2024 நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் - இந்தியா கூட்டணிக்கு ஆதரவாக தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் பிரசாரம் செய்தார் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக தேர்தல் பிரசாரம் செய்தார் என்று குறிப்பிட்டு வீடியோ ஒன்று ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், "இந்தியாவை மீட்க காங்கிரஸ்க்கு ஆதரவாக களமிறங்கிய புஷ்பா" என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதை பலரும் பகிர்ந்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

முதல் கட்ட நாடாளுமன்ற தேர்தல் முடிந்துள்ளது. அதேசமயம், மற்ற இடங்களில் தேர்தல் பிரசாரம் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக அல்லு அர்ஜுன் பிரசாரம் செய்தார் என்று சிலர் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

இந்த வீடியோவை பார்க்கும் போது இந்தியாவில் பிரசாரம் செய்யப்பட்டது போன்று தெரியவில்லை. அமெரிக்காவின் நியூயார்க்கில் ஒவ்வொரு ஆண்டும் இந்திய சுதந்திர தினத்தையொட்டி இந்தியர்கள் பேரணி நடத்துவார்கள். அந்த பேரணி வீடியோ போன்று இருக்கவே, இந்த வீடியோ தொடர்பாக ஆய்வு செய்தோம்.

வீடியோ காட்சியை புகைப்படங்களாக மாற்றி கூகுள் ரிவர்ஸ் இமேஜ் தேடல் செய்தோம். அப்போது, இந்த வீடியோ 2022ம் ஆண்டு நியூ யார்க்கில் நடந்த இந்திய சுதந்திர தின பேரணியின் போது எடுக்கப்பட்டது என்பது தெரியவந்தது.

உண்மைப் பதிவைக் காண: indiatvnews.com I Archive 1 I hindustantimes.com I Archive 2

இது தொடர்பாக 2022ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பல ஊடகங்களும் இந்த வீடியோ மற்றும் புகைப்படத்தை பயன்படுத்தி செய்தி வெளியிட்டிருந்ததைக் காண முடிந்தது. 75வது இந்திய சுதந்திர தினத்தையொட்டி இந்த பேரணி நடந்தது என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.

செய்தி ஊடகங்கள் மட்டுமின்றி சமூக ஊடகங்களிலும் இந்த வீடியோ 2022ம் ஆண்டு பதிவிடப்பட்டிருந்தது. அல்லு அர்ஜுன் ரசிகர்கள் இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் பக்கங்களிலும் இந்த வீடியோ பதிவிடப்பட்டிருந்தது. இவை எல்லாம் இந்த வீடியோ 2024 நாடாளுமன்றத் தேர்தலின் போது எடுக்கப்பட்டது இல்லை என்பதை உறுதி செய்தன.

நம்முடைய ஆய்வில், அல்லு அர்ஜுன் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக பிரசாரம் செய்தார் என்று பரவும் வீடியோ 2022ல் அமெரிக்காவில் நடந்த இந்தியா சுதந்திர தின பேரணியின் போது எடுக்கப்பட்டது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

2022ம் ஆண்டு அமெரிக்காவில் நடந்த இந்திய சுதந்திர தின பேரணி வீடியோவை எடுத்து 2024 நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக அல்லு அர்ஜுன் பிரசாரம் செய்தார் என்று தவறாக பகிர்ந்திருப்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:அல்லு அர்ஜுன் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக தேர்தல் பிரசாரம் செய்தாரா?

Fact Check By: Chendur Pandian

Result: False