ரிலையன்ஸ். பதஞ்சலி பொருட்களைத் தவிர்க்கும்படி ஹிமாலயா நிறுவனத்தின் உரிமையாளர் பேசினார் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

டெல்லியில் ஒருவர் பேசிய வீடியோ ஃபேஸ்புக்கில் பகிரப்பட்டுள்ளது. இந்தியில் பேசுகிறார். ரிலையன்ஸ், பதஞ்சலி பொருட்களை தவிர்க்க வேண்டும் என்பது போல் அவர் பேசியது போல உள்ளது. நிலைத் தகவலில், "himaalay prodakt ka ரிலையன்ஸ் மற்றும் பதஞ்சலியால் அதன் முதுகு உடைந்து போவதாக தெரிகிறது. *ஹிமாலயா* நிறுவனத்தின் *உரிமையாளர்* ஒரு முஸ்லீம், அவர் பேச்சைக் கேளுங்கள், சிந்தித்து எச்சரிக்கையாக இருங்கள், ஆயுர்வேத மருந்தான *liv52* *syrup* se lekar *himaliya* *neem* 🌿 *துளசி* மற்றும் * அழகு சாதனப் பொருட்களைத் தயாரிக்கிறார். hand* *sensitiser* tak, ஹிமாலயா என்ற பெயரைக் கேட்டவுடன், நாங்கள் விரைவாக உணர்ச்சிவசப்பட்டு, எங்கள் முடிவுகளையும் நிறுவனங்களையும் விட்டுவிட்டு, ஹிமாலயாவின் பெயரை நம்புகிறோம், அதேசமயம் அதன் உண்மையை முன்னால் இருந்து பார்க்க முடியும், அதை எல்லா குழுக்களிலும் வைத்து நீங்களே வாங்குவதை நிறுத்துங்கள். அவர் மண்டியிடுவார், பல விருப்பங்கள் உள்ளன.👇 இந்துக்களை புறக்கணிக்கவும், ஹிமாலயா தயாரிப்புகள்.

இதில் அவர் கூறுகிறார் ரிலையன்ஸ் பெட்ரோலை தவிர்க்க வேண்டுகிறார். ரிலையன்ஸ் மொபைல் போனை தவிர்க்க வேண்டுகிறார்.. பின்னர் பதஞ்சலி பொருட்களை வாங்க வேண்டாம் என்கிறார்.. உடனடியாக ஹிந்துக்கள் முழித்து கொள்ளவில்லை என்றால் நிலைமை மோசமாகும் என்பது தெரிகிறது" என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வீடியோவை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

ஹிமாலயா நிறுவனத்தின் உரிமையாளர் இஸ்லாமியர் என்றும் அதனால் ரிலையன்ஸ், பதஞ்சலி தயாரிப்புக்களைத் தவிர்க்க வேண்டும் என்று அவர் கூறியதாக பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். ஒரு நிறுவனத்தின் உரிமையாளர் இப்படி வெளிப்படையாகக் கூறுவாரா என்ற சந்தேகத்தின் அடிப்படையில், இவர் ஹிமாலயா நிறுவனத்தின் உரிமையாளர் தானா என்று அறிய ஆய்வு செய்தோம்.

உண்மைப் பதிவைக் காண: himalayawellness.in I Archive

முதலில் ஹிமாலயா நிறுவனத்தின் நிர்வாகிகள் புகைப்படங்கள் கிடைக்கிறதா என்று பார்த்தோம். அதன் இணையதளத்தில் தலைவர்கள் பட்டியலை அது வெளியிட்டிருந்தது. தலைவர் முதல் பல நாடுகளுக்கான அதிகாரிகள் வரை முக்கிய தலைவர்களின் புகைப்படத்துடன் தகவல் வெளியிட்டிருந்தனர். அதில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட வீடியோவில் உள்ள நபரின் புகைப்படம் இல்லை.

