
‘‘எடியூரப்பாவை அவமதித்த அமித் ஷா,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு வீடியோ பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.
தகவலின் விவரம்:

இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049044263 & +919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.
பலரும் இந்த செய்தியை உண்மை என நம்பி ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
கர்நாடகா மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. ஆனால், அம்மாநில பாஜக.,வில் அசைக்க முடியாத சக்தியாக விளங்கிய எடியூரப்பா அரசியலில் இருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்துவிட்டார். அதேசமயம், அவரது மகன் விஜயேந்திரா தொடர்ந்து, பாஜக.,வில் தனித்த செல்வாக்குடன் இயங்கி வருகிறார். இருந்தும், அமித் ஷாவுக்கும், எடியூரப்பாவுக்கும் ஆகாது என்பதாலேயே இப்படியான அதிரடி மாற்றங்கள் நடைபெறுவதாக, கருத்து கூறப்படுகிறது.
இந்நிலையில், தேர்தல் பணிகளுக்காக, கர்நாடகா வந்த அமித் ஷா, எடியூரப்பாவின் வீட்டிற்கே சென்றார். அப்போது, அவரை வரவேற்கும் வகையில் எடியூரப்பா முதலில், பூங்கொத்து கொடுத்தார். ஆனால், அதனை அமித் ஷா வாங்காமல், எடியூரப்பாவின் மகனிடம் கொடுத்து, அவரது கையால் கொடுக்கும்படி சொல்கிறார். இந்த வீடியோவையே பலரும் பகிர்ந்து வருகின்றனர். ஆனால், இது பாதி வீடியோ மட்டுமே.
உண்மையில், முழு வீடியோவை பார்க்கும்போது, முதலில் விஜயேந்திரா கையால் பூங்கொத்து கொடுக்கச் சொல்லும் அமித் ஷா, அதன் பிறகு எடியூரப்பாவிடம் இருந்தும் பூங்கொத்து வாங்கிக் கொண்டு, புகைப்படங்களுக்கு போஸ் தருகிறார்.
முழு வீடியோ கீழே இணக்கப்பட்டுளளது.
தவிர, விஜயேந்திரா என்பவர் எடியூரப்பாவின் மகன்தான் என்ற உண்மை தெரியாமலேயே பலரும் அமித் ஷா அவமரியாதை செய்துவிட்டார் என்றே தகவல் பரப்புகின்றனர்.
இதே செய்தியை, முன்னணி ஊடகங்கள் சில அமித் ஷா கொடுத்த இன்ப அதிர்ச்சி என்ற அர்த்தத்தில் வெளியிட்டுள்ளன. அதனையும் கீழே பார்க்கலாம்.

Timesofindia link l Theprint link
இதுபற்றி விஜயேந்திரா வெளியிட்ட ட்வீட் ஒன்றையும் இணைத்துள்ளோம்.
இதேபோல, எடியூரப்பா வெளியிட்ட பதிவும் இங்கே தரப்பட்டுள்ளது.
இறுதியாக, சமூக வலைதளங்களில் பகிரப்படும் எடிட் செய்யப்பட்ட வீடியோவையும், முழு வீடியோவையும் ஒப்பீடு செய்து, நாம் இங்கே கொடுத்துள்ளோம். அதனை பார்க்க…
இதன்படி, வேண்டுமென்றே முழு வீடியோவை பகிராமல் எடிட் செய்த ஒன்றை பகிர்ந்து, இவ்வாறு வதந்தி பரப்பியுள்ளனர் என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…
Facebook Page I Twitter PageI Google News Channel I Instagram
