வறுமையில் ஆடு மேய்க்கிறாரா எம்.பி.பி.எஸ் முதலாம் ஆண்டு மாணவி?

‘’திருச்சி அருகே வறுமையால் ஆடு மேய்க்கும் எம்.பி.பி.எஸ் முதலாம் ஆண்டு மாணவி. முடிந்தால் ஷேர் செய்து அவருக்கு உதவியை பெற்றுத்தாருங்கள்,’’ என்று ஃபேஸ்புக்கில் ஒரு பதிவு அதிக அளவில் ஷேர் செய்யப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: திருச்சி அருகில் வறுமையால் ஆடு மேய்க்கும் MBBS முதல் ஆண்டு மாணவி.உங்களால் முடிந்தால் #Share செய்து உதவியை பெற்றுக்குடுங்கள். Archived link இளம் பெண் ஒருவர் ஆடு மேய்த்துக்கொண்டிருக்கிறார். இயக்குநர் சசிகுமார் படம் மற்றும் பெயரில் உள்ள […]

Continue Reading

தண்ணீரில் வெண்ணெய் எடுக்கும் மோடி: ஃபேஸ்புக் செய்தியின் உண்மை அறிவோம்!

‘’தண்ணீரில் வெண்ணெய் எடுக்கும் மோடி,’’ என்ற தலைப்பில் ஒரு ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன் உண்மைத்தன்மை பற்றி ஆய்ய தீர்மானித்தோம். முடிவுகள் இதோ… தகவலின் விவரம்: …தண்ணியில வெண்ணை எடுக்கிறவர கண்டிருக்கிங்களா? அவர்தான்மோடி..! இனியும் அனுமதிக்கலாம் அவரின் ஆட்சியை..?… Archived Link ஏப்ரல் 14ம் தேதி வெளியிடப்பட்டுள்ள இந்த ஃபேஸ்புக் பதிவில், ‘’ தண்ணியில வெண்ணை எடுக்கிறவர கண்டிருக்கிங்களா? அவர்தான்மோடி..! இனியும் அனுமதிக்கலாம் அவரின் ஆட்சியை..?,’’ எனக் கேட்டுள்ளனர். கீழே, மோடியின் புகைப்படம், தி இந்துவில் […]

Continue Reading

36 தொழிலதிபர்கள் இந்தியாவை விட்டு வெளியேறியதற்கு மோடி காரணமா?

‘’மல்லையா, நிரவ் மோடி உள்பட 36 தொழிலதிபர்கள் இந்தியாவை விட்டு ஓடிவிட்டார்கள் என்று அமலாக்கத் துறை கூறியுள்ளது,’’ என்ற தலைப்பில் ஃபேஸ்புக்கில் ஒரு வைரல் செய்தியை காண நேரிட்டது. இதன் உண்மைத்தன்மையை ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Archived Linkஅரசியல் I Support Thirumurugan Gandhi என்ற ஃபேஸ்புக் குழு, கடந்த ஏப்ரல் 16ம் தேதி இந்த பதிவை வெளியிட்டுள்ளது. இதில், மோடி, மல்லையா உள்ளிட்ட 36 தொழிலதிபர்கள், நாட்டை விட்டு தப்பியோடிவிட்டதாக, அமலாக்கத்துறை நீதிமன்றத்தில் […]

Continue Reading

பங்காரு அடிகளாருக்கு பாத பூஜை செய்தாரா ஸ்டாலின்?

மேல் மருவத்தூர் பங்காரு அடிகளாருக்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் பாத பூஜை செய்வது போன்ற புகைப்படம் ஒன்று சமூக ஊடகங்களில் அதிக அளவில் வைரலாகி வருகிறது. இததைப் பற்றி ஆய்வு செய்தோம். முடிவு உங்கள் பார்வைக்கு… தகவலின் விவரம்: அருள்புரிவாயே ஆதிபராசக்தி!!! தாயே!! Archived link தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மேல்மருவத்தூர் பங்காரு அடிகளாருக்கு பாத பூஜை செய்கிறார். அருகில், கவிஞர் கனிமொழி இருக்கிறார். மே 1ம் தேதி டிஎம்கே ட்ரோல் மீ மீ என்ற பக்கம் […]

Continue Reading

கட்டண சேனல்களுக்கு கட்டுப்பாடு விதித்தாரா கெஜ்ரிவால்?

