ஹமாஸ், ஹிஸ்புல்லா தாக்குதலில் உயிரிழந்தவர்களின் இறுதி ஊர்வலம் என்று பரவும் வீடியோ உண்மையா?

Update: 2024-10-19 05:44 GMT

ஹமாஸ் மற்றும் ஹிஸ்புல்லா அமைப்பினர் இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலில் ஏராளமானோர் உயிரிழந்ததாகவும், அவர்களது உடல் எடுத்துச் செல்லப்படும் காட்சி என்றும் ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:


உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

இஸ்ரேல் கொடி போர்த்தப்பட்ட ஏராளமான சவப்பெட்டிகள் எடுத்து வரும் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், "இஸ்ரேல் முழுதும் மரண ஓசையின் அழுகுரல் வெளுத்துக்கட்டும் ஹமாஸ். ஹிஸ்புல்லா" என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த பதிவை பலரும் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

இஸ்ரேல் மீது பாலஸ்தீனத்தின் ஹமாஸ் மற்றும் லெபனான் நாட்டைச் சார்ந்த பயங்கரவாத அமைப்பான ஹிஸ்புல்லா நடத்திய தாக்குதலில் உயிரிழந்தவர்களின் உடல்கள் அடக்கம் செய்யக் கொண்டு செல்லப்படுவது போன்று வீடியோ பகிரப்பட்டுள்ளது. நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவில் இரண்டு வீடியோக்களை ஒன்று சேர்த்து ஒன்றாக பதிவிட்டுள்ளனர். முதலில் சவப்பெட்டிகள் வரிசையாக கொண்டுவரப்படும் வீடியோ பற்றி ஆய்வு செய்தோம்.

Full View

நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட வீடியோவில் AP என்ற செய்தி நிறுவனத்தின் லோகோ உள்ளது. எனவே, அந்த ஊடகம் வெளியிட்ட வீடியோவை தேடினோம். வீடியோ காட்சியைப் புகைப்படங்களாக மாற்றி கூகுள் லென்ஸ் தளத்தில் பதிவேற்றித் தேடினோம். நீண்ட தேடலுக்குப் பிறகு ஏபி செய்தி நிறுவனம் வெளியிட்டிருந்த அந்த வீடியோ நமக்குக் கிடைத்தது. அதில், "டெல் அவிவ் நகரில் காஸாவில் பிணைக் பணயக்கைதிகளாக உள்ள இஸ்ரேல் மக்களை மீட்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி போலி சவப்பெட்டிகளை ஏந்தி ஆர்ப்பாட்டக்காரர்கள் போராட்டம் நடத்தினர்" என்று குறிப்பிடப்பட்டிருந்தது. போலி சவப்பெட்டி என்று குறிப்பிட்டிருப்பதன் மூலம் இது இறந்தவர்களின் உடல்கள் இல்லை என்பது தெளிவாகிறது.

Archive

இந்த போராட்டம் தொடர்பாக மேலும் அறிந்துகொள்ள சில அடிப்படை வார்த்தைகளைக் கூகுளில் பதிவிட்டுத் தேடினோம். அப்போது செப்டம்பர் 5, 2024 அன்று டெல் அவிவ் நபரில் இந்த போராட்டம் நடந்ததாக பல செய்திகள் நமக்குக் கிடைத்தன. அதில், "ஹமாஸ் அமைப்புக்கும் இஸ்ரேலுக்கும் இடையே 2023ம் ஆண்டு அக்டோபர் 7ம்தேதி போர் தொடங்கியது. அப்போது ஏராளமான இஸ்ரேலியர்களை ஹமாஸ் அமைப்பினர் கடத்திச் சென்றனர். அவர்கள் இன்னமும் ஹமாஸ் அமைப்பின் கட்டுப்பாட்டில் உள்ளனர். கடத்தப்பட்டு 11 மாதங்கள் ஆன நிலையில், ஹமாஸ் அமைப்பினரால் 27 பிணையக் கைதிகள் கொல்லப்பட்டுள்ளனர். இன்னும் ஏராளமானோர் பிணையக் கைதிகளாக உள்ளனர். அவர்களை மீட்க வலியுறுத்தியும் ஹமாஸ் கடத்திக் கொன்ற 27 பேரின் நினைவாக 27 போலி சவப்பெட்டிகளை ஏந்தி போராட்டம் நடத்தப்பட்டது" என்று குறிப்பிடப்பட்டிருந்தது.


