‘’ பாஜக ஒழிக என்று கோஷமிட்ட தமிழிசை சவுந்தரராஜன் மகன்,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு வீடியோ செய்தி பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.

Claim Link l Archived Link

பலரும் இதனை உண்மை என நம்பி, ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

சென்னை, திருவள்ளூர் மற்றும் திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் அடுத்தடுத்து ஏற்பட்ட கனமழை, வெள்ளம் காரணமாக, மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதித்தது. இதன்பேரில் ஆளும் திமுக அரசை பாஜக தலைவர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இதில் தெலுங்கானா மற்றும் புதுச்சேரி மாநில ஆளுநராக உள்ள தமிழிசை சவுந்தரராஜன் சர்ச்சைக்குரிய வகையில் பேசுவதைக் காண முடிகிறது.

Hindu Tamil Link l Maalaimalar Link l Dailythanthi Link

இந்நிலையில், ‘’தமிழிசையின் மகனே பாஜக.,வை மதிக்கவில்லை, இவர் திமுகவை விமர்சிக்க வந்துவிட்டார்,’’ என்று குறிப்பிட்டு, சமூக வலைதளங்களில் மேற்கண்ட வீடியோ பதிவை சிலர் பகிர்ந்து வருகின்றனர்.

ஆனால், இந்த நிகழ்வு தற்போது பதிவு செய்யப்பட்டதல்ல. கடந்த 2019ம் ஆண்டு நிகழ்ந்த சம்பவமாகும்.

இதுபற்றி அப்போதே ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.

Hindu Tamil Link l Maalaimalar Link l Dinamani Link

எனவே, 2019ம் ஆண்டு எடுக்கப்பட்ட வீடியோவை எடுத்து, தற்போது நிகழ்ந்ததுபோல சிலர் வேண்டுமென்றே வதந்தி பரப்புகின்றனர் என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.


எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter Page I Google News Channel I Instagram

Avatar

Title:பாஜக ஒழிக என்று கோஷமிட்ட தமிழிசை மகன்: 2019ல் எடுத்த வீடியோ தற்போது பரவுவதால் சர்ச்சை…

Written By: Fact Crescendo Team

Result: MISSING CONTEXT