‘’சாராயத்தை ஒழிக்க முடியாத திமுக சனாதனத்தை ஒழித்துவிடுமா’’, என்று நடிகர் சித்தார்த் கேட்டதாக, சமூக வலைதளங்களில் வேகமாகப் பகிரப்படும் ஒரு செய்தி பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049044263 & +919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.

பலரும் இவற்றை உண்மை என நம்பி ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

நடிகர் சித்தார்த் அவ்வப்போது சர்ச்சைக்குரிய வகையில் அரசியல் ரீதியான கருத்துகள் வெளியிடுவது வழக்கம். இந்நிலையில், மேற்கண்டவாறு திமுக அரசை விமர்சித்து அவர் பேசினாரா என்றால், இல்லை என்பதே பதில். ஆம், இந்த செய்தி உண்மையானதல்ல.

நாம் இதுதொடர்பாக சன் நியூஸ் டிஜிட்டல் பிரிவை தொடர்பு கொண்டு கேட்டபோது, ‘’நடிகர் சித்தார்த் பற்றி நாங்கள் வெளியிட்ட வேறொரு செய்தியை எடுத்து இவ்வாறு எடிட் செய்து, பரப்புகிறார்கள்,’’ என்று தெரிவித்தனர்.

உண்மையான நியூஸ் கார்டு லிங்க் இதோ…

இதுபற்றிய முழு செய்தி விவரம் கீழே இணைக்கப்பட்டுள்ளது.

உண்மையான நியூஸ் கார்டை நாம் ஆய்வு செய்யும் செய்தியுடன் ஒப்பீடு செய்து, கீழே இணைத்துள்ளோம்.

எனவே, நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட செய்தி உண்மையல்ல, என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter PageI Google News Channel I Instagram

Avatar

Title:‘சாராயத்தை ஒழிக்க முடியாத திமுக சனாதனத்தை ஒழித்துவிடுமா’ என்று நடிகர் சித்தார்த் கேட்டாரா?

Written By: Fact Crescendo Team

Result: ALTERED