Archive

அப்படி என்றால் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட வீடியோவில் உள்ளவர் யார் என்று அறிய அந்த வீடியோ காட்சியை புகைப்படங்களாக மாற்றி கூகுள் லென்ஸ் தளத்தில் பதிவேற்றித் தேடினோம். அப்போது 2020ம் ஆண்டு டெல்லியில் ஹாகின்பாக்கில் நடந்த சிஏஏ-வுக்கு எதிரான போராட்டத்தில் டெல்லி வழக்கறிஞர் ஒருவர் பேசிய காட்சி என்று குறிப்பிட்டு பலரும் பகிர்ந்திருப்பதைக் காண முடிந்தது. தொடர்ந்து தேடிய போது இவர் டெல்லியைச் சார்ந்த வழக்கறிஞர் பானு பிரதாப் சிங் என்று தெரியவந்தது.

Archive

ஃபேஸ்புக்கில் பானு பிரதாப் சிங், வழக்கறிஞர் என்று டைப் செய்து தேடிய போது அவரது பக்கம் நமக்குக் கிடைத்தது. அதில், சிஏஏ-வுக்கு எதிராக அவர் பல கூட்டங்களில் பேசியிருப்பதைக் காண முடிந்தது.

உண்மைப் பதிவைக் காண: Facebook

இதன் அடிப்படையில் கூகுளில் சில அடிப்படை வார்த்தைகளைப் பயன்படுத்தித் தேடிப் பார்த்தோம். அப்போது இது தொடர்பாக ஊடகங்களில் வெளியான செய்திகள் நமக்குக் கிடைத்தன. அதில், சிஏஏ-வுக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்ற வழக்கறிஞர் பானு பிரதாப் சிங் ரிலையன்ஸ், பதஞ்சலி தயாரிப்புகளுக்கு எதிராகப் புறக்கணிப்பை மேற்கொள்ள வேண்டும் என்று பேசினார்.

"பசு மற்றும் பசுவின் சாணியைப் பாபா ராம்தேவ் விற்கிறார். அவரது தயாரிப்புக்கள் பலவும் குப்பையாகத்தான் உள்ளது. அவரது லாபத்தின் பெரும்பகுதி ஆர்.எஸ்.எஸ்-க்கு செல்கிறது. அதை வைத்து இஸ்லாமியர்களுக்கு எதிரான ஆயுதங்களை வாங்குகிறார்கள். அவர்கள் நம்மிடமிருந்தே பணத்தை எடுத்து நமக்கு எதிராகவே பயன்படுத்துகின்றனர். இவர்கள் நம்முடைய எதிரிகள். இவர்களின் தயாரிப்புக்களை புறக்கணித்து அவர்களின் முதுகெலும்பை உடைக்க வேண்டும். அவர்கள் முதுகெலும்பு உடைக்கப்பட்டால் நமக்கு எதிராக அவர்களால் நிற்க முடியாது" என்று பேசியதாக செய்திகளில் குறிப்பிடப்பட்டிருந்தது.

உண்மைப் பதிவைக் காண: opindia.com I Archive 1 I eastcoastdaily.in I Archive 2

தீவிர வலதுசாரி ஊடகமான opindia.com இது தொடர்பான செய்தி வெளியாகி இருந்தது. அதில் யூடியூப் வீடியோ அகற்றப்பட்டிருந்தது. ஆனால் எக்ஸ் தள பதிவு அப்படியே இருந்தது. அந்த எக்ஸ் தள பதிவில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட வீடியோ இருந்தது. இதன் மூலம் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட வீடியோவில் உள்ள நபர் ஹிமாலயா நிறுவனத்தின் உரிமையாளர் இல்லை, டெல்லியைச் சார்ந்த வழக்கறிஞர் பானு பிரதாப் சங் தான் என்பது உறுதியானது. இதன் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

2020ம் ஆண்டு டெல்லியில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிரான போராட்டத்தில் வழக்கறிஞர் பானு பிரதாப் சிங் என்பவர் பேசிய வீடியோவை எடுத்து, பதஞ்சலி நிறுவனத்துக்கு எதிராக ஹிமாலயா நிறுவனத்தின் உரிமையாளர் பேசினார் என்று தவறாக பகிர்ந்திருப்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:ரிலையன்ஸ், பதஞ்சலி பொருட்களைத் தவிர்க்கும்படி ஹிமாலயா நிறுவனத்தின் உரிமையாளர் கூறினாரா?

Written By: Chendur Pandian

Result: False