
‘’அரபு நாட்டில் சந்தையில் விற்கப்படும் பெண்கள்,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு வீடியோ பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.
தகவலின் விவரம்:
இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.
இதில், ‘’ அரபுநாட்டில் சந்தையில் விற்கப்படும் பெண்கள் இவனுங்கதான் வாய்கிழிய பெண் விடுதலை பத்திப்பேசுவானுங்க,’’ என்று எழுதப்பட்டுள்ளது. இதனுடன் வீடியோ ஒன்றும் இணைக்கப்பட்டுள்ளது. அதில், பெண்கள் வரிசையாக நிற்க, ஆண்கள் அவர்களை விலை பேசுவது போன்று காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
Claim Link 1 l Claim Link 2 l Claim Link 3
பலரும் இதனை உண்மை என நம்பி, சமூக வலைதளங்களில் ஷேர், கமெண்ட் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
மேற்கண்ட தகவல் உண்மையா என்று நாம் ஆய்வு மேற்கொண்டோம். அப்போது, இது கடந்த 2023ம் ஆண்டு ஈராக் நாட்டில் நடந்த தெரு நாடகம் ஒன்றின் காட்சி, என்று தெரியவந்தது.
இதன்படி, Aryan Rafiq என்பவர், The Unheard Screams Of The Ezidkhan Angels என்ற தலைப்பில் கடந்த 2023ம் ஆண்டு, ஐஎஸ்ஐஎஸ் யாசிதி மக்களுக்கு செய்த கொடுமைகளை வெளிப்படுத்தும் வகையில் தெரு நாடகம் ஒன்றை நடத்தியுள்ளார்.
இதுதொடர்பாக ஊடகங்களிலும் ஏற்கனவே செய்தி வெளியாகியுள்ளது.
எனவே, 2023ம் ஆண்டு நடைபெற்ற தெரு நாடகம் தொடர்பான காட்சியை எடுத்து, உண்மைச் சம்பவம் போன்று தற்போது பரப்புகிறார்கள், என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…
Facebook Page I Twitter PageI Google News Channel I Instagram

Title:அரபு நாட்டில் சந்தையில் விற்கப்படும் பெண்கள் என்று பரவும் வீடியோ உண்மையா?
Written By: Pankaj IyerResult: False
