இலங்கையின் முதல் முஸ்லீம் பெண் விமானி ரீமா பாயிஸ் இவரா?

சமூக ஊடகம் | Social சர்வதேசம் | International

‘’இலங்கையின் முதல் முஸ்லீம் பெண் விமான ரீமா பாயிஸ்,’’ எனக் கூறி பகிரப்பட்டு வரும் தகவல் ஒன்றை ஃபேஸ்புக்கில் காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.

தகவலின் விவரம்: 

Facebook Claim LinkArchived Link

அக்டோபர் 22, 2020 அன்று பகிரப்பட்டுள்ள இந்த ஃபேஸ்புக் பதிவில், பெண் விமானி ஒருவரின் புகைப்படத்தை பகிர்ந்து, அவரை இலங்கையின் முதல் முஸ்லீம் பெண் விமானி எனக் கூறியுள்ளனர். மேலும், ‘’காத்தான்குடியை சேர்ந்த லண்டனை வசிப்பிடமாகக் கொண்ட ரீமா பாயிஸ். தற்போது லண்டனில் பயிற்சி பெற்று வருகிறார். கடந்த கிழமை பறக்கும் விமானத்தில் 10000 அடி உயரத்தில் பரசூட் மூலம் குதித்து தனது சாதனையை ஆரம்பித்த ரீமா பாயிஸ், நேற்று சிறு விமானத்தில் பறக்கும் பயிற்சியில் ஈடுபட்டார்,’’ என விரிவாக எழுதியுள்ளனர்.

இதனை பலரும் உண்மை என நம்பி வைரலாக ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:
நாம் மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில் உள்ள பெண் விமானியின் புகைப்படத்தை பயன்படுத்தி, கூகுளில் ரிவர்ஸ் இமேஜ் தேடல் செய்தோம். அப்போது நமக்கு கிடைத்த தகவல் அதிர்ச்சி அளிப்பதாக இருந்தது. ஆம். இந்த புகைப்படத்தில் இருப்பவரின் பெயர் Anusha Sriratne என தெரியவந்தது.

இவர்தான் இலங்கையின் முதல் பெண் விமானி ஆவார். தற்போது கேப்டன் நிலையில் பணிபுரிகிறார். ஆனால், இவர் முஸ்லீம் அல்ல. 

Nation.lk News Link

அதேசமயம், ரீமா பாயிஸ் என யாரேனும் உள்ளாரா என தகவல் தேடியபோது, அவர் வேறு ஒருவர் என தெரியவந்தது. அதாவது, இலங்கையில் உள்ள புதிய காத்தான்குடியில் பிறந்த அவர், தற்சமயம் லண்டன் மாநகரில் விமான பயிற்சி தொடர்பாக படித்து வருகிறாராம். அவர்தான், இலங்கையின் முதல் முஸ்லீம் பெண் என்ற முறையில் 10000 அடி உயரத்தில் பாராசூட் உதவியுடன் கீழே குதித்து சாதனை படைத்திருக்கிறார். அத்துடன், சிறு ரக போர் விமானத்திலும் பறந்திருக்கிறார். 

Madawala News LinkSrilankaMuslims.lk

எனவே, ரீமா பாயிஸ் என்பவர் வேறு ஒருவராக இருக்க, மற்றொரு பெண் விமானியின் புகைப்படத்தை எடுத்து, தவறான தகவல் சேர்த்து வதந்தி பரப்பியுள்ளனர் என்று தெளிவாகிறது.

முடிவு:

உரிய ஆதாரங்களின்படி குறிப்பிட்ட தகவல் தவறானது என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இதுபோன்ற தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Avatar

Title:இலங்கையின் முதல் முஸ்லீம் பெண் விமானி ரீமா பாயிஸ் இவரா?

Fact Check By: Pankaj Iyer 

Result: Partly False