
மேற்கு வங்கத்தில் ஆர்எஸ்எஸ் சார்பில் நடத்தப்படும் 125 பள்ளிகளை மூட உத்தரவிட்ட மம்தா பானர்ஜி, என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வரும் செய்தி ஒன்றை பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.
தகவலின் விவரம்:

இதனை வாசகர் ஒருவர் +91 9049044263 என்ற நமது வாட்ஸ்ஆப் எண்ணிற்கு அனுப்பி உண்மையா என சந்தேகம் கேட்டிருந்தார்.
இதன்பேரில் தகவல் தேடியபோது, ஃபேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்டவற்றில் பலரும் ஷேர் செய்வதைக் கண்டோம்.

Facebook Claim Link I Archived Link
இது தற்போது வெளியான அறிவிப்பு போலவும், தமிழ்நாட்டில் இப்படி அதிரடி காட்டாமல் திமுக அரசு ஆர்எஸ்எஸ் செயல்பாடுகளை ஊக்குவித்து வருவதாகவும் குறிப்பிட்டு சிலர் கமெண்ட் பகிர்வதையும் கண்டோம்.

உண்மை அறிவோம்:
குறிப்பிட்ட தகவல் உண்மையானதுதான் என்றாலும், இது தற்போது வெளியான செய்தி அல்ல. கடந்த 22.02.2018 அன்று News 18 Tamil ஊடகம் வெளியிட்ட செய்தியை எடுத்து, தற்போது பகிர்ந்து வருகின்றனர்.

News 18 TamilNadu Tweet Link I Archived Link
இதுதொடர்பாக இதர ஊடகங்களிலும் வெளியான செய்திகளை கீழே ஆதாரத்திற்காக இணைத்துள்ளோம்.
OneIndia Tamil Link I LiveMint Link
எனவே, 2018ல் வெளியான செய்தியை எடுத்து, தற்போது நிகழ்ந்ததுபோல தமிழ்நாட்டில் நடக்கும் திமுக ஆட்சியுடன் தொடர்புபடுத்தி பகிர்ந்துள்ளனர், என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…
Facebook Page I Twitter Page I Google News Channel I Instagram

Title:மம்தா பானர்ஜி மேற்கு வங்கத்தில் ஆர்.எஸ்.எஸ். நடத்தும் 125 பள்ளிகளை மூட உத்தரவிட்டாரா?
Fact Check By: Pankaj IyerResult: Missing Context
