
‘‘பாரதியார் பாடலுக்கும், திருக்குறளுக்கும் வித்தியாசம் தெரியாதவர் அன்பில் மகேஷ்,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பரவும் தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.
தகவலின் விவரம்:

இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.
இதில், ‘’ யோவ் Anbil_Mahesh தற்குறி..!
பாரதியார் எப்ப திருக்குறள் எழுதுனாரு அவன் சின்ன பையன் பாரதியார் வேஷம் போட்டு பாரதியாரோட பாடலை பாடுறான் உனக்கு பாரதியார தெரியல அது திருக்குறள் இல்லை பாரதியார் பாட்டுனு கூட தெரியலயா நீ எல்லாம் கல்வி துறை அமைச்சர் வேற விளங்கிரும் கல்வித்துறை 💦’’ என்று எழுதப்பட்டுள்ளது.
Claim Link 1 l Claim Link 2 l Archived Link
பலரும் இதனை உண்மை என நம்பி, சமூக வலைதளங்களில் ஷேர், கமெண்ட் செய்வதைக் காண முடிகிறது.

உண்மை அறிவோம்:
மேற்கண்ட தகவல் உண்மையா என்று நாம் ஆய்வு மேற்கொண்டோம். இதுதொடர்பாக, திமுக ஐடி., பிரிவில் கேட்டபோது, ‘’ குறிப்பிட்ட வீடியோவில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, பாரதியார் வேடம் அணிந்திருக்கும் அந்த சிறுவனை அழைத்து “மேடையில் பாரதியார் என்ன பேசுனீங்க, பாரதியார் திருக்குறள் சொன்னீங்களா?” என்று கேட்கிறார். அதற்கு அந்தச் சிறுவன் “அச்சமில்லை” என்று கூறுகிறார். அதற்கு “அச்சமில்லையா, சரி சொல்லுங்க”என்று பாரதியார் எழுதிய ‘அச்சமில்லை அச்சமில்லை’என்ற பாடலையே கூறுமாறு அமைச்சர் சொல்கிறார்.
இந்த காட்சிதான் அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது. அமைச்சர் பேசுவதை தெளிவாகக் கேட்க முடிகிறது. ஆனால், இதனை வேண்டுமென்றே தவறாக திரித்து, அமைச்சர் அன்பில் மகேஷ்க்கு பாரதியார் – திருவள்ளுவர் வேறுபாடு தெரியவில்லை, என்று கூறி வதந்தி பரப்புகிறார்கள்,’’ என்று தெரிவித்தனர்.
மேலும், உண்மையான வீடியோ லிங்க் இதோ…
கூடுதல் ஆதாரம் இதோ…
இதேபோன்று, அமைச்சர் அன்பில் மகேஷ் அலுவலகத்திலும் பேசி, உறுதிப்படுத்தியுள்ளோம்.
எனவே, நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட தகவல், தவறானது, என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…
Facebook Page I Twitter Page I Google News Channel I Instagram
Title:பாரதியார் பாடலுக்கும், திருக்குறளுக்கும் வித்தியாசம் தெரியாதவர் அன்பில் மகேஷ் என்று பரவும் தகவல் உண்மையா?
Fact Check By: Pankaj IyerResult: Misleading


