அதிரப்பள்ளி வனப்பகுதியில் மானை இழுத்துச் சென்ற புலி என்று பரவும் வீடியோ உண்மையா?

இந்தியா | India சமூக ஊடகம் | Social Media

அதிரப்பள்ளி – வால்பாறை வனப்பகுதியில் மான் ஒன்றை வேட்டையாடி புலி ஒன்று இழுத்துச் சென்றது என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

வனப்பகுதி சாலையில் மான் ஒன்றை புலி இழுத்துச் செல்லும் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “மானை வேட்டையாடும் புலி,வால்பாறை அதிரப்பள்ளி சாலையில் பதப்பதைக்கும் காட்சி” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வீடியோவை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

அதிரப்பள்ளி – வால்பாறை வனப் பகுதியில் மான் ஒன்றை புலி வேட்டையாடி இழுத்துச் சென்றதாக ஊடகங்களில் செய்தி வெளியாகி இருந்தது. இந்த தகவல் உண்மைதானா என்று அறிய ஆய்வு செய்தோம்.

வீடியோ காட்சிகளை புகைப்படங்களாக மாற்றி கூகுள் லென்ஸ் தளத்தில் பதிவேற்றித் தேடினோம். அப்போது இந்த வீடியோவை இம்மாதம் தொடக்கத்தில் ஒருவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்ததைக் காண முடிந்தது. அதில், “தன்னுடைய ரிசார்ட் முன்பாக புலி ஒன்று கால்நடையை இழுத்துச் சென்றது” (Collarwala male infront of our resort dragging cattle) என்று குறிப்பிட்டிருந்தார். அவரது விவரக் குறிப்பு பகுதிக்கு சென்று பார்த்த போது, Resort owner at Tadoba என்று குறிப்பிட்டிருந்தார். அது மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ளது என்றும் குறிப்பிட்டிருந்தார். 

உண்மைப் பதிவைக் காண: instagram.com I Archive

தொடர்ந்து தேடிய போது அந்த குறிப்பிட்ட ரிசார்டின் ஃபேஸ்புக் பக்கத்திலும் இந்த வீடியோ வெளியாகி இருந்தது. அந்த பகுதியின் கூகுள் ஸ்ட்ரீட் வியூவை பார்த்தோம். புலி இழுத்துச் சென்ற பகுதியைக் கண்டறிய முடியவில்லை. ஆனால், அந்த வனப் பகுதியின் காட்சியும் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட வீடியோவின் காட்சியும் ஒரளவுக்கு ஒத்துப்போனது.

மற்றபடி வேறு யாரும் இந்த வீடியோவை வெளியிடவில்லை. தமிழ் ஊடகங்களில் மட்டும் இது கேரளா – தமிழ்நாடு வனப் பகுதியில் எடுக்கப்பட்டது என்று குறிப்பிட்டு செய்தி வெளியாகி இருந்தது. எனவே, இந்த வீடியோவை வெளியிட்டிருந்த rsg_ranveer-ன் இன்ஸ்டாகிராம் பக்கத்திலிருந்து இந்த வீடியோவை தாங்கள்தான் எடுத்தீர்களா என்று உறுதி செய்யும்படி கேட்டு மெசேஜ் செய்தோம். அவரும் ‘இந்த வீடியோவை நான்தான் எடுத்தேன்,’ என்று உறுதி செய்தார். இந்த ஆதாரங்கள் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

மகாராஷ்டிரா வனப்பகுதியில் புலி ஒன்று மானை வேட்டையாடி இழுத்துச் சென்ற வீடியோவை, தமிழ்நாடு – கேரளா வனப்பகுதியில் எடுக்கப்பட்டது என்று தவறாக பகிர்ந்திருப்பதை தகுந்த ஆதாரங்கள் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I X Post I Google News Channel I Instagram

Avatar

Title:அதிரப்பள்ளி வனப்பகுதியில் மானை இழுத்துச் சென்ற புலி என்று பரவும் வீடியோ உண்மையா?

Fact Check By: Chendur Pandian  

Result: Partly False