‘’ பனாரஸ் மெட்ரோ ரயில் நிலையம்’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு புகைப்படம் பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049044263 & +919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.

இதில், ‘’ இது #கோயில் கிடையாதுங்க!

#பனாரஸ்

#மெட்ரோ நிலையம்🔥,’’ என்று எழுதப்பட்டுள்ளது.

பலரும் இதனை உண்மை என நம்பி ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

குறிப்பிட்ட படத்தை கூகுள் உதவியுடன் நாம் ரிவர்ஸ் இமேஜ் தேடல் செய்தோம். அப்போது, இதனை ஏற்கனவே @Amarrrrz என்ற பெயர் கொண்ட X வலைதள பயனாளர் ஒருவர் பதிவிட்டிருந்ததைக் கண்டோம்.

இது மட்டுமின்றி, இதுபோன்று பல படங்களையும் அவர் பதிவிட்டிருந்தார்.

அவரது பதிவில் உள்ள கமெண்ட்களை படித்தபோது, இது AI மாதிரி என்றும், இதுபற்றி பிரதமருக்கு யாரேனும் தகவல் கூற வேண்டும் என்றும் சிலர் குறிப்பிட்டிருந்தனர்.

இறுதியாக, நாம் குறிப்பிட்ட (@Amarrrrz) X தள பதிவரை தொடர்பு கொண்டு விளக்கம் கேட்டோம். அப்போது அவர், ‘’கடந்த அக்டோபர் 21, 2023 அன்று @protosphinx என்ற எக்ஸ் வலைதள பதிவர் நவீன இந்திய ரயில் நிலையம், நூலகம் என்றெல்லாம் குறிப்பிட்டு சில படங்களை AI தொழில்நுட்ப உதவியுடன் தயாரித்து, பகிர்ந்தார். அதனை பின்பற்றி நானும் ‘இந்திய மெட்ரோ ரயில் நிலைய மாதிரிகள்’ என்ற தலைப்பில் சில படங்களை வடிவமைத்து, வெளியிட்டேன். மற்றபடி இவை உண்மையான படங்கள் அல்ல,’’ என்றார்.

எனவே, இது உண்மையான படம் அல்ல, என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter PageI Google News Channel I Instagram

Avatar

Title:பனாரஸ் மெட்ரோ ரயில் நிலையம் என்று பகிரப்படும் புகைப்படம் உண்மையா?

Written By: Fact Crescendo Team

Result: False