இரவு நேரத்தில் மின் விளக்குகளால் ஜொலிக்கும் ஒசூர், கன்னியாகுமரி நகரம் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:


உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

நியூயார்க்கின் மேன்ஹாட்டன் (Manhattan) தீவின் இரவு நேரத்தில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளனர். நிலைத் தகவலில், "கிட்டுணகிரி மாவட்டம் ஓசூர் நகரம் இரவு நேர மின்விளக்குகளால் ஜொலிக்கும் காட்சி" என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதையும் பலரும் பகிர்ந்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

இரவு மின் விளக்குகளால் ஜொலிக்கும் ஒசூர் நகரம் என்று குறிப்பிட்டு நியூயார்க்கின் மேன்ஹாட்டன் புகைப்படத்தை ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளனர். இது நக்கல் - நையாண்டிக்காக போட்ட பதிவு போல எந்த குறிப்பும் இல்லை. அதே நேரத்தில் பதிவிட்டவர் நையாண்டிக்காகப் பதிவிட்டது போலவும் உள்ளது. எனவே, இதை எல்லாம் ஃபேக்ட் செக் செய்ய வேண்டுமா என்று ஒதுக்க நினைத்தோம்.


உண்மைப் பதிவைக் காண: Facebook I Facebook

இதை வேறு யாராவது பதிவிட்டுள்ளார்களா என்று பார்த்த போது, சென்னை துறைமுகம் என்று குறிப்பிட்டு இந்த படத்தை வேறு ஒருவர் பதிவிட்டிருந்தார். மற்றொருவர் இது கன்னியாகுமரி என்று குறிப்பிட்டு பதிவிட்டிருந்தார். இப்படி வேறு வேறு நகரங்களின் பெயரைக் குறிப்பிட்டு சிலர் பதிவிட்டிருந்ததைக் காண முடிந்தது. எனவே, இது தொடர்பாக ஆய்வு செய்துவிடலாம் என்று முடிவெடுத்தோம்.


இந்த புகைப்படம் நியூயார்க்கின் மேன்ஹட்டன் நகரம் தான் என்பதை உறுதி செய்ய முதலில், மேன்ஹட்டன் நகரின் கூகுள் மேப்-பை ஒப்பிட்டுப் பார்த்தோம். இதுவே இந்த புகைப்படம் ஓசூரோ, சென்னையோ இல்லை என்பதை உறுதி செய்தன.

நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட புகைப்படத்தைக் கூகுள் லென்ஸ் தளத்தில் பதிவேற்றித் தேடிப் பார்த்தோம். சில நாட்களுக்கு முன்பு Outdoor of Nature என்ற எக்ஸ் தள பக்கத்தில் இந்த புகைப்படம் வெளியாகி இருப்பது தெரிந்தது. நியூயார்க் நகரின் சென்ட்ரல் பார்க்கின் இரவு காட்சி என்று குறிப்பிட்டு இந்த புகைப்படத்தைப் பதிவிட்டிருந்தனர்.

Archive

மேலும் இதே போன்ற புகைப்படத்தை New York City Tourism + Conventions என்ற ஃபேஸ்புக் பக்கமும் 2020ல் வெளியிட்டிருந்தது. beholdingeye என்ற இன்ஸ்டா ஐடி கொண்டவர் இந்த புகைப்படத்தை வெளியிட்டதாக குறிப்பிடப்பட்டிருந்தது. அந்த நபரின் இன்ஸ்டா பக்கத்திற்கு சென்று பார்த்த போது நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட படம் போன்று, மான்ஹாட்டன் பகுதியின் ஏராளமான புகைப்படத்தை அவர் பதிவிட்டிருந்தார்.


உண்மைப் பதிவைக் காண: Facebook

இரவு மின் விளக்குகளால் மின்னும் ஒசூர் நகரம் என்று தெரிந்து பதிவிட்டார்களா, நையாண்டிக்குப் பதிவிட்டார்களா என்று தெரியவில்லை. இந்த புகைப்படம் ஒசூரின் படம் இல்லை என்பதை உறுதி செய்துள்ளோம். இந்த புகைப்படம் நியூயார்க் நகரின் புகைப்படம் என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் உறுதி செய்துள்ளோம்.

முடிவு:

நியூயார்க்கின் மேன்ஹாட்டன் பகுதியின் புகைப்படத்தை தமிழ்நாட்டின் ஒசூர், சென்னை துறைமுகம், கன்னியாகுமரி என்றெல்லாம் தவறாக சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருவதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I X Post I Google News Channel

Claim Review :   இரவு நேரத்தில் மின் விளக்குகளால் ஜொலிக்கும் ஒசூர், கன்னியாகுமரி நகரம் என்று பரவும் புகைப்படம் உண்மையா?
Claimed By :  Social Media Users
Fact Check :  MISLEADING