
‘’சென்னை மழை வெள்ளத்தில் மிதக்கும் கார்,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு புகைப்படம் பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.
இதில், ‘’ மெட்ராஸ்ல கட்டிக் குடுத்தீயளே உம்ம பொண்ணு – நல்லா பாத்துக்கிடுதாங்களா, எப்படி இருக்காளாம்?
ஓ இப்பம்தாம்லே ஃபோன்லே பேசினேன்.
“முழுவாம இருக்காளாம்”,’’ என்று எழுதப்பட்டுள்ளது.
பலரும் இதனை உண்மை என நம்பி, ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
ஆண்டுதோறும் நவம்பர், டிசம்பர் மாதங்களில் வடகிழக்கு பருவமழை காரணமாக, சென்னை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகள் வெள்ளக்காடாக மாறுவது வழக்கம். தற்போது 2023ம் ஆண்டு முடிவடையும் நிலையில் சென்னை மீண்டும் மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்டுள்ளது.
Dinamani Link l Dailythanthi Link
இதையொட்டி சென்னையை கேலி கிண்டல் செய்து சமூக வலைதளங்களில் பல்வேறு பதிவுகள் பகிரப்படுகின்றன.
இதில் ஒன்றுதான் நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட கார் புகைப்படமும்…
உண்மையில், இந்த கார் புகைப்படம் தற்போது எடுக்கப்பட்டதல்ல; 2021ம் ஆண்டு அப்போதைய அதிமுக ஆட்சிக் காலத்தில் நவம்பர் மாத இறுதியில் சென்னையில் மழை வெள்ளம் ஏற்பட்டபோது எடுக்கப்பட்ட படமாகும்.

India TV News Link l The Hindu Business Line
எனவே, 2021ம் ஆண்டு முதலே சமூக வலைதளங்களில் பகிரப்படும் மேற்கண்ட கார் புகைப்படத்தை எடுத்து, முன்னுக்குப் பின் முரணான தகவல் பரப்பியுள்ளனர் என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…
Facebook Page I Twitter Page I Google News Channel I Instagram

Title:‘சென்னை மழை வெள்ளத்தில் மிதக்கும் கார்’ என்று பரவும் பழைய புகைப்படத்தால் சர்ச்சை…
Written By: Fact Crescendo TeamResult:MISSING CONTEXT
