
‘’தென்காசியை சேர்ந்த மூன்று மாணவிகளை காணவில்லை’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.
இதில், ‘’அனைத்து நண்பர்களும் உடனே பகிருங்கள்…
தென்காசியை சேர்ந்த மூன்று மாணவிகளை காணவில்லை.
தொடர்பிற்கு 8883640640’’, என்று எழுதப்பட்டுள்ளது.
பலரும் இதனை உண்மை என நம்பி, சமூக வலைதளங்களில் ஷேர், கமெண்ட் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
மேற்கண்ட தகவல் உண்மையா என்று நாம் ஆய்வு மேற்கொண்டோம். அப்போது, இந்த தகவல் கடந்த 2015ம் ஆண்டே ஃபேஸ்புக்கில் பகிரப்பட்டிருந்ததைக் கண்டோம்.
இதன்படி, மேற்கண்ட தகவல் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக, சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வரும் ஒன்று என்பதால், இதன் நம்பகத்தன்மை பற்றி சந்தேகம் அதிகரித்தது.
முதலில், இதில் தரப்பட்டுள்ள 8883640640 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டோம். ஆனால், அந்த எண் உபயோகத்தில் இல்லை.
அடுத்தப்படியாக, தென்காசி போலீசாரை தொடர்பு கொண்டு விளக்கம் கேட்டபோது, ‘’இதுபோன்ற புகார் எதுவும் சமீபத்தில் எங்களுக்கு வரவில்லை,’’ என்றனர்.
இதையடுத்து, தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ Factcheck குழு (@tn_factcheck) மறுப்பு தெரிவித்துள்ளதையும் கண்டோம்.
எனவே, நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட தகவல், கடந்த பல ஆண்டுகளாகவே சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வரும் ஒரு அடிப்படை ஆதாரமற்ற வதந்தி, என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…
Facebook Page I Twitter Page I Google News Channel I Instagram

Title:‘தென்காசியை சேர்ந்த 3 மாணவிகளை காணவில்லை’ என்று பரவும் தகவல் உண்மையா?
Fact Check By: Pankaj IyerResult: False
