‘’நிர்வாண பணிகளில் திருப்தியில்லை’’ என்று நடிகை கஸ்தூரி கூறியதாக, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:


இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.

Claim Link 1 l Claim Link 2

இதில், ’’நிர்வாண பணிகளில் திருப்தியில்லை.
இன்னும் சிறப்பாக செயல்படனும்‘’, என்று எழுதப்பட்டுள்ளது.

பார்ப்பதற்கு, நடிகை கஸ்தூரி அவரது எக்ஸ் வலைதளத்தில் இவ்வாறு பதிவு வெளியிட்டது போன்று உள்ளது.

பலரும் இதனை உண்மை என நம்பி, சமூக வலைதளங்களில் ஷேர், கமெண்ட் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

சமீபத்தில் சென்னை உள்பட தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் மழை பெய்தது மட்டுமின்றி சில இடங்களில் வெள்ள பாதிப்பும் ஏற்பட்டு, மக்கள் பெரிதும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர்.

இந்த சூழலில், நடிகை கஸ்தூரி நிவாரணம் என்பதற்கு பதிலாக, ’’நிர்வாண பணிகளில் திருப்தியில்லை’’ என்று கூறி எக்ஸ் வலைதளத்தில் தகவல் பகிர்ந்தது போன்று சிலர் தகவல் பரப்புகிறார்கள்.

ஆனால், இது உண்மையல்ல; இது கஸ்தூரி பெயரில் பகிரப்படும் வதந்தி. மழை, வெள்ள பாதிப்பு பற்றி அவர் வெளியிட்ட பதிவை வேண்டுமென்றே எடிட் செய்து, திமுக ஆதரவாளர்கள், இவ்வாறு வதந்தி பரப்புகிறார்கள்.


இதுதொடர்பாக, நாம் கஸ்தூரி தரப்பிலும் பேசி உறுதிப்படுத்தியுள்ளோம்.

எனவே, நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட தகவலில் முழு உண்மை இல்லை என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter Page I Google News Channel I Instagram

Claim Review :   நிர்வாண பணிகளில் திருப்தியில்லை- நடிகை கஸ்தூரி கருத்து.
Claimed By :  Social Media User
Fact Check :  ALTERED