விளம்பரம் ஒளிபரப்பும் தொலைக்காட்சிகள் நேயர்களிடம் கட்டணம் வசூலிக்கவும்  கட்டண சேனல்களில் விளம்பரம் ஒளிபரப்பவும் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தடை விதித்துள்ளதாக சமூக ஊடகங்களில் ஒரு தகவல் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்… தகவலின் விவரம்: Archived link அனைத்து கட்டண சேனல்களுக்கும் டெல்லி அரசு அதிரடி உத்தரவு… கட்டண சேனல்களில் விளம்பரம் இருக்கக் கூடாது. விளம்பரம் வெளியிடும் தொலைக்காட்சிகள் மக்களிடம் கட்டணம் வசூலிக்கக் கூடாது. கோடிக்கணக்கான ரூபாய் சம்பாதிக்கும் சேனல்களுக்கு […]

Continue Reading

ஐ.எம்.எஃப் தலைவராக மயில்சாமியை நியமிக்க ஷேர் செய்யுங்கள்: ஃபேஸ்புக் வதந்தி

ஐ.எம்.எஃப் எனப்படும் சர்வதேச செலாவணி நிதியம் அமைப்பின் தலைவராக நடிகர் மயில்சாமியை நியமிக்க முடிவு செய்துள்ளதாகவும் அவர் தமிழர் என்பதால் மத்திய அரசு முட்டுக்கட்டை போடுவதாகவும் ஒரு படம் அதிக அளவில் ஷேர் செய்யப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: விரைந்து ஷேர் செய்யுங்கள் போராளிகளே . தமிழண்டா .. Archived link மயில்சாமியின் பொருளாதார அறிவைப் பார்த்து வியந்த இன்டர்நேஷனல் மானிட்டரி ஃபண்ட் அமைப்பு அவரை தலைவராக நியமிக்க முடிவு செய்துள்ளதாகவும் […]

Continue Reading

ராகவா லாரன்ஸ் சீமானுக்கு பகிரங்க சவால்: பாலிமர் செய்தி உண்மையா?

‘’சீமானுக்கு ராகவா லாரன்ஸ் பகிரங்க சவால்,’’ என்ற தலைப்பில், பாலிமர் நியூஸ் தொலைக்காட்சி வெளியிட்டுள்ள வீடியோவை பலரும் வைரலாக ஷேர் செய்து வருகின்றனர். எனவே, இதன் உண்மைத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்:…ராகவா லாரன்ஸ் சீமானுக்கு பகிரங்க சவால் #RaghavaLawrence #Seeman … Archived Link ஏப்ரல் 15ம் தேதி இந்த வீடியோ செய்தியை, பாலிமர் நியூஸ் வெளியிட்டுள்ளது. இதில், சீமான் நடிகர் ராகவா லாரன்ஸ் பற்றி விமர்சித்துப் பேசுகிறார். அதற்கு, ராகவா லாரன்ஸ் […]

Continue Reading

காஞ்சிபுரம் அர்ச்சகர் தேவநாதன் உண்மையில் ஒரு முஸ்லீம்: ஃபேஸ்புக் செய்தியால் சர்ச்சை

‘’காஞ்சிபுரம் அர்ச்சகர் தேவநாதன், பிராமணர் வேஷத்தில் வாழும் ஒரு முஸ்லீம்; அவனது உண்மையான பெயர் தாவூத் நவுஷத் கான்,’’ என்ற தலைப்பில் ஒரு ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதனை பலரும் ஷேர் செய்து வருவதால், இதன் உண்மைத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். வதந்தியின் விவரம்:…”Dawood Naushad Khan who claimed himself as Brahmin” உண்மையை அறிய கடைசி வரை முழுவதுமாக படிக்கவும். அனைவராலும் பரவலாக பேசப்பட்ட சம்பவம். காஞ்சிபுரம் குருக்கள் தேவநாதன் கருவறைக்குள் […]

Continue Reading