
‘’முட்புதரில் வீசி விட்டுச் சென்ற தாய். அழகுச் செல்லம்,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.
தகவலின் விவரம்:
இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.
இதில், ‘’ முட்புதரில் வீசி விட்டுச் சென்ற தாய் அழகுச் செல்லம்…❤️ ❤️
காமம் கன்னை மறைத்தது..
மருத்துவமனையில் இரண்டு நாட்களுக்கு பின்பு எடுக்கப்பட்ட கானொளி..
தற்போது தத்து எடுத்து வளர்ப்பதற்கு போட்டோ போட்டி..🥰🥰,’’ என்று எழுதப்பட்டுள்ளது.
பலரும் இதனை உண்மை என நம்பி, சமூக வலைதளங்களில் ஷேர், கமெண்ட் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
மேற்கண்ட தகவல் உண்மையா என்று நாம் ஆய்வு மேற்கொண்டோம். அப்போது, இதே குழந்தை வீடியோ ஏற்கனவே சில மாதங்களுக்கு முன்பாக இன்ஸ்டாகிராம் பக்கம் ஒன்றில் பகிரப்பட்டுள்ளதாக, தெரியவந்தது.
இதன்படி, rn_reethu மற்றும் akash_gtzz ஆகியோர் தமக்கு சில மாதங்கள் முன்பாக பிறந்த பெண் குழந்தை ஒன்றின் அன்றாட நிகழ்வுகளை பதிவு செய்து, ihaan_aizel என்ற இன்ஸ்டாகிராம் பக்கம் மூலமாக, அவ்வப்போது வெளியிட்டு வருகின்றனர்.
இதுபோன்ற ஏராளமான வீடியோக்களை, குறிப்பிட்ட இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நாம் காண முடிகிறது.
கூடுதல் ஆதாரத்திற்காக, நாம் குறிப்பிட்ட இன்ஸ்டாகிராம் பக்கத்தை நிர்வகிப்பவரிடமே ‘சாட்’ செய்தோம். அப்போது, ‘’இது எங்களுக்குப் பிறந்த பெண் குழந்தையின் வீடியோதான். நாங்கள் அந்த குழந்தையின் வீடியோக்களை பிறந்தது முதலே இன்றுவரை அவ்வப்போது பதிவிட்டு வருகிறோம். இது குப்பைத்தொட்டியில் இருந்து எடுக்கப்படவில்லை; நாங்களும் அவ்வாறு குப்பையில் வீசவில்லை. யாரோ வேண்டுமென்றே எங்களது வீடியோவை எடுத்து, வதந்தி பரப்புகிறார்கள்,’’ என்று தெரிவித்தனர்.
இதன்மூலமாக, யாரோ ஒருவரின் இன்ஸ்டாகிராம் வீடியோவை எடுத்து, குப்பையில் இருந்து மீட்கப்பட்ட பெண் குழந்தை என்று குறிப்பிட்டு வதந்தி பரப்புகிறார்கள், என்று தெளிவாகிறது.
எனவே, நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட வீடியோ பற்றிய தகவல் தவறானது, என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…
Facebook Page I Twitter PageI Google News Channel I Instagram
