ஆந்திரா துணை முதல்வர் பவன் கல்யாண் நோன்பு திறக்கும் காட்சி இதுவா?

அரசியல் சார்ந்தவை | Political தமிழ்நாடு | Tamilnadu

‘’ஆந்திரா துணை முதல்வர் பவன் கல்யாண் நோன்பு திறக்கும் காட்சி,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம். 

தகவலின் விவரம்:

இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். 

இதில், ‘’ நடிகர் விஜய்க்கே டஃப் கொடுத்து ஆந்திரப் பிரதேச துணை முதல்வர் பவன் கல்யாண்ஜியின் நோன்பு திறக்கும் காட்சி ..

நல்ல நடிக்கிறீங்கடா,’’ என்று எழுதப்பட்டுள்ளது. 

Claim Link 1 l Claim Link 2 l Claim Link 3    

பலரும் இதனை உண்மை என நம்பி, சமூக வலைதளங்களில் ஷேர், கமெண்ட் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

மேற்கண்ட தகவல் உண்மையா என்று நாம் ஆய்வு மேற்கொண்டோம். அப்போது, இது கடந்த 2019ம் ஆண்டு எடுக்கப்பட்ட வீடியோ என்பதும், இதற்கும் இஃப்தார் நோன்புக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதும், தெரியவந்தது.  

கடந்த 2019ம் ஆண்டு நடைபெற்ற ஆந்திர சட்டமன்ற தேர்தலில், குண்டூர் கிழக்குத் தொகுதியில், ஜன சேனா கட்சி சார்பாக, போட்டியிட்ட Sheikh Zia Ur Rehman என்பவரை ஆதரித்து, பவன் கல்யாண் பிரசாரம் மேற்கொண்டார். மேலும், அந்த வேட்பாளரின் வீட்டிற்கு சென்று, பவன் கல்யாண் மதிய உணவு சாப்பிட்டார். அப்போது, எடுக்கப்பட்ட வீடியோதான் இது…

The Hans India l Overseas News l Filmy Focus

இதுதொடர்பாக, நமது Fact Crescendo English பிரிவு ஏற்கனவே, விரிவான செய்தி வெளியிட்டுள்ளது. 


எனவே, 2019ம் ஆண்டு ஆந்திர சட்டமன்ற தேர்தலின்போது எடுக்கப்பட்ட வீடியோ ஒன்றை தற்போது பகிர்ந்து, தமிழ் நடிகர் விஜயின் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்வுடன் தொடர்புபடுத்தி, வதந்தி பரப்புகிறார்கள் என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது. 

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம். 

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter PageI Google News Channel I Instagram

Avatar

Title:ஆந்திரா துணை முதல்வர் பவன் கல்யாண் நோன்பு திறக்கும் காட்சி இதுவா?

Written By: Pankaj Iyer 

Result: Misleading