‘’பிரபாகரன் புகைப்படத்தை வணங்கும் மூதாட்டி’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு புகைப்படம் பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.

இதில், ‘’ எப்பேர்ப்பட்ட மாமனிதன் நம்‌ தமிழின தலைவர் 🙏❤️

#தமிழினத்தலைவர்_பிரபாகரன்’’ என்று எழுதப்பட்டுள்ளது.

Claim Link l Archived Link

பலரும் இதனை உண்மை என நம்பி, சமூக வலைதளங்களில் ஷேர், கமெண்ட் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

மேற்கண்ட புகைப்படம் உண்மையா என்று நாம் கூகுள் உதவியுடன் ரிவர்ஸ் இமேஜ் தேடல் செய்தோம். அப்போது நமக்கு திமுக அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, எம்பி தமிழச்சி தங்கபாண்டியன் ஆகியோர் X தளத்தில் வெளியிட்ட சில பதிவுகள் கிடைத்தன.

அவற்றை நாம் ஆதாரத்திற்காக இங்கே இணைத்துள்ளோம்.

இவர்களுக்கும் முன்பாக, கடந்த 2021ம் ஆண்டே சிலர் மேற்கண்ட புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர்.

Tweet Link

நமக்குக் கிடைத்த ஆதாரங்கள் அனைத்திலுமே கருணாநிதியின் உருவப்படத்தை மூதாட்டி வணங்குவது போன்றே காட்சிகள் உள்ளன. இதனை எடிட் செய்து, பிரபாகரன் படத்தை சேர்த்து, வதந்தி பரப்புகிறார்கள் என்று தெளிவாகிறது.

உண்மையான புகைப்படத்தையும், எடிட் செய்யப்பட்ட புகைப்படத்தையும் ஆதாரத்திற்காகக் கீழே இணைத்துள்ளோம்.

எனவே, நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட புகைப்படம் எடிட் செய்யப்பட்டது, என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter PageI Google News Channel I Instagram

Avatar

Title:பிரபாகரன் புகைப்படத்தை வணங்கும் மூதாட்டி என்று பரவும் தகவல் உண்மையா?

Fact Check By: Fact Crescendo Team

Result: Altered