‘’ இந்திய மருத்துவர் உருவாக்கிய குரல் கொடுக்கும் சாதனம்; ஊடகங்கள் புறக்கணிப்பு’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு புகைப்படம் பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049044263 & +919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.

இதில், ‘’பாராட்டுக்கள் sir, உங்களுக்குத் தெரியுமா? இந்திய மருத்துவர் விஷால் ராவ், குரல் இல்லாதவர்களுக்கு குரல் கொடுக்கும் சாதனத்தை உருவாக்கி உள்ளார். இதன் விலை வெறும் ரூ.50, உலகம் முழுவதும் அவரைப் போற்றுகிறது, ஆனால் நமது இந்திய ஊடகங்கள் அவரைப் புறக்கணிக்கின்றன,’’ என்று எழுதப்பட்டுள்ளது.

Claim Link l Archived Link

பலரும் இதனை உண்மை என நம்பி ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

குறிப்பிட்ட தகவல் பற்றி நாம் விவரம் தேடினோம். அப்போது, பெங்களூருவைச் சேர்ந்த விஷால் ராவ் என்ற டாக்டர் தொண்டைப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் பேச உதவும் வகையில் Aum Voice Prosthesis என்ற கருவியை வடிவமைத்துள்ளதாக, தெரியவந்தது.

இதுபற்றி 2015ம் ஆண்டு முதலே ஊடகங்களில் செய்தி வெளியிடப்பட்டு வந்திருக்கிறது.

Thebetterindia Link l Timesofindia Link

இந்த கருவி தொண்டைப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, குரல் நாண் இழந்தவர்களுக்காகப் பயன்படக்கூடியதாகும். மற்றபடி, இயல்பாகவே பேச்சு வராத நபர்கள் இதனைப் பயன்படுத்த முடியாது.

இதுதொடர்பாக, ஏராளமான இந்திய ஊடகங்கள், மருத்துவர் விஷால் ராவை பேட்டி கண்டு, செய்தியாக வெளியிட்டிருக்கின்றன.

மேலும், சில செய்தி லிங்க் கீழே தரப்பட்டுள்ளது.

BBC News Link l New Indian Express Link

உண்மை இவ்வாறு இருக்க, குரல் வராத அனைவருக்கும் பயன்படக்கூடிய கருவி ஒன்றை இந்திய மருத்துவர் கண்டறிந்துள்ளதாகவும், அவரை இந்திய ஊடகங்கள் புறக்கணிப்பதாகவும் கூறி பழைய செய்தியை எடுத்து புதியதுபோல தற்போது பகிர்ந்து, சர்ச்சை ஏற்படுத்தியுள்ளனர் என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter PageI Google News Channel I Instagram

Avatar

Title:‘இந்திய மருத்துவர் உருவாக்கிய குரல் சாதனம்; ஊடகங்கள் புறக்கணிப்பு’ என்று பரவும் தகவல் உண்மையா?

Written By: Fact Crescendo Team

Result: Misleading