பங்களாதேஷில் மதவெறி பிடித்த ஜாம்பிகளால் நடத்தப்பட்ட கொடூரம் என்று பரவும் தகவல் உண்மையா?

இந்தியா | India சமூக ஊடகம் | Social

‘’ பங்களாதேஷில் மதவெறி பிடித்த ஜாம்பிகளால் நடத்தப்பட்ட கொடூரம்,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம். 

தகவலின் விவரம்:

இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். 

இதில், ‘’ பங்களாதேஷில் மதவெறி பிடித்த ஜாம்பிகளால் நடத்தப்பட்ட கொடூரம்’’ என்று எழுதப்பட்டுள்ளது. 

Claim Link 1 l Claim Link 2

பலரும் இதனை உண்மை என நம்பி, சமூக வலைதளங்களில் ஷேர், கமெண்ட் செய்து வருகின்றனர். 

உண்மை அறிவோம்:

மேற்கண்ட தகவல் உண்மையா என்று நாம் ஆய்வு மேற்கொண்டோம். அப்போது, இது கடந்த 2024 ஜூலை 02 அன்று ஏற்பட்ட ஹத்ராஸ் பகுதியில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் தொடர்பான காட்சி என்றும், இதற்கும் வங்கதேசத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும் தெரியவந்தது. 

DNA India l News18 l Firstpost l Economic Times l Hindustan Times

இதுதொடர்பாக, ஏற்கனவே நமது Fact Crescendo Malayalam விரிவான ஃபேக்ட்செக் செய்துள்ளது. அதனையும் ஆதாரத்திற்காக, இங்கே இணைத்துள்ளோம். 

Fact Crescendo Malayalam Link 

இதன் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட தகவல் தவறானது என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம். 

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter PageI Google News Channel I Instagram\/ht

Avatar

Title:பங்களாதேஷில் மதவெறி பிடித்த ஜாம்பிகளால் நடத்தப்பட்ட கொடூரம் என்று பரவும் தகவல் உண்மையா?

Written By: Pankaj Iyer  

Result: False