
‘’டாடா நிறுவனம் தயாரித்துள்ள புதிய மாடல் நானோ கார்,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.
தகவலின் விவரம்:
இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.
இதில், ‘’ 30 கி.மீ. தரும் ’நானோ கார்’ – ரத்தன் டாடாவின் கனவை நிறைவேற்றிய ஊழியர்கள்..!
டாடாவின் புதிய நானோ மாடல் கார் அறிமுகம்.
விலை 2.5 லட்சம்₹
624 சிசி எஞ்சின்
அதிகபட்ச வேகம் 105 கிலோமீட்டர்
ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 30 கிலோமீட்டர் மைலேஜ் கொடுக்கும்.
Ratan Tata1s Dream Car the New Tata Nano Hits the Road.. The car is powered by a 624cc engine, offering a mileage of 30-35 kilometers per liter. It can reach a maximum speed of 103 KM. Price 2.5 Lakhs ’’ என்று எழுதப்பட்டுள்ளது.
பலரும் இதனை உண்மை என நம்பி, சமூக வலைதளங்களில் ஷேர், கமெண்ட் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
மேற்கண்ட தகவல் உண்மையா என்று நாம் ஆய்வு மேற்கொண்டோம். அப்போது, இதுபோன்ற கார் எதுவும் டாடா நிறுவனம் அறிமுகம் செய்யவில்லை என்று தெரியவந்தது. இந்த மாடல் Toyota நிறுவனம் தயாரித்துள்ள Aygo X Pulse என்ற கார் ஆகும். இதன் புகைப்படத்தை எடிட் செய்து, டாடா நானோ புது மாடல் என்று தவறான தகவல் பரப்புகிறார்கள்.
நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட புகைப்படத்தையும், Aygo X Pulse காரின் படத்தையும் ஒப்பீடு செய்து, கீழே இணைத்துள்ளோம்.
இதுதொடர்பாக, நமது Fact Crescendo Marathi மற்றும் Fact Crescendo English ஏற்கனவே தகுந்த ஆதாரங்களுடன், விரிவான ஃபேக்ட்செக் ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளன.
எனவே, நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட புகைப்படம் தவறான ஒன்று, என சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…
Facebook Page I Twitter Page I Google News Channel I Instagram

Title:டாடா நிறுவனம் தயாரித்துள்ள புதிய மாடல் நானோ கார் என்று பரவும் புகைப்படம் உண்மையா?
Fact Check By: Pankaj IyerResult: ALTERED