உண்மைப் பதிவைக் காண: euronews.com I Archive 1 I timesofisrael.com I Archive 2

2023 அக்டோபர் 7ம் தேதி இஸ்ரேல் மீது ஹமாஸ் திடீர் தாக்குதல் நடத்தி 251 பேரைக் கடத்திச் சென்றதாக கூறப்படுகிறது. இதில் 97 பேர் இன்னும் காஸாவில் இருப்பதாக நம்பப்படுகிறது. இஸ்ரேல் ராணுவ நடவடிக்கையில் சிலர் உயிருடனும், சிலர் பிணமாகவும் மீட்கப்பட்டுள்ளதாக அந்த செய்திகளில் குறிப்பிடப்பட்டிருந்தது. உயிருடன் உள்ளவர்களை மீட்க ஹமாசுடன் உடன்படிக்கை மேற்கொள்ள கடத்தப்பட்டவர்களின் உறவினர்கள் வலியுறுத்தியதாகவும் செய்தியில் கூறப்பட்டிருந்தது.

அடுத்ததாக பெண் ஒருவர் அழ, ராணுவ வீரர்கள் சவப்பெட்டி ஒன்றை சுமந்து வரும் காட்சி தொடர்பாக ஆய்வு செய்தோம். அந்த காட்சியை கூகுளில் பதிவேற்றித் தேடினோம். அந்த வீடியோ தொடர்பாக நமக்கு பெரிய அளவில் ஆதாரங்கள் கிடைக்கவில்லை. ஆனால், 2023ம் ஆண்டு ஜூன் மாதம் 23ம் தேதி இந்த வீடியோ டெலிகிராம் தளத்தில் பதிவிடப்பட்டுள்ளது. அதாவது ஹமாஸ் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்துவதற்கு சில மாதங்களுக்கு முன்பு இந்த வீடியோ பதிவிடப்பட்டுள்ளது. இதன் மூலம் இதற்கும் தற்போது இஸ்ரேல் - ஹமாஸ், ஹிஸ்புல்லாவுக்கு இடையே நடந்து வரும் மோதலுக்கும் தொடர்பில்லை என்பது தெளிவாகிறது.


உண்மைப் பதிவைக் காண: t.me I Archive

நம்முடைய ஆய்வில் ஹமாஸ் மற்றும் ஹிஸ்புல்லா தாக்குதலில் உயிரிழந்தவர்களின் உடல்கள் எடுத்துச் செல்லப்படுகிறது என்று பகிரப்பட்ட தகவல் தவறானது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஹமாஸ் கட்டுப்பாட்டில் உள்ள இஸ்ரேலிய பணயக்கைதிகளை மீட்கக் கோரி மாதிரி அல்லது போலி சவப்பெட்டியுடன் நடந்த போராட்டம் மற்றும் பழைய வீடியோக்களை ஒன்று சேர்த்து தவறான தகவலுடன் சமூக ஊடகங்களில் பகிர்ந்திருப்பது உறுதியாகிறது. இதன் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

'ஹமாஸ் கடத்திய இஸ்ரேலியர்களை மீட்க' வலியுறுத்தி 2024 செப்டம்பரில் நடத்தப்பட்ட போராட்ட காட்சியை ஹமாஸ், ஹிஸ்புல்லா தாக்குதலில் உயிரிழந்த இஸ்ரேலிய வீரர்களின் உடல்கள் கொண்டு செல்லப்படுவதாக சமூக ஊடகங்களில் தவறாக பகிர்ந்திருப்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel
Claim :  ஹமாஸ், ஹிஸ்புல்லா தாக்குதலில் உயிரிழந்த இஸ்ரேலிய வீரர்களின் உடல்கள் கொண்டு செல்லப்படும் வீடியோ!
Claimed By :  Social Media Users
Fact Check :  FALSE
Tags:    

Similar News