
‘’கெட் அவுட் ஸ்டாலின் என்பதற்கு பதிலாக ‘கட் அவுட் ஸ்டாலின்’ என்று போஸ்டர் ஒட்டிய பாஜக,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு புகைப்படம் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.
தகவலின் விவரம்:
இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.
இதில், ‘’ #Get out Stalin #கட் அவுட் ஸ்டாலின்
காவி களப்பணியில் G. ராஜ்குமார் BA LLB., மதுரை மாவட்ட துணை தலைவர், பாஜக,’’ என்று எழுதப்பட்டுள்ளது.
பலரும் இதனை உண்மை என நம்பி, சமூக வலைதளங்களில் ஷேர், கமெண்ட் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
மேற்கண்ட புகைப்படம் உண்மையா என்று நாம் ஆய்வு மேற்கொண்டோம். அப்போது, இது ஒரு எடிட் செய்யப்பட்ட புகைப்படம் என்று தெரியவந்தது.
இதேபோன்று, tamilwire என்ற இணையதளத்திலும் இந்த புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது. அதனையும் ஆதாரத்திற்காகக் கீழே இணைத்துள்ளோம்.
உண்மையான புகைப்படத்தையும், நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட புகைப்படத்தையும் ஒப்பீடு செய்து, கீழே இணைத்துள்ளோம்.
எனவே, நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட புகைப்படம் எடிட் செய்யப்பட்ட ஒன்று, என சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…
Facebook Page I Twitter PageI Google News Channel I Instagram

Title:‘கட் அவுட் ஸ்டாலின்’ என்று பாஜக.,வினர் போஸ்டர் ஒட்டினரா?
Written By: Pankaj IyerResult: Altered
