‘’திமுக அமைச்சர் செந்தில் பாலாஜி விடுவிப்பு,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.

இதில், ‘’அமைச்சர் செந்தில் பாலாஜி விடுவிப்பு,’’ என்று எழுதப்பட்டுள்ளது.

Claim Link l Archived Link

News 18 தமிழ்நாடு வெளியிட்ட செய்தியும் இதனுடன் இணைக்கப்பட்டுள்ளதால், பலரும் உண்மை என நம்பி, ஷேர், கமெண்ட் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

குறிப்பிட்ட தகவல் உண்மையா என்று நாம் விவரம் தேடினோம். அப்போது, இதுபோன்ற செய்தி எதுவும் சமீபத்தில் வெளியாகவில்லை என்று தெரியவந்தது.

தொடர்ந்து News 18 தமிழ்நாடு ஊடகம் தரப்பில் கேட்டபோது, ‘’இது கடந்த 2023ம் ஆண்டு ஜூலை 04 அன்று நாங்கள் வெளியிட்ட செய்தி,’’ என்றனர்.

இதன்படி, 2023ஆம் ஆண்டு, ஜூன் மாதம் திமுக (முன்னாள்) அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். இதனைத்தொடர்ந்து, அவரது மனைவி மேகலா, சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கு 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு முன்பாக ஜூலை மாதம் விசாரணைக்கு வந்தது. அதில், நீதிபதி நிஷா பானு, “செந்தில் பாலாஜி கைது சட்டவிரோதமான ஒன்று. அவரை உடனடியாக விடுதலை செய்யலாம்’’ என்று தீர்ப்பளித்திருந்தார். ஆனால், அதேசமயம் மற்ற 2 நீதிபதிகள் பரதசக்ரவர்த்தி மற்றும் சி.வி.கார்த்திகேயன் ஆகியோர், ‘’செந்தில் பாலாஜி கைது சரியானதுதான்; அவரை அமலாக்கத்துறை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளிக்கிறோம்,’’ என்று தீர்ப்பு வழங்கினர்.

இந்த செய்தி News 18 தமிழ்நாடு மட்டுமின்றி பல்வேறு ஊடகங்களிலும் வெளியாகியிருந்தது.

Maalaimalar Link l Oneindia Tamil Link l Hindu Tamil Link

அடுத்த சில நாட்களில் இந்த ஆட்கொணர்வு வழக்கு முடித்து வைக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

Maalaimalar Link

எனவே, 2023ம் ஆண்டு ஜூலை மாதம் வெளியான செய்தியை எடுத்து, தற்போது நிகழ்ந்தது போன்று வதந்தி பரப்பியுள்ளனர் என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter PageI Google News Channel I Instagram

Avatar

Title:திமுக அமைச்சர் செந்தில் பாலாஜி விடுவிப்பு என்று பரவும் செய்தி உண்மையா?

Written By: Fact Crescendo Team

Result: Misleading