‘’உக்ரைன் மக்களை பாதுகாக்க நேரடியாகப் போர்க்களத்தில் இறங்கிய அந்நாட்டு அதிபர் வோளாடிமிர்,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் புகைப்படங்கள் சிலவற்றைக் கண்டோம். அவற்றின் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

Facebook Claim Link I Archived Link

உண்மை அறிவோம்:
சமீபத்தில், பாதுகாப்பு காரணங்களுக்காக, உக்ரைன் மீது போர் தொடுப்பதாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் அறிவிப்பு வெளியிட்டார். இது உலக அரசியல் மற்றும் பொருளாதார அரங்கில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், ரஷ்யாவை எதிர்கொள்ள தயாராக உள்ளோம் என்று உக்ரைன் அதிபர் விளாடிமீர் ஜெலென்ஸ்கியும் பதில் அறிவிப்பு வெளியிட்டார்.

சொன்னபடியே, தற்போது உக்ரைன் மீது ரஷ்யா குண்டு வீசி தாக்குதல் மேற்கொண்டு வரும் சூழலில், உக்ரைன் தனியாளாக அதனை எதிர்கொள்ள இயலாமல் திண்டாடி வருகிறது.

இந்த சூழலில், சரணடைய முன்வரும்படி ரஷ்யா அழைப்பு விடுத்துவிட்டாலும், அதனை ஏற்காமல், அவ்வப்போது ஆக்ரோஷமான கருத்துகளை ட்விட்டர் வழியே ஜெலென்ஸ்கி பகிர்வது வழக்கமாக உள்ளது.

இத்தகைய பின்னணியில்தான் மேற்கண்ட வகையில், ஜெலென்ஸ்கி உக்ரைன் வீரர்களுடன் இருப்பதுபோன்ற புகைப்படங்களை பகிர்ந்து, அவரே நேரடியாக போர்க்களத்தில் இறங்கிவிட்டார் என்று கூறி சிலர் சமூக வலைதளங்களில் தகவல் பரப்புகின்றனர்.

உண்மையில், இந்த புகைப்படங்கள் கடந்த 2021ம் ஆண்டின் பல்வேறு காலகட்டங்களில் எடுக்கப்பட்டதாகும். இதுதொடர்பான செய்தி ஆதாரங்கள் கீழே தரப்பட்டுள்ளன.

usnews.com link I yahoo news link I smh.com.au link I france24.com link I gordonua.com link

உக்ரைன், ரஷ்யா இடையே கடந்த சில ஆண்டுகளாகவே போர்ப் பதற்றம் நீடித்து வந்ததால், அடிக்கடி தனது ராணுவத்தினரை நேரில் சந்தித்து ஊக்கப்படுத்துவதை அந்நாட்டு அதிபர் ஜெலென்ஸ்கி வாடிக்கையாகக் கொண்டிருந்துள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை ஒன்றாக தொகுத்து, தற்போதைய போர்க்காலத்தில் எடுக்கப்பட்டதாகக் குறிப்பிட்டு சிலர் வதந்தி பரப்புவதாக, சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் நாம் ஆய்வு மேற்கொண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter Page I Google News Channel I Instagram

Avatar

Title:உக்ரைன் மக்களை பாதுகாக்க போர்க்களம் புகுந்தாரா அந்நாட்டு அதிபர்?

Fact Check By: Pankaj Iyer

Result: False