண்மை தெரியாமல் பலரும் ‘ஹரிஹரன் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளதாக,’ சமூக வலைதளங்களில், வதந்தி பரப்புகிறார்கள் என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…
Facebook Page I Twitter PageI Google News Channel I Instagram

Title:பின்னணி பாடகர் ஹரிஹரன் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளாரா?
Written By: Pankaj IyerResult: Missing Context
