‘டெலிவரி இந்து’- அர்ஜூன் சம்பத் பெயரில் தொடர்ந்து பரவும் விஷம பதிவுகள்!

அரசியல் | Politics சமூக ஊடகம் | Social தமிழ்நாடு | Tamilnadu

இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜூன் சம்பத் ட்வீட் என்று சில வேடிக்கையான பதிவுகள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றன, அவற்றுக்குப் பலரும் மிகவும் கடுமையாக கண்டன பதிவுகளையும் வெளியிட்டு வருகின்றனர். எனவே, அது பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

அர்ஜூன் சம்பத் வெளியிட்டது போன்று ட்வீட் ஒன்றின் ஸ்கிரீன்ஷாட் பகிரப்பட்டுள்ளது. அதில், “Ram + John. நாளடைவில் Ram + zan என்றானது. #Ramzan இஸ்லாமிய பண்டிகையே கிடையாது. ராமரை ஜானாக கிறித்தவர்கள் மதம் மாற்ற முயற்ச்சித்த போது முசுலிம்கள் ஜிகாத் செய்து #Ramzan ஆக மாற்றிவிட்டனர். – அர்ஜூன் சம்பத்” என்று இருந்தது. இதை Mpm Abdul Kader என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்டவர் 2022 ஏப்ரல் 10ம் தேதி பதிவிட்டுள்ளார்.

உண்மைப் பதிவைக் காண: Facebook 

மற்றொரு பதிவும் இப்படி பகிரப்பட்டு வருகிறது. அதில், “வீட்டுக்கு பொருட்கள் கொண்டு வார எல்லாரையும் இனிமே டெலிவரி ‘பாய்’னு சொல்லத் தடை விதிக்கனும். டெலிவரி ‘இந்து’னு தான் சொல்லனும். – அர்ஜூன் சம்பத்” என்று இருந்தது. இதை Haja Mahadoom என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்டவர் 2022 ஏப்ரல் 10ம் தேதி பதிவிட்டுள்ளார். இப்படி பல பதிவுகள் அர்ஜூன் சம்பத் பெயரில் பகிரப்பட்டு வருகின்றன.

உண்மை அறிவோம்:

இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜூன் சம்பத் பெயரில் போலியாக ட்விட்டர் அக்கவுண்ட் உருவாக்கி விஷமத்தனமான ட்வீட்கள் வெளியிடப்பட்டு வருகின்றன. அதை அர்ஜூன் சம்பத்தான் கூறினார் என்று கருதி பலரும் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர். இந்த ட்விட்டர் பக்கம் உண்மையில் அர்ஜூன் சம்பத்துக்கு உரியது இல்லை என்று முன்பே நம்முடைய ஃபேக்ட் கிரஸண்டோ தமிழில் கட்டுரை வெளியிட்டிருந்தோம். ஆனாலும், தொடர்ந்து பதிவுகள் வெளியாகிக் கொண்டுதான் இருக்கின்றன.

அர்ஜூன் சம்பத் பெயரில் தொடங்கப்பட்ட போலியான ட்விட்டர் பக்கத்தில் அர்ஜூன் சம்பத்தை கிண்டல், நையாண்டி செய்யும் வகையில் பதிவுகள் வெளியிடப்பட்டு வருகின்றன. அந்த பதிவுகளை ஸ்கிரீன்ஷாட் எடுத்து ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் பகிரும் போது, பலரும் அது உண்மை என்று எண்ணி பகிர்வதைக் காண முடிந்தது. பலரும் உண்மையில் இந்த பதிவுகளை அர்ஜூன் சம்பத்தான் வெளியிட்டார் என்று கருதி அவரை மென்டல் என்று திட்டிக்கொண்டிருந்தனர். எனவே, அவை உண்மையில் அர்ஜூன் சம்பத் வெளியிட்டது இல்லை என்று ஆதாரங்கள் அடிப்படையில் உறுதி செய்ய இந்த ஆய்வை செய்தோம்.

நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட ட்வீட் பதிவு வெளியாகி இருந்த ட்விட்டர் அக்கவுண்ட்டை கண்டெடுத்தோம். @Arjun_sampath_ என்ற பெயரில் அந்த ட்விட்டர் அக்கவுண்ட் உருவாக்கப்பட்டிருந்தது. அர்ஜூன் சம்பத் படம் எடிட் செய்யப்பட்டு அவருக்கு கண்ணாடி, மீசை, தாடி வைக்கப்பட்டிருந்தது. சுய விவர குறிப்பில் “Satire” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அதாவது இது நையாண்டி பக்கம் என்று தெளிவுபடுத்தியுள்ளனர். ஆனால், இவை எதுவும் இல்லாமல் ட்வீட் ஸ்கிரீன்ஷாட்டாக பார்ப்பவர்களுக்கு எது உண்மை எது பொய்யானது என்று தெரியாமல் போய்விடுகிறது. அர்ஜூன் சம்பத்தின் ட்விட்டர் பக்கத்தை பார்த்தோம். அதன் முகவரி @imkarjunsampath என்பதாகும். 

Archive

@Arjun_sampath_ என்ற ட்விட்டர் பக்கத்தில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவுகள் இருந்தன. இன்னும் அதிக நையாண்டி பதிவுகள் அதில் வெளியாகி இருந்தன. அவற்றையும் பலரும் சமூக ஊடகங்களில் அர்ஜூன் சம்பத் கூறினார் என்று குறிப்பிட்டு பகிர்ந்து வருவதைக் காண முடிந்தது.

நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட ட்வீட் பதிவு உண்மையில் அர்ஜூன் சம்பத் வெளியிட்டது இல்லை. யாரோ அர்ஜூன் சம்பத்தை கிண்டல் செய்யும் நோக்கில் போலியாக ட்விட்டர் கணக்கை ஏற்படுத்திப் பதிவிட்டு வருவது உறுதியாகி உள்ளது. இதன் அடிப்படையில் இந்த பதிவுகள் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

ரம்ஜான் பெயர் காரணம் மற்றும் டெலிவரி பாயை டெலிவரி இந்து என்று அழைக்க வேண்டும் என்று அர்ஜூன் சம்பத் கூறியதாக பரவும் ட்வீட்கள் போலியானவை என்பதை ஃபேக்ட் கிரஸண்டோ உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:‘டெலிவரி இந்து’- அர்ஜூன் சம்பத் பெயரில் தொடர்ந்து பரவும் விஷம பதிவுகள்!

Fact Check By: Chendur Pandian 

Result: False