அரசியல்வாதியிடம் அடிவாங்கும் காவல்துறை என்று பகிரப்படும் பழைய வீடியோ…

அரசியல் | Politics சமூக ஊடகம் | Social தமிழ்நாடு | Tamilnadu

‘’அப்பாவி மக்களிடம்தான் அதிகாரம் காட்டும் காவல்துறை.. அரசியல்வாதியிடம் அடிவாங்கும்,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம். 

தகவலின் விவரம்:

இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். 

இந்த வீடியோ செய்தியின் தலைப்பில், ‘’ அப்பாவி பொதுமக்களிடம் மட்டுமே இந்த ஏவல்துறை அதிகாரத்தை காட்டும்… 

அரசியல்வாதி கிட்ட அடி வாங்கும்…’’ என்று எழுதப்பட்டுள்ளது. 

உள்ளே, TamilNadu: Former MP K Arjunan kicks a police officer after being asked to show the e-pass,’’ என்று ஆங்கிலத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

Claim Link l Archived Link 

பலரும் இதனை உண்மை என நம்பி, சமூக வலைதளங்களில் ஷேர், கமெண்ட் செய்து வருகின்றனர்.  

உண்மை அறிவோம்:

மேற்கண்ட தகவல் தொடர்பாக, நாம் விவரம் தேடினோம். முதலில், இந்த படத்தை கூகுளில் பதிவேற்றி, ரிவர்ஸ் இமேஜ் தேடல் செய்தோம். அப்போது நமக்கு சில ஆதாரங்கள் கிடைத்தன. 

The Indian Express Tweet 

மேற்கண்ட வீடியோ கடந்த 2020ம் ஆண்டு பதிவு செய்யப்பட்டதாகும். அப்போது தமிழ்நாடு முழுக்க கொரோனா ஊரடங்கு நடைமுறையில் இருந்ததால், ஒருவர் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்லவும், வேறு மாநிலம் செல்லவும் இ-பாஸ் கட்டாயம் எடுக்க வேண்டும. 

இதன்படி, சேலம் கருப்பூர் டோல்கேட் அருகே கடந்த 2020ம் ஆண்டு ஜூன் 28ம் தேதி இரவு காரில் வந்த அதிமுக முன்னாள் எம்பி அர்ஜூனன் அங்கே சோதனையில் ஈடுபட்டிருந்த காவல்துறையினரிடம் அடையாள அட்டை காட்ட மறுத்துள்ளார். இதனால், அவருக்கும், அங்கிருந்த எஸ்.ஐ., ஒருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு, அது ஒருவரை ஒருவர் தாக்கும் அளவுக்குச் சென்றது. 

இதுதொடர்பான செய்தி, மறுநாள் அதாவது ஜூன் 29, 2020 அன்று ஊடகங்களில் வெளியிடப்பட்டது. அதனையே தற்போது சிலர் புதியதுபோல மறுபகிர்வு செய்கின்றனர். 

Vikatan Link l Nakkheeran Link l Thanthi TV Link 

இந்த விவகாரம் தொடர்பாக, அப்போதே அர்ஜூனன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. 

Dinamalar Link 

இதேபோன்று, அர்ஜூனனும் பதிலுக்கு போலீஸ் மீது புகார் அளித்தார். 

Nakkheeran Link

எனவே, 2020ம் ஆண்டு கொரோனா ஊரடங்கு காலத்தில் (அதிமுக ஆட்சி) நிகழ்ந்த சம்பவம் தொடர்பான வீடியோவை எடுத்து, தற்போதைய மக்களவைத் தேர்தல் 2024 வாகன தணிக்கை, TTF வாசன் கைது உள்ளிட்ட சம்பவங்களுடன் தொடர்புபடுத்தி தேவையற்ற வதந்தியை சிலர் பரப்பி வருவதாக, சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம். 

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter PageI Google News Channel I Instagram 

Avatar

Title:அரசியல்வாதியிடம் அடிவாங்கும் காவல்துறை என்று பகிரப்படும் பழைய வீடியோ…

Fact Check By: Fact Crescendo Team 

Result: MISLEADING